மேலும் அறிய

Rasipalan: கும்பத்துக்கு தெளிவு, மீனத்துக்கு லாபம்- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

Today Rasipalan: ஜூலை மாதம் 11ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 11.07.2024 

கிழமை:  வியாழன்

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

இராகு:

பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பொதுநல செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

ரிஷபம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான பயணங்கள் கைகூடும். மேற்கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிதுனம்

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். சக பணியாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கல்வி கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். தாயிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.

கடகம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன்,  மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.

சிம்மம்

வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

கன்னி

தோற்றப் பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பம் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். தனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

தனுசு

எண்ணிய பணிகளை அலைச்சல்களுக்குப் பின்பு செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிறுதூர பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். மனை மற்றும் வாகன விருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

வர்த்தக பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய தேடல் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

கும்பம்

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் உண்டாகும். பங்குதாரர்களால் சில விரயம் ஏற்படக்கூடும். தெளிவு பிறக்கும் நாள்.

மீனம்

சுப காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். பக்குவமான பேச்சுக்கள் காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புரிதல் உண்டாகும். போட்டி செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வர்த்தக முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். சகோதரிகள் வழியே ஆதாயம் உண்டு. லாபம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Embed widget