Today Rasipalan: ரிஷபத்திற்கு நண்பர்கள் வழியில் மகிழ்ச்சி; கடகத்துக்கு மாற்றம் - உங்கள் ராசிக்கான பலன்கள்!
Today Rasipalan: மே மாதத்தில் முதல் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 1.05.2024
கிழமை: புதன்
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
உறவினர்களிடத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடிவரும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் காரிய அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
மிதுனம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். வியாபார ஒப்பந்தங்களில் காலதாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வித்தியாசமான கனவுகளால் குழப்பம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்பு உயரும். மாற்றம் நிறைந்த நாள்.
சிம்மம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் சென்று வருவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
கன்னி
குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பிற மொழி பேசும் மக்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வேலையாட்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணி நிமிர்த்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். சிக்கல் மறையும் நாள்.
துலாம்
ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். மனை விருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
தனுசு
உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தனவருவாயில் இருந்துவந்த ஏற்ற, இறக்கமான சூழல் குறையும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மகரம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தனவருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தெய்வீக காரியங்களில் மனம் ஈடுபடும். இயந்திரப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதில் மாற்றம் பிறக்கும். மனக்கவலை விலகும் நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்கள் செல்வதற்கான சூழல் ஏற்படும். உறவினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். நயமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். எதிர்ப்பு குறையும் நாள்.
மீனம்
மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஆர்வம் மேம்படும் நாள்.