Rasipalan Today Jan 16: துலாமுக்கு விவேகம்... மகரத்துக்கு பாராட்டு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!
Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நல்ல நேரம்:
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் மற்றும் தொடர்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வேலை நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.
மிதுனம்
தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் வியாபார பணிகளில் மேன்மைகளை உருவாக்குவீர்கள். செலவுகள் நிறைந்த நாள்.
கடகம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் நிமிர்த்தமான தொடர்புகள் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
சிம்மம்
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தடைகள் விலகும் நாள்.
கன்னி
நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகளை அளிக்கும் முன் சிந்தித்து செயல்படவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
துலாம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றமான சூழல் ஏற்படும். காணாமல்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
விருச்சிகம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர் வகையில் நன்மைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் தனவரவு மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். முயற்சிகள் வேண்டிய நாள்.
மகரம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். துறை நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
கும்பம்
வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் செல்லும் சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைகள் விலகும் நாள்.
மீனம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.