Rasi Palan Today: நினைத்தது நடக்காது... நினைக்காததும் நடக்கும்... எந்தெந்த ராசிக்கு இன்று உச்சம்... யாருக்கு அச்சம்?
Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 22 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!
நல்ல நேரம்:
காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
இரவு - 9:30 மணி முதல் 10:30 மணி வரை
பகல்- 9மணி முதல் 10:30 மணி வரை
குளிகை:
பகல் 6 மணி முதல் 7:30 மணி வரை
எம கண்டம்:
மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை
சூலம், பரிகாரம்:
கிழக்கு , தயிர்
சந்திராஷ்டமம்:
அவிட்டம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
எடுத்த காரியத்தில் இன்று வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் பலன் தரும். முடிவுகள் சாதகமாக முடியும். நல்ல உற்சாகமாக பணி புரிவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அனைவரும் மகிழ்வுடன் பழகுவார்கள்.
ரிஷபம்:
வீண் கவலைகள் மனதில் குடியேறும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். கடன் செலுத்துவதில் இருந்த தாமதத்தால் நெருக்கடியை சந்திக்கலாம். உறவினர்கள் வகையில் பகை ஏற்படலாம்.
மிதுனம்:
வியாபாரத்தில் சிறு சறுக்கலை சந்திக்கலாம். கடன் நெருக்கடி ஏற்படலாம். இதனால் வீண் பயம் சூழ்ந்து கொள்ளும். கோபம் அதிகம் வரும். முடிந்த வரை வீண் வாதங்களை தவிர்க்கவும். தகராறு, வம்பு ,வழக்குகளுக்கு வாய்ப்பு உண்டு.
கடகம்:
தொழில், வியாபாரத்தில் சக போட்டியாளர்களின் நட்பு கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக நெருக்கடிகள் விலகிச் செல்லும். புதிய ஒப்பந்தங்களுக்கு நண்பர்கள் உதவ வாய்ப்புள்ளது. குடும்பத்தார், பெற்றோர் வழியில் பண உதவி கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.
சிம்மம்:
இன்று உங்கள் முயற்சிகள் , செயல்பாடுகளுக்கு பெரியஅளவில் தடைகள் இருக்கும். எதிர்ப்புகளை சந்தித்து தான், நினைத்ததை நிறைவேற்ற முடியும். பெற்றோர், குடும்பத்தார் உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும், உடன்பிறந்தவர்கள் ஆதரவு உண்டு. பண வரவு இருக்கும்.
கன்னி:
நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தாருடன் விருந்த உண்டு மகிழ்வீர்கள். வெளியூர், சுற்றுலா பயணங்கள் மனதிருப்தி தரும். போக்குவரத்தில் கவனம் தேவை. வீண் பண விரயம் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு பயன்தரலாம்.
துலாம்:
பம்பர் குலுக்க போன்ற மெகா பரிசுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முடிந்த வரை வீண் குழப்பங்களை தவிர்க்கவும். எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கலாம். புதிய பொருட்களை வாங்கும் குஷி எண்ணம் எல்லாம் மேலோங்கும்.
விருச்சிகம்:
நினைத்தது நடைபெற போகும் எண்ணத்தில் மகிழ்ந்திருப்பீர்கள். கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போகும். புதிய முயற்சிகள் பயனளிக்கும். செலவு இருக்கும். அது பயனுள்ளதாக அமையும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவீர்கள்.
தனுசு:
பண வரவு தாராளமாக இருக்கும். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்க்கவும். வாங்கி கடன்களை அடைத்து விடவும். குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும். வீண் அலைச்சலை தவிர்க்கவும். முடிந்தவரை குடும்பத்தாரிடம் வெளிப்படையாக இருக்கவும்.
மகரம்:
பெண்களால் தேவையற்ற சிக்கலை சந்திப்பீர்கள். குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற கடுமையாக போராடுவீர்கள். முடிந்தவரை நண்பர்களிடம் விலகி இருங்கள். தேவையற்ற ஜாமினுக்கு செல்ல வேண்டாம். கையெழுத்து விவகாரங்களில் கவனம் தேவை.
கும்பம்:
உங்கள் முடிவுகள் கடும் எதிர்ப்பை சந்திக்கும். கீழ் பணிபுரிபவர்கள் ஒத்துழைக்க மறுக்கலாம். உங்கள் உயர்அதிகாரிகளின் பகையை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தாலும் உங்கள் முடிவுகளுக்கு எதிர்ப்பு வரலாம். ஆனால் அதை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு இருக்கும்.
மீனம்:
தொழில் போட்டி கடுமையாக இருக்கும். போட்டியை சமாளிக்க கூடுதல் செலவு ஏற்படலாம். ஆன்மிக பலத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். தொலைபேசி வழி நல்ல தகவல்கள் வரலாம். புதிய உறவுகள் சேரலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்