மேலும் அறிய

Dhanush Rasi Puthandu Palan: தனுசு ராசி அன்பர்களே! உங்கள் வாழ்க்கையை பொற்காலமாக மாற்றப்போகும் 2024

New Year Rasi Palan 2024 Dhanush Rasi: தனுசு ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு எப்படியிருக்கும் என்று கோதிடர் கணித்துள்ள பலன்களை காணலாம்.

 2024 - தனுசு ராசி வருட பலன் 

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  2023 ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு நன்மை பயக்கக்கூடிய மாதங்களாகவே இருந்திருக்கும் காரணம் 4-ம் வீட்டில் வக்கிரம் பெற்ற குரு பகவான் உங்களுடைய பத்தாம் வீட்டை பார்ப்பதால் நிச்சயமாக தொழில் முன்னேற்றம், தொழில் உங்களுக்கு சாதகமாக அமைதல், தொழிலில் சக ஊழியர்களால் பாராட்டப்படுதல் போன்ற நல்ல பலன்கள் உங்களுக்கு நடந்திருக்கும்.  2024 ஆம் ஆண்டு தனுசு ராசி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இரண்டாகப் பிரிக்கிறேன்.  முதல் பலன் வருடத்தின் முதல் மூன்று மாதங்களும் இரண்டாவது பலன் எஞ்சிய ஒன்பது மாதங்களின் பலன்களை காணலாம்.

 வருடத்தின் முதல் 3 மாதங்கள் 

 2024 ஆம் ஆண்டு வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு நிச்சயமாகவே ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. காரணம் ஐந்தாம் இடத்தில் குரு பகவான்.  உங்கள் ராசி அதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய  ராசியை பார்ப்பதால் புத்துணர்வு பெறுவீர்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகளால் ஆதாயம்,  பிள்ளைகள் வழியில் நன்மை, பிள்ளைகள் வழியில் முன்னேற்றம், போன்றவை  உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.

பிள்ளைகள் வழியில் எப்படி முன்னேற்றம் என்று நீங்கள் கேட்கலாம்.  அதற்கு பள்ளியில் உங்கள் மகனோ? மகளோ? நல்ல மதிப்பெண் பெற்று பாராட்டை பெறுவது  அல்லது அவர்கள் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்று சொல்லக்கூடிய  இதர விஷயங்களில் கெட்டிக்காரராக திகழ்ந்து, அதன் மூலம் அவர்களுக்கு நல்ல பெயர் கிட்டி, உங்களுக்கு  அது மகிழ்ச்சியை தேடி தரக்கூடிய ஒன்றாக அமையலாம். தந்தையாருடன் இருந்த கருத்து  மோதல்கள் முடிவுக்கு வரும்.  நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்ளப் போகிறீர்கள். 

புகழ் ஓங்கும் காலம்

வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு புகழ் கூடும் காலமாக அமையப் போகிறது.  குருபகவான் உங்கள் ராசி அதிபதி. ஒன்றுக்கும் நான்காம் வீட்டுக்கும் உரியவர் ஐந்தாம் பாவத்தில் அமர்ந்து  நீண்ட நாட்களாக நீங்கள் வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த வாகனத்தை  வாங்கி  மகிழ்வீர்கள்.  இருக்கும் வீட்டை புதுப்பிப்பது அல்லது புதிய வீடு மனை வாங்கி குடி போவது போன்ற எண்ணற்ற நல்ல காரியங்கள் நடக்கப் போகிறது.  வேலை இடத்திலோ அல்லது வெளி இடங்களிலோ உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை கூடி புகழின் உச்சிக்கு செல்ல போகிறீர்கள்.  

உங்களைப் பற்றி தவறாக பின்னால் பேசியவர்கள் எல்லாம் மனம் திரும்பி உங்களிடம் வந்து சேரப் போகிறார்கள்.   நீங்கள் அனைவராலும் விரும்பத்தக்க நபராய் மாறப் போகிறீர்கள்.  எதற்காக பிறந்தோம் என்று எண்ணியிருந்த உங்களுக்கு இதற்காக தான் நான் பிறந்திருக்கிறேன் என்று லட்சியத்தோடு வாழ்க்கை நகர்த்துவதற்கு குருபகவான் உங்களுக்கு ஐந்தாம் வீட்டில் இருந்து துணை புரிய போகிறார்.  சொந்தங்கள் உங்களுக்கு கை கொடுக்கப் போகிறார்கள்.  குடும்பத்தை விட்டு உங்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள் அல்லவா அதெல்லாம் மாறி  அவர்களே உங்களிடத்தில் வந்து சரணாகதி அடையப் போகிறார்கள். 

