Rasipalan: கன்னிக்கு மதிப்பு, சிம்மத்துக்கு கவனம்- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Today Rasipalan: ஜூலை மாதம் 2 ஆம் நாள் செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 02.07.2024
கிழமை: செவ்வாய்
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை
குளிகை:
பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
எமகண்டம்:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். செலவுகளை குறைப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரைகுறையாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றம் விலகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். ஓய்வு நேரமின்றி பணியாற்ற வேண்டிய சூழல் உண்டாகும். வெளி உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும். எடுத்த காரியங்களை விவேகத்தோடு செய்து முடிக்கவும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.
மிதுனம்
மறதியால் சில நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் ஒருவிதமான மந்தநிலை உண்டாகும். சகோதரிகளின் சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகளால் சஞ்சலம் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.
கடகம்
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். கவலைகள் மறையும் நாள்.
சிம்மம்
இணைய வர்த்தகங்களில் நிதானத்தோடு செயல்படவும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிறு வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கவனம் வேண்டிய நாள்.
கன்னி
வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மிக காரியங்களை முன்நின்று செய்வீர்கள். கடன் சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். மாற்று மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். தெளிவு பிறக்கும் நாள்.
துலாம்
பயணங்களின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். இறை பிரார்த்தனைகள் மன அமைதியை தரும். பழக்கவழக்கங்களால் சில சிக்கல்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை பகிராமல் இருக்கவும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்ப்பு குறையும் நாள்.
விருச்சிகம்:
எதிலும் விவேகத்தோடு செயல்படவும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட கட்டிட பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். எதிர்காலம் நலன் கருதி சில முதலீடுகளை மேற்கொள்வீர்கள். சேமிப்புகள் மூலம் சில நெருக்கடிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
தனுசு
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். செயல்களில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்புகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் வழியில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
மகரம்
மனதில் உள்ள சஞ்சலங்களால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்திற்கான முதலீடுகளை ஏற்படுத்துவதில் தாமதம் உண்டாகும். நெருங்கிய உறவுகளிடம் அனுசரித்துச் செல்வது மேன்மையை ஏற்படுத்தும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. மறதி விலகும் நாள்.
கும்பம்
மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பெரியோர்களிடம் சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
மீனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். அதிரடியான திட்டங்கள் மூலம் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் ஏற்படும். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.