மேலும் அறிய

Today Rasipalan: தனுசுக்கு பொறுமை தேவை; விருச்சிகத்துக்கு மேன்மை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஏப்ரல் 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 28.04.2024 

கிழமை: ஞாயிறு

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அளவுடன் இருக்கவும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள். 

ரிஷபம்

பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் உண்டாகும். மறைமுகமான சில தடைகளால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், அலைச்சலும் உண்டாகும். உயர் கல்வி குறித்த செயல்பாடுகளில் பொறுமை காக்கவும். மனதில் வித்தியாசமான கற்பனைகள் மேம்படும். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 

மிதுனம்

தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.   

கடகம்

திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.   

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பொன், பொருட்சேர்க்கை குறித்த எண்ணம் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.   

கன்னி

ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தில் மிதவேகம் நல்லது. சமூகப் பணிகளில் தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில்  ஆதாயம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.   

துலாம்

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.   

விருச்சிகம்:

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தினர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்நிலை கல்வியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில தனவரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். அடமானப் பொருட்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.   

தனுசு

எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை உண்டாகும்.  பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மற்றவரை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் பற்றிய கவலை அதிகரிக்கும். வியாபாரத்தில் இடமாற்றம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.   

மகரம்

தந்தை வழி உறவினர்களால் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். தான, தர்மம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குடியுரிமை பிரச்சனைகளால் விரயம் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள். 

கும்பம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.  

மீனம்

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வீடு பராமரிப்பு தொடர்பான பணிகள் நிறைவேறும்.  சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
Embed widget