மேலும் அறிய

Panguni Matha Rasi Palan 2023 : துலாம் முதல் மீனம் வரை.. பங்குனி மாதம் கைக்கொடுக்குமா? .. வாங்க பார்க்கலாம்!

Panguni Matha Rasi Palan: தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி எந்த ராசியினருக்கு எப்படி அமைந்துள்ளது என்பதை காணலாம்.

துலாம்

எதிலும் துல்லியமாகச் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே, சூரியன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் உயர் அதிகாரிகளின் மூலம் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனை மற்றும் வீடு நிமிர்த்தமான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

தேதி முதல் சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் நீங்கும். சனி சுக ஸ்தானத்தில் இருப்பதினால் ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். 

 பங்குனி 15ஆம் தேதி முதல் சனி புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் புராணங்களின் மீது ஆர்வம் ஏற்படும். புதிய கலை சார்ந்த முயற்சிகள் மேம்படும். ராகு களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். கேது ராசியில் இருப்பதினால் உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் ஆதரவை பெறுவீர்கள். 

வழிபாடு: பெருமாளை வழிபட ஆதரவு கிடைக்கும். 

விருச்சிகம்

சுறுசுறுப்பாகச் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே,சூரியன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். புதுவிதமான கனவு உண்டாகும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். 

கல்வி சார்ந்த பணிகளில் குழப்பம் ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். புதிய நபர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உங்களின் தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபார பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். புத்திசாலிதமான செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சனி சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

அலுவலக பணிகளில் மதிப்பு மேம்படும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்தி கொள்ளவும். ராகு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் உலகியல் வாழ்க்கையை பற்றிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் பழகும்போது கவனம் வேண்டும். கேது போக ஸ்தானத்தில் இருப்பதினால் வெளியில் உணவு உண்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். 

வழிபாடு : மாரியம்மனை வழிபட முன்னேற்றம் ஏற்படும். 

தனுசு 

தர்ம நெறிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே,சூரியன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். வெளிநாடுகளில் எதிர்பார்த்த குடியுரிமைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உறவினர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் வரவுகள் மேம்படும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு புரிதல் உண்டாகும். 

மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் நபர்களின் தன்மையை அறிந்து உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. குரு சுக ஸ்தானத்தில் இருப்பதினால் விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும்.

வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். ராகு புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கேது லாப ஸ்தானத்தில் இருப்பதினால் பெரிய மனிதர்களின் நட்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். 

வழிபாடு : பைரவரை வழிபட ஒத்துழைப்பு மேம்படும். 

மகரம்

நிதானமாக செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை உருவாக்கும் மகர ராசி அன்பர்களே, சூரியன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் உங்கள் மீதான அவப்பெயர்கள் நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செவ்வாய் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றங்கள் உண்டாகும்.

சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் வாகனத்தை சீர் செய்வீர்கள். மனை தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழல் ஏற்படும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். எதையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சனி ராசியில் இருப்பதினால் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதுவிதமான தோற்றப்பொலிவுடன் காணப்படுவீர்கள்.

பங்குனி 15ஆம் தேதி முதல் சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்

பதினால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ராகு சுக ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கால்நடை தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். கேது தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபார ரீதியாக வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். 

வழிபாடு : விநாயகரை வழிபட பிரச்சனைகள் குறையும். 

கும்பம்

சாணக்கியத்தனமாக செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, சூரியன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விவரங்கள் கிடைக்கும். சுபகாரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். செவ்வாய் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். 

 சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்ப நபர்களை பற்றிய புரிதல் ஏற்படும். குரு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் சாதுரியமான கருத்துக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சனி போக ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். 

பங்குனி 15ஆம் தேதி முதல் சனி ராசியில் இருப்பதினால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ராகு சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கேது பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய துறைகள் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

வழிபாடு : காளியம்மனை வழிபட புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

 

மீனம்

புதுமைகளை விரும்பி செய்யும் மீன ராசி அன்பர்களே, சூரியன் ராசியில் இருப்பதினால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவு பெறும். வாக்கு சாதுரியத்தின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதன் ராசியில் இருப்பதினால் உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் வாகன பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவேகத்துடன் செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்ப்புகளால் புதிய அனுபவம் கிடைக்கும். மறைமுகமான வரவுகள் மேம்படும். 

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குரு ராசியில் இருப்பதினால் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி போக ஸ்தானத்தில் இருப்பதினால் தடையாக இருந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். ராகு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கேது அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று செயல்படவும். விருப்பமில்லாத சில செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

வழிபாடு : சரஸ்வதி தேவியை வழிபட சிந்தையில் மாற்றம் பிறக்கும். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget