New Year Rasi Palan: 2024-ஆம் ஆண்டு! மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய 3 ராசிக்காரங்க நீங்கதான்!
New Year Rasi Palan 2024 in Tamil: 2024ம் ஆண்டு பலரது வாழ்வில் மாற்றத்தையும், ஏற்றத்தையும் தந்தாலும் கீழ்க்கண்ட ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்.
New Year Rasipalan 2024 : பிறக்கப்போகும் 2024ம் புத்தாண்டு பலரது வாழ்க்கையிலும் புதிய மாற்றங்களையும், ஏற்றங்களையும் கொண்டு வர உள்ளது. இந்த சூழலில் புத்தாண்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? என்பதை கீழே காணலாம்.
மிதுன ராசி :
2024 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கு அனைவரும் அற்புதமாக இருக்கிறது என்று கூறும்போது நான் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்ல காரணம். பெரிய பிரச்சினைகள் ஏற்பட போகிறது என்று கூறவில்லை. ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இந்த பதிவு. அடுத்த மாதம் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாபத்தில் அமர்ந்திருப்பது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை கொடுத்தாலும், நான்காம் வீட்டில் கேது தடுப்பது சற்று சிக்கல்களை உருவாக்கத்தான் செய்யும்.
முதலில் ராகு பற்றி பேசி விடுவோம். ஏனென்றால் அவரும் சர்ப்ப கிரகமாக இருப்பதால் பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் அவர் தொழில் ஸ்தானத்தை ஏதாவது கெடுப்பாரா? என்ற சந்தேகம் கூட எழுதலாம். நிச்சயமாக பத்தாம் இடத்தில் இருக்கும் ராகு தொழிலில் எந்தவிதமான சிக்கல்களையும் உருவாக்க மாட்டார். காரணம் என்னவென்றால் பத்தாம் வீடு குருவுடைய வீடாகி குரு உங்களுக்கு லாபத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். நிச்சயமாக எந்தவிதமான சிக்கல்களையும் உங்களுக்கு உருவாக்கி தரப்போவதில்லை.
அப்படி என்றால் நான்காம் இடத்தில் இருக்கும் கேது தான் உங்களுக்கு சிறு, சிறு பிரச்சனைகளை உருவாக்கப் போகிறார். ஏன் நான்காம் இடத்திற்கு அவ்வளவு முக்கியம் என்றால், அதுதான் உங்களின் வீடு. நீங்கள் வாழும் வீட்டைக் குறிக்கக் கூடிய பாவம் நான்கு. அந்த வீட்டில் கேது அமர்ந்து இருப்பின், உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து ஒரு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த உங்களுக்கு சற்று அந்த நம்பிக்கையை மட்டுப்படுத்த தான் செய்வார். ஏதோ சில காரணங்களுக்காக இடம், வீடு, மனை சார்ந்த பிரச்சனைகள் கொண்டு வருவார்.
அல்லது நீங்கள் செய்யும் தொழிலில் இருந்து வேறு ஒரு தொழிலுக்கு இடம் மாற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவார். இப்படியாக சில, சில பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள அடிக்கடி தொழில் மாறுவதை நிறுத்த வேண்டும் புதிய இடத்திற்கு போக வேண்டும் என்று எண்ணம் வைத்திருப்போர் சற்று அதை பரிசீலனை செய்ய வேண்டும். ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக அமைந்திருப்போம் நிச்சயமாக நல்ல தொழில் கிடைத்தால் நீங்கள் இடம் மாறலாம். தவறில்லை. மற்றபடி உங்களுடைய ராசிக்கு அனைத்தும் நன்றாகவே இருக்கிறது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு ஒன்று வேலை, தொழில். இரண்டாவது நீங்கள் இருக்கக்கூடிய இடம், ஓட்டுகின்ற வாகனம், வீடு, மனை போன்றவை .
சிம்ம ராசி :
2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல காலமாகத்தான் அமையும் ஆனால் இரண்டில் இருக்கும் கேது குடும்பத்திலும் மிக சம்பாதிக்கக்கூடிய பணத்திலும் சற்று சலசலப்பு ஏற்படுத்தப் போகிறார். குறிப்பாக 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்து தொழில் விஷயமாக சற்று இறங்கு முகத்தை கொடுத்தாலும் பெரியதாக ஒன்றும் உங்களை சேதப்படுத்த மாட்டார்.
இரண்டாம் இடம் என்பது தனஸ்தானம். நீங்கள் சம்பாதிக்கும் பணம் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் செலவு செய்தாக வேண்டும். பத்தாம் இடத்தில் குரு வருவதால் பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்று கூறுவதற்கேற்ப, தொழிலில் சிறு, சிறு தடைகளைக் கொண்டு வந்து உங்களுடைய சம்பாத்தியத்தை தன பாக்கியத்தை கேது பகவான் தடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரை வழிபடுவது சாலச் சிறந்தது. மற்ற விஷயங்கள் உங்களுக்கு ஏறுமுகமாகவே இருந்தாலும் தொழில் விஷயத்திலும் சம்பாதிக்கும் விஷயத்திலும் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி :
2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலம் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சிறு, சிறு பிரச்சனைகள் உங்களுக்கு அவ்வப்போது எழும்பலாம். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையலாம். கன்னி ராசிக்கு லக்னத்தில் இருக்கும் கேது நிச்சயமாக உங்களுடைய திருமண வாழ்க்கையில் சற்று சலசலப்பை உண்டாக்குவார். சின்ன விஷயத்தையும் பூதாகரமாக வெடித்து பெரிய விஷயமாக மாற்றுவார். சில கன்னி ராசி அன்பர்களுக்கு, திருமண வாழ்க்கையில் பெரிய முறிவு ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் கோர்ட், வம்பு வழக்கு என்று செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.
கேது ஒரு விதமான அமைதியான மனப்போக்கை உருவாக்கித் தருவார். நீங்கள் அக்டோபர் 30-ஆம் தேதிக்கு முன்பாக இருந்ததைப் போல அடுத்து வரக்கூடிய ஒன்றை ஆண்டுகளுக்கு இருக்கப் போவதில்லை. யாரேனும் வந்து உங்களிடத்தில் பேச்சுக் கொடுத்தால் கூட நீங்கள் அவ்வளவாக அவர்களிடத்தில் பழகாமல் சற்று மேலோட்டமாக தான் பழகுவீர்கள். காரணம் கேது பகவான் அவ்வளவு எளிதில் உங்களுடைய உடலை இயக்கி உங்களை அடுத்தவர்களிடத்தில் பழக விட மாட்டார்.
இதற்கு பரிகாரம் ஞாயிறுதோறும் காலை 6 மணியில் இருந்து ஏழு மணி வரை விநாயகர் கோவிலுக்கு சென்று மெய் தீபம் போடுவது. அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று செவ்வாய்க்கிழமை தோறும் காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை நீ தீபம் போடுவது போன்றவை தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது. இந்த ஒன்றரை வருட காலகட்டத்தில் யாரையும் நம்பி எதிலும் பணத்தைப் போட வேண்டாம். குறிப்பாக நண்பர்கள் கூறுகிறார்கள் இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அதை நம்பி நீங்கள் முதலீடு செய்தால் போட்ட பணம் திரும்பி வரவே வராது. எனவே திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது !!!