மேலும் அறிய

Rasipalan : விருச்சிகத்துக்கு நிறைவு.. சிம்மத்துக்கு மாற்றம்.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்..

RasiPalan Today October 19: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 19.10.2022

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் தன்னம்பிக்கை மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஆலோசனைகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். சிறு தொழில் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பத்திரம் சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். ஆரம்ப கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கனிவான பேச்சுக்களால் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கழுத்து தொடர்பான இன்னல்கள் குறையும். தடைகள் குறையும் நாள்.

மிதுனம்

புதிய கலைகளை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பழக்கவழக்கம் சார்ந்த விஷயங்களில் மாற்றம் ஏற்படும். பேச்சுத்திறமையின் மூலம் லாபம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.

கடகம்

உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலகி சென்றவர்களை காண்பதற்கான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் பொருள் ஆதாயம் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

சிம்மம்

எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். செய்கின்ற செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

கன்னி

மனதில் உத்வேகமான சிந்தனைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

துலாம்

வாகன மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். விவசாய பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

விருச்சிகம்

வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நிறைவான நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியிடங்களில் உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மகரம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைத்து கொள்வீர்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவியின் மூலம் இழுபறியான பணிகள் நிறைவுபெறும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய யுக்திகளால் லாபம் மேம்படும். எண்ணிய சில பணிகளை மாற்றமான அணுகுமுறையின் மூலம் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

மீனம்

தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் பிறக்கும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். விரயம் நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Trump Russia Ukraine: என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Embed widget