மேலும் அறிய
Rasipalan Today Oct 29: மீனத்துக்கு பிரச்னைகள் தீரும்; மேஷத்துக்கு மகிழ்ச்சி செய்தி வரும்- உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, October 29: அக்டோபர் மாதம் 29ஆம் நாள் செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
![Rasipalan Today Oct 29: மீனத்துக்கு பிரச்னைகள் தீரும்; மேஷத்துக்கு மகிழ்ச்சி செய்தி வரும்- உங்கள் ராசிக்கான பலன்? Rasi palan today tamil 2024 October 29th daily horoscope12 zodiac signs astrology Rasipalan Today Oct 29: மீனத்துக்கு பிரச்னைகள் தீரும்; மேஷத்துக்கு மகிழ்ச்சி செய்தி வரும்- உங்கள் ராசிக்கான பலன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/28/3a41f2ff3753996d2b169ae8a0838e8a1730135455880572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராசிபலன்
Source : abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 29, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். எதிர்பாலின மக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மறதி விலகும் நாள்.
ரிஷப ராசி
கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
மிதுன ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
கடக ராசி
செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக்கொடுத்துச் செயல்படவும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சோதனை நிறைந்த நாள்.
சிம்ம ராசி
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.
கன்னி ராசி
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். உத்தியோக நெருக்கடிகள் மறையும். குழப்பம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். ஊக்கம் வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
வியாபாரப் பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சபை பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
தனுசு ராசி
வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஈடேறும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். நலம் நிறைந்த நாள்.
மகர ராசி
வியாபாரப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். தந்தையிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். தொலைதூர பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
கும்ப ராசி
பணிபுரியும் இடத்தில் சில அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். குழப்பத்தால் பணிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி செயல்களில் அலைச்சல் ஏற்படும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணம் நிறைந்த நாள்.
மீன ராசி
உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion