Love Horoscope Today: யாருடன் வாழ்க்கையை எடுத்துச் செல்வதுனு குழப்பமா? லவ் ராசிபலன்கள படிங்க!
Love Horoscope Today in Tamil, September 17th 2022:திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடம் பேசினேன். அவர்கள் தங்களது திருமண வாழக்கை குறித்து கூறும்போது விளங்கிக்கொண்ட விஷயங்கள் இவைதான்.
திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடம் பேசினேன். அவர்கள் தங்களது திருமண வாழக்கை குறித்து கூறும்போது விளங்கிக்கொண்ட விஷயங்கள் இவைதான். வாழ்க்கையை வாழ்க்கைத் துணையுடன் வாழ நினைக்கிறீர்கள் என்றால், கட்டாயம் அவர்களை புரிந்து கொள்ளுதல் அவசியம். அவர்கள் ஒரு மகிழ்ச்சிக் காலத்தில், துக்க காலத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மகிழ்சியில் ஒருவர் சிரிப்பார் என்பதும் கவலையில் ஒருவர் அழுவார் என்பதுமா புரிதல், இல்லை. புரிதல் அப்படியானதாக இருக்காது. அப்படி இருந்தால் அது ஒருவரை புரிந்து வைத்திருப்பதாக இருக்காது, தெரிந்து வைத்திருப்பதாக தான் இருக்கும். ஒருவரை தெரிந்து வைத்துக்கொண்டு அவருடன் வாழ்க்கையை எடுத்துச் செல்வதென்பது தீயில் நடப்பதற்குச் சமம். அதனால் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து வெளிவரவே உங்களுக்கு ஒரு காலம் பிடிக்கும்.
மனிதராக, பேரன்பு மிக்கவராக, அன்பின் ஊற்றாக வாழ வேண்டிய இந்த வாழ்வை நாமே சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடக் கூடாது. நம்மைத் தவிர மற்றவர்களால் வரக்கூடிய சிக்கல்களை எதிர்கொண்டு மீண்டு வந்துவிடலாம். ஆனால் உச்களின் இன்னொரு உருவம் தான் நமது வாழ்க்கைத்துணை என எண்ணிக்கொண்டு இருக்கையில், உங்களின் துணையும் உங்களை புரிந்துகொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் எதிர்கொள்ளும் ஏமாற்றமும் அதிலிருந்து மீள்வதும் பெரும் போராட்டம் தான். வாழ்க்கையை தெரிந்தவரோடு எடுத்துச் செல்லாதீர்கள். புரிந்தரோடு எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு தெரிந்தவரை புரிந்து கொண்டு வாழ்க்கையை எடுத்துச் செல்ல ஜாலியாக லவ் ராசிபலன்களை தருகிறோம். ரிலாக்ஸா படிங்க!
மேஷம்
மூஞ்சீல மாஸ்க் போட்டு இருக்காங்கனு கொள்ளையடிக்கறவங்களுக்கும் கொரோனா நோயாளிக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவியான உங்கள உங்க லவ்வர் குண்டு வெடிப்பு குற்றவாளி மாதிரி சந்தேகப்பட்டு துருவித்துருவி விசாரிப்பாங்க. மண்டக்காய்ச்சல் புடுச்ச நாள்.
ரிஷபம்
உங்க லவ்வுல கமிட் ஆகும்போது, லவ்வர பாவம்னு நெனச்சுட்டு இருந்திருப்பீங்க. ஆனால் உண்மையிலயே பாவம் நீங்க தான். எவ்வளவு அடுச்சாலும் தாங்கறீங்க அதனால நீங்க ரொம்ப நல்லவங்கனு உங்க லவ்வரே சொல்லுவாங்க. கட்டுமான கம்பி விளம்பரத்துல வர்ற மாதிரி உறுதியான மனம் உங்களோடது. அதுக்கு இன்னைக்கும் ஒரு சோதனை வரலாம்.
மிதுனம்
வீக் எண்ட் வந்துட்டாலே இண்டூ டென் ஜூம் லென்ஸ் போட்டு உங்கள வாட்ச் பண்ற உங்க வீட்டுல இருக்கறவங்க கண்ணுல மண்ணத்தூவ இந்த வாரம் நீங்க ரொம்ப கஷ்டபடுவீங்க. உங்கள நெனச்சா உங்களுக்கே பெருமையா இருக்கும். தில்லாலங்கடினு உங்களுக்கு நீங்களே புது நேம் வெச்சுப்பீங்க. லவ்வுல சக்ஸஸ் ஃபுல் டே.
கடகம்
சின்ன வயசுல ரிமோட்டுக்காக சிப்லிங் கூட சண்ட போட்டுட்டு இருந்த நீங்க இப்ப சிப்லிங்கோட குழந்தைகூட ரிமோட்டுக்கு சண்ட போட்டுட்டு இருக்க உங்க குழந்த மனச இங்க யாருமே சரியா புருஞ்சுக்கலனு கோபம் வரும். என்ன செய்யறது உங்களுக்கே கூட, லவ் மேரேஜ் உங்க லைஃப்க்கு செட் ஆகுமா ஆகாதானு கேள்வியே வரலாம். நிதானமாக முடிவு எடுக்க வேண்டிய நாள்.
சிம்மம்
உங்க லவ்வர் வீட்டுல பிரச்சனையா போகுது, சீக்கிரமே ரிஜிஸ்டர் மேரேஜாவது பண்ணிக்கலாம்னு உங்ககிட்ட கேட்டா, எங்க வீட்டுல என்னைய நம்பி சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துல நெறயா மொய் வெச்சுருக்காங்கனு சீரியஸ்னஸ் புரியாம பேசி அடிவாங்க கூட வாய்ப்பு இருக்கு. மண்ட பத்தரம் சிம்மம்.
கன்னி
வீக் எண்ட்ல நல்ல ரிவ்யூவ் இல்லாத படத்துக்கு எதுக்கு போகனும், டைம் வேஸ்ட் பணம் வேஸ்ட்னு சொல்ற உங்க லவ்வர்ட்ட, உன்ன பத்தியும் தான் நல்ல ரிவ்யூவ் யாரும் சொல்லல நான் லவ் பண்ணலயானு மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசி அடி வாங்க கூட வாய்ப்புகள் இருக்கு. மைண்ட் வாய்ஸ அப்படியே மெயின்டைன் பண்ணிக்காங்க.
துலாம்
லவ்வர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலனு 9 டூ 6 வேலைய விட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போறேன்னு டிசைட் பண்ணா எப்படி உங்கள உங்க லவ்வர் கழுவி ஊத்துவாங்களோ அப்படியான நாள். கடைசியாக கழுவி ஊத்திய நாள்னு நீங்க போர்டு கூட போட்டுக்கலாம். டேமேஜ் டே.
தனுசு
நிம்மதியா வீக் எண்ட். ஜாலியா இருங்க. சின்ன அட்வைஸ் ப்ரெண்ட்ஸ் புராணம் இன்னைக்கு மட்டும் வேண்டாம். அவ்வளவு தான். ஹேப்பி டே.
விருச்சிகம்
உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு நல்லது தான் நடக்கும்னு நாங்க சொல்லனும்னு நெனச்சா, ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான்னு, ஸ்டேட்டஸ் விட்டுட்டு இருப்பீங்க. பரிதாபமான நாள்.
மகரம்
நீங்க லவ் பண்றீங்கனு வீட்டுல சொன்னா இடி விழுந்த மாதிரி பாக்குற உங்க வீட்டுல, டபுல் சைடு லவ்வுனு சொன்னதும் வடிவேல் காமெடி பாத்த மாதிரி எல்லாரும் சிரிசிரினு சிருச்சுட்டு, இன்னொருத்தவங்க வாழ்க்கைய கெடுக்காம இருனு அட்வைஸ் பண்ணுவாங்க. அந்த நேரத்துல உங்க லவ்வர் உங்களுக்கு வானத்தப்போல மனம் படச்ச பிஜிஎம்மோட மனசுல வந்து போவாங்க. லவ்வுல இன்னும் டீப்பா இருப்பீங்க.
கும்பம்
உங்கள இன்னுமே முழுசா நம்பாத உங்க ஆளுகிட்ட ஆன்லைன்ல மீட் பண்ண ப்ரெண்ட பத்தி பேசி உங்க வீக் எண்ட வீக்கமான எண்டா மாத்தறதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே இருக்கு. பாத்து சூதானமா பேசிக்காங்க
மீனம்
வீக் எண்ட் வந்தா என்ன வரலீனா என்ன குப்புற படுத்து தூங்குங்க. உங்களுக்கு எல்லாம் இப்போதைக்கு இதுதான் செட் ஆகும். குட் நைட்.