மேலும் அறிய

Rasi Palan Today, August 16: கடகத்துக்கு அலைச்சல்...தனுசுக்கு கவனம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன?

Rasi Palan Today, August 16: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 16.08.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை

மதியம் 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மாலை 1.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.

மிதுனம் : 

மிதுன ராசி நேயர்களே,

முயற்சிகளுக்கு உண்டான பாராட்டும், மதிப்பும் கிடைக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணியில் வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

தந்தைவழி உறவினர்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். விலகி சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். செயல்பாடுகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். குழப்பம் நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வித்தியாசமான, இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு மறையும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தனம் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சூழ்நிலைகளை சமாளித்து சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்கிறீர்கள். கற்றல் திறனில் மாற்றம் உண்டாகும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நபர்களின் தன்மையை அறிந்து பொறுப்புகளை கொடுக்கவும். மதிப்பு மேம்படும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமயோசித செயல்பாடுகளின் மூலம் சூழ்நிலைகளை கையாளுவீர்கள். சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

மனைவி வழியில் தொழில் சார்ந்த ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

உத்தியோக பணிகளில் மறைமுக ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Embed widget