Rasi Palan Today, Sept 08: சிம்மம் குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள், கன்னிக்கு சாகசங்களில் மனம் செல்லும். - இன்றைய ராசிபலன்!
Rasi Palan Today, September 08: செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 08, 2024:
இன்றைய தினத்தில் சந்திரன் துலாத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் இந்த வேலையில் உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம்...
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு குருவும் சாதகமான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சந்திரனும் கேந்திரங்களில் பயணித்துக் கொண்டிருக்க நினைத்தது நடைபெறும் நாள். செய்யும் காரியங்களில் கவனம் தேவை ஆனால் வெற்றி கிடைக்கும். வேலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது.. பழைய சிந்தனையில் மூழ்குவீர்கள்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பலம் பொருந்திய நாள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.. வாழ்க்கை மீது நல்ல நம்பிக்கை பிறக்கும். காரண காரியங்களோடு சிலவற்றை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மதியத்திற்கு பிறகு நாள் சிறப்பாக அமையும்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே ஏற்றம் இறக்கம் சேர்ந்து கலவையாக நடைபெறும் நாள். உங்களை நம்பி உயர் அதிகாரிகள் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நேரம் பார்க்காமல் உழைப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியம் நல்லபடியாக அமையும். எதற்காக நீங்கள் வாழ்கிறீர்களோ அதைப்பற்றி நான் சிந்தனை மேலும். . பல திடீர் சந்திப்புகள் ஏற்படலாம்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பயணங்கள் மேற்கொள்ளும் நாள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திப்பீர்கள்.. குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான காலம். சுப விரயங்கள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்தமாக இருந்தாலும் பின்பு நல்ல வெற்றியைக் கொடுக்கும்.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு வீட்டை பராமரிப்பதற்காக நேரத்தை செலவிடுவீர்கள். சாகசங்களில் மனம் செல்லும். மற்றவர்கள் உங்களைப் பற்றி உயர்வாக எண்ணுவார்கள். யாரிடமும் எதற்காகவும் எதிர்பார்த்து நிற்கும் நிலைமை வராது. புதிய காரியங்களில் ஈடுபட மனம் செல்லும்..
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே சந்திரன் பயணிப்பதால் மனம் புத்துணர்ச்சி அடையும் அதே வேளையில் பழைய வாழ்க்கையைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்க வாய்ப்புண்டு.. நண்பர்களுடன் நேரம் செலவழி அதற்கான காலம்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்குள் சந்திரன் நுழையப் போகிறார் மனது ஒருவேளை படபடப்பாக இருந்தால் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசாமல் சற்று மௌன விரதம் இருப்பது நல்லது. உங்களிடமிருந்து வரும் வார்த்தைகளை பயன்படுத்தி உங்களுக்கு எதிராக சிலர் திருப்ப பார்ப்பார்கள். ஆனால் உங்களை அவ்வளவு எளிதில் யாராலும் அசைத்து விட முடியாது.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பட்டம் பதவிகள் தேடி வரும் நாள். அரசு வழியில் ஆதாயம் உண்டு. பணம் நிறைய ஆனாலும் சுப விரயமாக தான் மாறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுறுசுறுப்பு கூடும் நாள்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு உயர் பதவியில் இருப்பவர்கள் உங்களை தேடி வருவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மற்றவர்களை காட்டிலும் நீங்கள் வேலையில் ஒரு படி முன்பாக இருப்பது அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தலாம் ஆனால் வெற்றி உங்கள் பக்கம்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பழையன கழிதல் புதியன புகுதல் என்பது போன்ற புதிய பல காரியங்களை செய்வீர்கள். உறவினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று இருப்பவர்களுக்கு ஏற்ற நாள். . எதிர்காலம் குறித்தான கவலை ஏற்படும் .
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு படிப்படியாக சந்திராஷ்டமம் விலகி இரவுக்கு மேல் நல்ல நிலைக்கு மீண்டு வருவீர்கள். அழுத்தமாக இருந்த காரியங்கள் கூட இரவுக்கு மேல் இலகுவாக மாறும் அதுவரை யாரிடமும் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். உங்களைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள ஏற்றமான காலகட்டம்.