Rahu Ketu Peyarchi 2023: “ராகு கேது பெயர்ச்சி” .. 2025-ஆம் ஆண்டு வரை ராஜயோகம் பெறப்போகும் இரண்டு ராசிகள்..!
Rahu Ketu Peyarchi 2023 Palan: ராகு மற்றும் கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரிப்பது வழக்கம்.
ராகு கேது பலன்களை கணித்தவர் ஜோதிட ரத்னா தனுசு ஷாம்
ராகு கேது பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு பஞ்சாங்கம்படி, அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்றது. ராகு மற்றும் கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரிப்பது வழக்கம். இதனால் சில ராசியினருக்கு பெரியளவில் முன்னேற்றமும், அதிர்ஷ்ட பலனும் கிடைக்கும். அதனைப் பற்றி காணலாம்.
பாசத்திற்குரிய மேஷ ராசி வாசகர்களே, லக்னத்தில் ராகு, இருந்து உங்களை கடந்த ஒன்றரை வருடமாக படாத பாடு படுத்தியிருப்பார். கீழ்காணும் பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நீங்கள் அனுபவித்து இருக்கீர்களா?
1. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை.
2. தவறான இடத்தில் மூதலீடு போட்டு பணத்தை இழந்த சோகம்.
3. நண்பர்கள் விரோதிகளாகியிருப்பார்கள்.
4. வீடு கட்டி பாதியிலேயே நின்று போயிருக்கும்.
5. வேலை ஸ்தலத்தில் அழுத்தம் அதிகமாகியிருக்கும் .
6.விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடக்கவும் வாய்ப்புள்ளது.
7. குழந்தை பேறு தாமதமாகியிருக்கும்.
8. பணத்தட்டுப்பாடால் அடுத்தவரிடமிருந்து கடன் வாங்கும் நிலை இருந்திருக்கும்.
அப்படி அனுபவித்து இருந்தால் இனி கவலை வேண்டாம். காரணம் வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சியில், மேலே சொன்ன அனைத்தும் மாறப்போகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது
அதாவது நீங்கள் புத்துணர்வு பெறப்போகிறீர்கள், உங்களுக்குள் இருந்து வந்த அழுத்தம் குறையப்போகிறது. உங்களை சரியாக புரிந்துகொள்ளாமல் இருந்த நண்பர்களும், உறவினர்களும் உங்களை நாடி வரப்போகிறார்கள். பணத்தட்டுப்பாடு நீங்கி வரவு தாராளமாக இருக்கப்போகிறது. விவாகரத்து வரை சென்ற தம்பதியர் ஒன்று கூடப்போகிறார்கள். அரசியல்வாதிகள் பணம் செலவு செய்து கட்சியில் முக்கிய பொறுப்புகளில் அமரப்போகிறீர்கள். வேலை செய்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளால் அலைச்சல் மிகுதியாக இருக்கும்.
சரியாக படிக்காத குழந்தைகள் பிடிப்பில் கவனம் செலுத்தப்போகிறார்கள். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல வரன் அமையப்போகிறது. சென்ற 18 மாதங்களில் சில ஏற்றங்களையும், பல இறக்கங்களையும் சந்தித்திருப்பீர்கள். இனி எல்லாம் ஏற்றமான காலக்கட்டம் தான். தொட்டது துலங்கும்.
வாழ்வில் ஏற்றம் இருந்தால், சில இறக்கங்களும் இருக்கத்தானே செய்யும். அந்த வகையில், நோயின் அறிகுறி எதாவது தென்பட்டால் மருத்துவரை உடனடியாக அனுகுங்கள். உங்களை எரிச்சலூட்டும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுப்பட்டால், அவர்களிடமிருந்து விலகியிருங்கள், காரணம் 6-ம் இடம் கேது, உங்களின் பிரச்சனையை பெரிதுபண்ணுவார். ஒரு பிரச்சனையில் இருதரப்பிலும் இருக்கும் நியாயத்தை விசாரித்து பின் ஒரு முடிவிற்கு வருவது நல்லது. 12-ல் ராகு, செலவு செய்யும் போது பார்த்து செய்வது நல்லது, வருகின்ற வரவை சேமிப்பது சிறந்தது. இந்த ராகு-கேது பெயர்ச்சி 90% நன்மையே செய்யப்போகிறது கவலை வேண்டாம்.
அதிர்ஷ்டமான எண்: 3,5,9
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை, சிகப்பு
வணங்க வேண்டிய தெய்வம் : துர்கை
கடக ராசி:
ஒரு கிரகம் அடித்தால் பரவாயில்லை, 9 கிரகங்களில் நான்கு பெரிய கிரகங்கள் அடித்தால் தாங்கவா முடியும்? உங்களை அடித்த கிரகங்கள் என்று கூறுவது தவறு, உங்களை செயல்படாமல் வைத்திருந்த கிரகங்கள் என்று கூற வேண்டும். ராகு-கேது-குரு-சனி .... இவர்கள் தான் அந்த நான்கு கிரகங்களும். உங்களுக்கு 10-ல் ராகு, 4-ல் கேது என கடந்த ஒன்றரை வருடத்தில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் என்ன என்பதை பார்ப்போம்...
1. வேலையில் இருக்கலாமா அல்லது அதை விட்டு,விட்டு வீட்டில் அமைதியாக அமர்ந்திருக்கலாமா? என்று யோசிக்கும் அளவிற்க்கு வேலையில் நெருக்கடி இருந்திருக்கும்,
2. உங்களில் சிலர் இருந்த வேலையை விட்டு வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்திருப்பீர்கள்.
3. வேலையை தேடியவர்களுக்கு பெரிய வேலை கிடைக்காமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
4. வாகனத்தின் மூலமாக பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பீர்கள்.
5.எதிர்காலம் என்னவாக முடியுமோ? என்ற பயம் உள்ளுக்குள் இருக்கும்.
6. கையில் காசு இல்லாமல் அடுத்தவரிடத்தில் கடன் வாங்கி செலவு செய்ய நேர்ந்திருக்கும்.
7. நிலம், இடம் தொடர்பான வழக்கை சந்தித்திருப்பீர்கள்.
8. இடம், வீடு பத்திரபதிவாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கும்.
9. வீட்டில் சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.
10. உயிரோடு இருந்து என்ன பயன் என்று கூடு சில கடக ராசி அன்பர்கள் நினைத்திருக்கக்கூடும்.
வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது. ஏற்றமான காலக்கட்டம், எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கப்போகிறது, வேலையில் இருந்த சுனக்கம் நீங்கி புதுதெம்பு பிறக்கப்போகிறது. புதிய வீடு, வாகனம் வாங்கப்போகிறீர்கள். மனதில் மகிழ்ச்சி பொங்கப்போகிறது, வழக்குகளில் இருந்து விடுதலையடையப் போகிறீர்கள். 9-ம் இடத்தில் ராகு, உங்களுக்கு வழிகாட்ட அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு வருவார்கள்.
எடுத்த காரியத்தில் ஜெயம். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். ஆன்மீக காரியங்களில் மனம் செல்லும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இல்லத்தரசிகளின் மதிப்பு மரியாதை, உறவினர்கள் மத்தியில் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடு பயனங்கள் சிறப்பாக அமையும். தடைப்பட்ட திருமணம் கைகூடி வரப்போகிறது. மழலை செல்வம் கிடைக்கப்போகிறது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கப்போகிறது.
இப்படி அனைத்தும் ஏற்றமாக இருக்கின்ற சூழ்நிலையில் கவனமாக இருக்க வேண்டிய சில, இடங்களைப்பற்றியும் தெரிந்துகொள்வோம். தந்தையின் உடல் நலனில் அக்கறை செல்லுத்த வேண்டி வரலாம். வாகனங்கள் திடீரென்று பழுதாகலாம். தம்பதிகளுக்குள் சில கருத்துவேறுபாடு வரலாம். வயிற்று உபாதை, கை கால் வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படலாம். மற்றப்படி உங்கள் ராசிக்கு 85% நன்மையே !!!
அதிர்ஷ்டமான எண்: 1,5,6
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்
வணங்க வேண்டிய தெய்வம் : அம்மன் வழிபாடு