Rasipalan: கும்பத்துக்கு இரக்கம், மீனத்துக்கு இன்பம் - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Today Rasipalan: ஜூலை மாதம் 17ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 17.07.2024
கிழமை: புதன்
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
சமூகத்திலிருந்து தனித்து இருப்பதற்கான சூழ்நிலை அமையும். செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களால் விரயம் உண்டாகும். ஏற்ற, இறக்கமான நாள்.
ரிஷபம்
பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்பு கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பங்கு வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கடகம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். மேல்நிலை கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். தடைகள் மறையும் நாள்.
சிம்மம்
உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பயணத்தில் மிதவேகம் நல்லது. கூட்டு வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.
கன்னி
மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியவை ஈடேறும். சொத்து விற்பது, வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
துலாம்
உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனை விற்பனையில் லாபம் ஏற்படும். பந்தய விஷயங்களில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆவணம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.
தனுசு
வாக்கு சாதுரியம் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.
கும்பம்
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.
மீனம்
வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். காப்பகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.