Rasi Palan Today, 15 July 2022 : கன்னிக்கு நிம்மதி...! விருச்சிகத்துக்கு அலைச்சல்..! அப்போ உங்க ராசிக்கு எப்படி..?
Rasi Palan Today, 15 July 2022 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 15.07.2022
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.15 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மாலை 6.30 மணி மதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
குளிகை :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
எமகண்டம் :
மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை
சூலம் – மேற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே,
இந்தநாள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள். நம்பிக்கை அதிகரிக்கும். புதிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூலாகும். மங்கலப் பேச்சுக்கள் உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு மன அமைதி கிட்டும். நீண்ட நாள் நீடித்து வந்த குழப்பங்கள் அகலும். குடும்பத்தில் நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உடல்நலம் சீராகும். நண்பர்கள், சுற்றத்தாரிடம் நீடித்து வந்த பகை முடிவுக்கு வரும். வாகனப்பிரச்சினை தீரும். பெற்றோர்கள் - பிள்ளைகள் மனக்கசப்பு நீங்கும். ஆலய வழிபாடு அமைதியை தரும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிட்டும். எதிர்பாராத இன்பங்கள் வாழ்வில் நடக்கும். காதல் கைகூடும். சகோதரர்கள் வழி சங்கடங்கள் தீரும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு மிகவும் அருமையான நாள் ஆகும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு பெருமை சேரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கி பொறுமை காப்பீர்கள். வாகன யோகம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் நீடித்து வந்த பகைகள் அகலும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும். விளையாட்டு வீரர்களுக்கு அருமையான நாளாக இருக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு நிம்மதியான நாள் ஆகும். நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள், தொழிலில் பாராட்டு கிட்டும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவார்கள். அதனால் பெரிதும் அவர்களிடம் சொந்த விவகாரங்களை பகிரக்கூடாது. நம்பிக்கை அதிகரிக்கும். காசி விஸ்வநாதர் அருள் கிட்டும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். நீண்ட வருடங்களுக்கு பிறகு முக்கியமான நபரின் சந்திப்பு கிட்டும். காதல் திருமணத்தில் முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவார்கள். கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை தீரும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,
இந்த நாள் மிகவும் அலைச்சலான நாளாக அமையும். சுபகாரியங்களுக்கு கடும் அலைச்சல் ஏற்படும். ஆனாலும், ஆதாயமான அலைச்சலாக அது அமையும். சுபகாரியங்களில் நீடித்து வந்த தடை அகலும். பெற்றோர் உடல்நலம் சீராகும். நெடுந்தூர பயணத்தை ஒத்திவைப்பது நல்லது. விநாயகப் பெருமானை வழிபட்டால் நன்மை நடக்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே,
இந்த நாள் பணவரவு உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் . தொலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும். பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவை. பொறுமையாக செயல்படுவது நல்லது.
மகரம் :
மகர ராசி நேயர்களே,
உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் பதற்றமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே,
தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். துணிச்சலாக சில முடிவினை எடுப்பீர்கள். பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே,
சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோக பணியில் இருப்பவர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்