Today Rasipalan March 01: கன்னிக்கு புலமை; துலாமுக்கு வரவு - இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Today Rasipalan: மார்ச் 1ஆம் தேதி வியாழன்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 01.03.2024 - வியாழன்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.
ரிஷபம்
உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசியல் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். செலவு நிறைந்த நாள்.
மிதுனம்
வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
கடகம்
நினைத்த சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் உயர்வு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.
கன்னி
பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நவீன சாதனங்கள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்குண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். புலமை வெளிப்படும் நாள்.
துலாம்
உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆவணம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். பற்கள் தொடர்பான இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தேடல் நிறைந்த நாள்.
தனுசு
எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கமிஷன் சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். கோபம் மறையும் நாள்.
மகரம்
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வேலையாட்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். பகை மறையும் நாள்.
மீனம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். நிறை, குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.