மேலும் அறிய

Today Rasipalan September 22: சிம்மத்துக்கு சுபம்...மகரத்துக்கு நிம்மதி..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan September 22: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 22.09.2023 - வெள்ளிக் கிழமை 

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல்  காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

 மேஷம்

உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  ஒப்பந்தப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.

ரிஷபம்

மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். அசதிகள் நிறைந்த நாள்.

மிதுனம்

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாக அமையும். நீண்ட நாள்  கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சுபகாரிய செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விரயம் நிறைந்த நாள்.

சிம்மம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்குத் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.

கன்னி

தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். கவலை குறையும் நாள்.

துலாம்

பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மனை தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்

புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

தனுசு

முன்கோபத்தால் சிலரின் நட்புகளை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதை விட சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மகரம்

செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

மீனம்

கலைநயம் மிகுந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். குடும்ப பெரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget