Rasipalan: மகரத்துக்கு மகிழ்ச்சி... கும்பத்துக்கு ஆதரவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today April 12: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 12.04.2023 - புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
எதிர்பார்த்த சில பணிகள் நிறைவுபெறுவதில் தாமதம் உண்டாகும். தனம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் இறை வழிபாடு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
மிதுனம்
மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
கடகம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவேறும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஆசை உண்டாகும் நாள்.
சிம்மம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். செலவுகள் நிறைந்த நாள்.
கன்னி
பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் அமையும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
துலாம்
மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
தனுசு
தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தனவரவு உண்டாகும் நாள்.
மகரம்
மனதில் இனம்புரியாத ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றும். மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக்காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதிய கண்ணோட்டம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் வருகையால் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.
மீனம்
விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். செய்கின்ற செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். போட்டிகள் நிறைந்த நாள்.