புத்திரபாக்கியம் 

வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புத்திர பேரு புத்திர சந்தானத்திற்காக ஏங்கி தவித்த உங்களுக்கு நல்ல காதுக்கு இனிய செய்தி வந்து சேரப் போகிறது. குழந்தை வரம் வேண்டி எத்தனையோ கோவில்களுக்கு சென்று வந்த நீங்கள் எத்தனையோ மருத்துவமனை வாசல்களில் ஏறி இறங்கிய உங்களுக்க மழலைச் செல்வம் உருவாக போகிறது. 

குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில்  செயற்கை முறை ஏதாவது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று காத்திருந்த உங்களுக்கு  அதுவும் சவாலாக அமைந்திருக்க கூடும் கடந்த காலங்களில். ஆனால் தற்போது எந்தவிதமான மருத்துவ உதவியும் இல்லாமல் உங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது  வீட்டில் மழலைச் செல்வத்தின் குரல் கேட்டு குடும்பத்தார் மகிழப் போகிறார்கள். 

 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை:

 தனுசு ராசிக்கு  ஆறாம் இடத்தில் குரு பகவான் அமர்கிறார் மூன்றாம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார்.  தொழிலில் பிரமாதமான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும்.  வேலையில் கொடி கட்டி பறக்க போகிறீர்கள். உங்களைப் போன்று அருமையான வேலை செய்பவர்கள் யாருமே கிடையாது என்ற பெயரை எடுக்கப் போகிறீர்கள்.  தொழில் மூலமாக உங்களுக்கு அதிகமான பேர் நண்பர்கள் ஆவார்கள்.  

தொழிலில் மதிக்கப்பட போகிறீர்கள்.  வேலி ஸ்தலத்தில் இருக்கும் கூட்டாளி உங்களை உயர்வாக எண்ண போகிறார்.  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  நோய் இல்லாமல் போகும்.  நாள்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இது ஒரு பொன்னான காலம் மருத்துவமனைக்கு சென்று அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டு அல்லது எதுவுமே இல்லாமல் உங்கள் உடலில் இருந்து நோய் உங்களை விட்டு பிரிந்து போக போகிறது.  உங்களுக்கு இருக்கும் மலை அளவு கடன்  கடுகு அளவு குறையப்போகிறது. 

4-ம் இடத்தில் ராகு, 10-ஆம் இடத்தில் கேது :

 நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம் தாயார் ஸ்தானம் வண்டி வாகன ஸ்தானத்தை குறிக்கும்  அப்படிப்பட்ட இடத்தில் ராகு பகவான் அமர்ந்தது ஒரு ஒடிய வீட்டில் குரு உங்களுடைய ராசிக்கு  ஐந்தாம் வீட்டில் அமர்வதால் அவர் ஐந்தாம் வீட்டை போலவே செயல்படுவார் உங்களுக்கு நினைத்தது போலவே வாகன பிரார்த்தி அமையப்போகிறது.  உங்களுடைய தாயாரின் உடல்நிலை சீராக முன்னேற்றம் அடையும்.  தாயாருடன் இருந்து வந்த கருத்துப் பாடல்கள் நீங்கும்.  நீங்கள் நினைத்த வீடு மனை வாங்க போகிறீர்கள்.  பத்தாம் இடத்தில் கேது  இருக்கிறாரே தொழிலில் ஏதேனும் சிக்கல்களை உருவாக்குவாரா என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம் பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அப்படி பார்த்தால் பத்தில் இருக்கும் கேது உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்.  ஞாயிறு தோறும் விநாயகர் வழிபாடு அல்லது செவ்வாய் தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொண்டால் தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கேது  உங்களுக்கு நன்மையே செய்ய ஆரம்பிப்பார்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள்.  உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள்  முடிவுக்கு வரும்.  சொத்து பிரச்சனை தீர்வு அடைந்து உங்களுக்கு சாதகமான  தீர்ப்பு வரப் போகிறது.  நீங்கள் தொட்ட காரியம் தொடங்கும் நினைத்த காரியம் நடக்கும்.  வாழ்க வாழ்த்துக்கள் !!!

 அதிர்ஷ்டமான நிறம் :  மஞ்சள் 

 அதிர்ஷ்டமான எண் : 3, 6

 வணங்க வேண்டிய தெய்வம் :  குருபகவான் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபா


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
Embed widget