மேலும் அறிய

Rasipalan: சிம்மத்துக்கு சமாளிக்கும் நாள்; கன்னிக்கு அமைதி.. முழு ராசி பலன் இதோ!

Today Rasipalan: மே மாதம் 26ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 26.05.2024 

கிழமை: ஞாயிறு 

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கலைப் பணிகளில் அலட்சியங்களுடன் செயல்படுவதை தவிர்க்கவும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வழியில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். பகை மறையும் நாள்.

ரிஷபம்

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் வழியில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மறதி நிறைந்த நாள்.

மிதுனம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நவீனப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தடைகளை முறியடித்து நினைத்த செயலை முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். சினம் விலகும் நாள்.

கடகம்

உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதை உருத்திய சில கவலைகள் மறையும். குடும்பத்தில் இருந்துவந்த சிக்கல் குறையும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் காரிய அனுகூலம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

சிம்மம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தெளிவுகள் பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். வீடு, மனை விற்பதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பெருமை மேம்படும் நாள்.

கன்னி

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய வேலைக்கான உதவிகள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். வெளி வட்டார தொடர்புகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

துலாம்

இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாக அமையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த சில தெளிவான முடிவுகள் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். செயல்களில் அறிவாற்றல் வெளிப்படும். முக்கியமான விவகாரத்தில் முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.

மகரம்

திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் உண்டாகும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களில் மிதவேகம் நல்லது. வேலையாட்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இன்பம் நிறைந்த நாள்.

கும்பம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

மீனம்

மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். திடீர் பயணங்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். மக்கள் சேவையில் கவனம் அதிகரிக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget