மேலும் அறிய
Rasi Palan:மிதுனத்துக்கு கடன் கிடைக்கும்; கடகத்துக்கு நல்ல காலம் - இன்றைய ராசிபலன்!
Rasi Palan Today, September 07: செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்
Source : abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 07, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய தினத்தில் சந்திரன் துலாத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்...
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். மற்றவர்கள் செய்கின்ற வேலையை விட நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். இடமாற்றம் தொழில் மாற்றத்தை பற்றி சிந்திக்க கூடிய நேரம்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பக்தியின் நாளாக இன்று செல்ல போகிறது. யார் உங்களைப் பற்றி என்ன குறை கூறினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடியே கடந்து செல்வது உங்களின் இயல்பு. மற்றவர்களுக்கு உபதேசம் வழங்குவீர்கள். ஒருவேளை எப்படி செய்ய வேண்டும் என்பதை உங்களை பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். பழைய நினைவுகளில் சற்று மூழ்குவீர்கள்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம். வருமானம் உயர்வதற்கான வழியை பார்ப்பீர்கள். உங்களைப் பற்றி குறை கூறுபவர்களை கவலைப்படாமல் எதிர் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே நல்ல காலம் வந்து கொண்டிருக்கிறது. புதிய புதிய முயற்சிகளில் வெற்றி அடையப் போகிறீர்கள். அதற்கான திட்டங்களை தற்போதைய தீட்டுவீர்கள். எதிர்காலம் குறித்தான பயம் இருக்கும். கவலை வேண்டாம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக தான் வரும்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நாளில் சந்திரன் பயணிப்பது மிகுந்த ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும் குறிப்பாக சுப விரயங்கள் உங்களுக்கு ஏற்படலாம். பழைய வாகனம் கொடுத்து புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு. வீடு அல்லது வாகனம் மூலம் ஏதேனும் செலவு வந்தால் கவலை வேண்டாம், சுபச் செலவுகள் இருக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் நேரம். வருமானம் உண்டு.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மற்றவர்கள் உங்களைப் பற்றி புகழ்ந்து பேசுமா. நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். வம்பு வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் மீது ஏதேனும் வழக்குகள் இருந்தால் அதை சட்டப்படி சமாளித்து உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை நிரூபிப்பீர்கள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு ஏதோ ஒரு பாதை அமைப்பீர்கள்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திரன் சென்று கொண்டிருப்பதால் மனது மகிழ்ச்சியாக இருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். அழகு கூடும். பிடித்தவருடன் நேரம் செலவிட கூடிய காலகட்டம். திருமண பேச்சுவார்த்தையில் நல்லபடியாக முடியும். உற்சாகம் பெருகும்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு கேட்டது கிடைக்கும் தொட்டது தொடங்கும் நாள். பெரிய பாதிப்பில் இருந்து தப்பிப்பீர்கள். . சில காரியங்கள் உங்கள் கைவிட்டுப் போனாலே அது உங்களுக்கு நல்லது என்று எடுத்துக் கொள்ளுங்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்றமும் இறக்கமும் கலந்த நாளாக அமையும் காலை சற்று சோர்வாக காணப்பட்டாலும் மதியத்திற்கு மேல் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சற்று ஓய்வு எடுக்க மனம் விரும்பும். நிம்மதியான நாள்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு. பொறுமைத் தேவைப்படும் நாள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். தாயாரின் உடல்நிலை தேடி வரும். . வீடு நிலம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். உங்களை குறைத்து மதிப்பீடு வருபவர்களுக்கு முன்பாக நீங்கள் நிமிர்ந்து நிற்பீர்கள்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு புகழ் கூடும் நாள். மற்றவர்களின் வேலையும் நீங்கள் இழுத்து போட்டு செய்ய வேண்டி வரும். மதியத்திற்கு மேல் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். ஆனால் உற்சாகம் குறையாது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பீர்கள். எதிர்கால திட்டங்களை தீட்டுவதற்கான ஏற்ற நாள்.
மீன ராசி
அன்பார்ந்த மீனராசி அவர்களே உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பெரிய கமிட்மென்ட் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். மௌன விரதம் இருப்பது சாலச்சிறந்தது.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
கோவை
Advertisement
Advertisement