மேலும் அறிய

Today RasiPalan: கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!

Today Rasipalan: ஏப்ரல் 18ஆம் தேதி வியாழக்கிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 18.04.2024 -

கிழமை: வியாழன்

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள்.  வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும்.  சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மனதளவில் புதிய இலக்குகள் பிறக்கும். பெருமை நிறைந்த நாள்.

ரிஷபம்

சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் கைகூடிவரும். புதிய பங்குதாரர்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உழைப்புக்குண்டான மதிப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

மிதுனம்

பேச்சுத்திறமையின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். செலவு நிறைந்த நாள்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். சில நினைவுகளால் மனதில் ஒருவிதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.

கன்னி

எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின் நிறைவேறும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மத்தியமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஆக்கப்பூர்வமான நாள்.

துலாம்

மனதில் முன்னேற்றத்திற்கான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணிபுரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். வெற்றி பிறக்கும் நாள்.

விருச்சிகம்:

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை தரும். வருவாய் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

தனுசு

பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் விலகும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செயல்படுவதன் மூலம் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமிர்த்தமான சில ஆலோசனைகள் கிடைக்கும். தர்ம காரியங்களின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

மகரம்

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிராமல் இருப்பது நல்லது. நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் காலதாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் நன்மை உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

கும்பம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.  வேலையாட்கள் இடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சக ஊழியர்களின் ஆதரவால் திட்டமிட்ட காரியங்கள் நிறைவுபெறும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

மீனம்

தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். வித்தியாசமான செயல்பாடுகளால் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். நிதானம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget