மேலும் அறிய

Love Horoscope Today: இன்றைய ராசிபலன்ல உங்க லவ்வுல என்ன? லவ் ராசிபலனை ஜாலியா படிங்க..!

Love Horoscope Today in Tamil, September 16th 2022: இன்றைய ராசிபலனின் அடிப்படையில் உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் என்னனு தெரிஞ்சுக்க கொஞ்சம் ரிலாக்ஸா இந்த ஜாலியான ராசிபலன படிங்க.

சமூக வலைத்தளத்தில் கவிதை ஒன்றை வாசித்தேன். காதல் குறித்த அந்த கவிஞரின் பார்வை நன்றாக இருந்தது. குறிப்பாக எந்தவிதமான எல்லைகளும் பாகுபாடுகளும் இல்லாமல் தோன்றும் காதல் குறித்த அவரது வாரத்தைகள் அதனை அர்த்தபடுத்துவதாகவே இருந்தது. பூமிக்கு ஒரு வரலாற்றை அறிவியல் சொல்லும்போது அதில் உள்ள நம்மைப்போன்ற ஜீவராசிகளுக்கு ஒரு வரலாறு இருக்காதா என்ன? எல்லாமும் இயற்கைதான் என அறிவியல் சொன்னாலும் அதை ஏற்க மறுக்கின்ற மனித மனம் தனக்குள் உள்ள குரூரமான புத்தியால் எக்கச்சக்க பிரிவினைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரிவினைகளை எதிர்த்து, ஏற்றத்தாழ்வுகளைக் களைய உலகம் முழுக்க உள்ள அன்பை வளர்க்க நினைப்பவர்கள், ஏதேதோ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இயற்கையின் கட்டமைப்புக்கும் செயல்பாட்டிற்கும் எதிராக நடைபெறும் எந்தவொரு செயலையும் கண்டித்தும் எதிர்த்தும் நடக்கும் போராட்டங்களும் அதனால் உருவெடுக்கும் புரட்சிகளும் ஏராளமானது. இந்த போராட்டங்களும் புரட்சிகளும் உயர தூக்கி பிடிப்பதே சக உயிரை நேசி, சக உயிரின் நலம் விரும்பு, சக உயிரின் மீது அன்பு செய், காதல் கொள் என. 

இப்படியான அந்த போராட்டங்களை விடவும் காதல் செய்யுங்கள் என நேரடியாக சொல்வதாக இருந்தது. "புரட்சி புண்ணாக்கை விட, காதல் கத்தரிக்காய் மேலானது" என்பது தான் அந்த கவிதை. ஒரு மாபெரும் வரலாறை அந்த வரிகள் மிகவும் சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்டது என்றே தோன்றியது. ஆமாம், நீங்கள் உங்கள் நட்பு வட்டம் உங்களது உடன்பிறப்புகள் ஏன் உங்களது பெற்றோர்கள் கூட எல்லையற்ற காதலுக்கு சாட்சியமாக இருக்க வாய்ப்புகள் ஏராளம். அப்படி இருக்கையில், எல்லைகளை கடக்க, எல்லைகளை தகர்க்க எல்லைகளை களையத்தானே புரட்சி. அப்படியான புரட்சியில் உள்ளது காதலில் எந்த சிக்கலும் ஏற்படாமல் ஹேப்பியாக இருக்க நாங்க ஒரு ஜாலியான லவ் ராசிபலன்களை தருகிறோம். ரிலாக்ஸா படிங்க. 
Love Horoscope Today: இன்றைய ராசிபலன்ல உங்க லவ்வுல என்ன? லவ் ராசிபலனை ஜாலியா படிங்க..!

மேஷம்

நீங்க என்னதான் ஜாலியான பெர்ஷனா இருந்தாலும், உங்க லவ்வர் நீங்க என்ன பேசுனாலும் தக் லைஃப் பண்ணீட்டு இருப்பாங்க. கே.பி.ஒய்ல பார்டிஸ்பேட் பண்ணலாமானு யோசிப்பீங்க. அந்த டீவி காரங்களே நல்ல லவ் பிஜிஎம் போட்டுவிட்டு, கல்யாணத்தையும் செஞ்சு வெச்சுருவாங்கனு யோசுச்சுட்டு இருப்பீங்க. தக் லைஃப் டே. 

ரிஷபம்

கொரோனா வந்த புதுசுல நம்ம ஊரு வெய்யிலுக்கு அந்த வைரஸ் நம்மல ஒன்னும் செய்யாதுனு எப்படி கம்பி கட்டீட்டு இருந்தாங்களோ, அப்படி நீங்க உங்க லவ்வுல எந்த பிரச்சனையும் வராதுனு கம்பி கட்டீட்டு இருப்பீங்க. ஆனா கொரோனா நம்மல எப்படி வெச்சு செஞ்சுதோ அப்படி செய்யறதுக்கு ஆப்பு ஆன் த வேல இருக்கு. இன்னைக்கு கொஞ்சம் சூதானமா நடந்துக்காங்க. 

மிதுனம்

ஊரே வெந்து தணிந்தது காடு படத்த பத்தி பேசீட்டு இருக்கும் போது, நீங்க மட்டும் திருச்சிற்றம்பலம் படத்துக்கே போலாமானு யோசுச்சுட்டு இருப்பீங்க. தேடித்தேடி லவ் பண்ணாலும் பல்பு வாங்கீட்டு இருக்க உங்களுக்கு ரொம்பவே க்ளோஸ் சர்கில்ல இருக்க ஒருத்தங்க மேல உங்களுக்கு ஃபில் வரலாம். வெந்து தணிந்தது காடு திருச்சிற்றம்பலத்துக்கு டிக்கெட்ட போடு. 

கடகம்

சிங்கிள் தான் கெத்துனு சுத்துற சங்கத்தோட முக்கிய புள்ளியான உங்களுக்கு, சங்க விதிகள மீறுற மாதிரி ஒரு சர்ப்ரைஸ் டேவா இந்த டே இருக்க போகுது. அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு கடைசி வரைக்கும் சிங்கிள் தான்னு இருக்காதீங்க. மனச கொஞ்சம் பறக்க விடுங்க. ஃபுயூட்டிஃபுல் டே இன்னைக்கு கெடுத்துடாதீங்க. 

சிம்மம்

ஊரெல்லாம் லவ்வுக்கு அட்வைஸ் குடுக்குற உங்களுக்கும் லவ்வுக்கும் இன்னைக்கு ஏழாம் பொருத்தம். கோபம் வந்தா கூட வசூல்ராஜா பிரகாஷ் ராஜ மனசுல நெனச்சு கன்ட்ரோல் யுவர் செல்ஃப்னு சொல்லிக்காங்க. சோதனையான நாள். 

கன்னி

காத்துவாக்குல ரெண்டு காதல் மாதிரி லஃப் போயிடுமோனு நீங்க நெனச்சு ஃபீல் பண்ணீட்டு இருப்பீங்க. யார் அந்த ரெண்டு பேருனு உங்க ப்ரெண்ட்ஸ் கேட்டுட்டே இருப்பாங்க. ஆனா அதுல மூனுபேருமே சிங்கிளா தான் இருப்பாங்கனு உங்களுக்கு மட்டும் தான் புருஞ்சிருக்கும். உங்க நிலமைய நெனச்சு ஃபீல் பண்ணீட்டு இருந்த நீங்க, படத்தப்பத்தி தெரியாத உங்க ப்ரெண்ட நெனச்சும் ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவீங்க. ஒரே ஃபீலிங்குலயே இந்த டே போயிடும். 

துலாம்

லேசா தூரல் போட்டா கூட உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் மொபைல் எடுத்து அவங்க லவ்வருக்கு, மிஸ் யூ, மழையில ஒன்னா நனையலாமானு மெசேஜ் அனுப்பீட்டு இருப்பாங்க. நீங்க மட்டும் மொபைல் எடுத்து சொமேட்டோல பஜ்ஜி ஆர்டர் செய்யலாமா இல்ல சார்ட்டேட் ஐட்டம்ல எதாவது ஆர்டர் செய்யலாமானு யோசுச்சுடுட்டு இருப்பீங்க. ப்ராக்டிக்கலான மனுசன், ப்ராக்டிக்கலான டே.

விருச்சிகம்

உங்க லவ்வர ரொம்பவே டீப்பா மிஸ் பண்ணுவீங்க. கூட இருந்தாலும் தூரமா இருந்தாலும் அவங்க ஃபோட்டோவ எடுத்து ஜூம் பண்ணி ஜூம் பண்ணி பாப்பீங்க. இந்த டேவே இப்படித் தான் போகும். ஏக்கமான நாள். 

தனுசு

டிஃபனுக்கு தோச சாப்படலாமா இல்ல பூரி சாப்படலாமானு கன்ஃபியூஷனோட ஹோட்டலுக்கு போனா கிச்சடி தான் இருக்குனு சொல்லுவாங்க. வேற வழியே இல்லாம சொந்த காசுல சூனியம் வெச்சுகிட்ட மாதிரி கஷ்டப்பட்டு சாப்புடுவீங்க. இந்த டேவ நீங்க டிசைட் பண்ணவே முடியாது. உங்க லவ்வர் சொல்லுற ஐடியாவும் உங்களுக்கு மொக்கையா தெரியும், ஆனா வேற ஆப்ஷனும் இருக்காது. அன் லக்கி டே. 

மகரம்

எல்லா முக்கியமான வேலையையும் அப்பறமா செய்யலாம், பாத்துக்கலாம் விடுனு சொகுசா சோம்பேறி வாழ்க்க வாழ்ந்துட்டு இருக்கீங்கனு உங்க லவ்வர் உங்கள திட்டுவாங்க. டு டே திட்டு வாங்குன டேனு உங்க லவ் டைரில எழுதுற அளவுக்கு திட்டு வாங்குவீங்க. 

கும்பம்

லவ்வர்ட்ட கொஞ்ச நாளைக்கு அடிக்கடி மீட் பண்ணிக்க வேண்டாம் வீட்டுல டவுட் வர ஆரம்புச்சுடுச்சு முக்கியமான விசயம் பேசீட்டு இருக்கும்போது, ஜடேஜா வேர்ல்ட் கப் ஸ்குவாட்ல இல்ல, சிஎஸ்கே டீம்லயும் இல்ல, இனி ஜட்டுவ கிரவுண்ட்ல பாக்கவே முடியாதானு கேட்டு உங்கள காண்டு ஏத்துவாங்க. நீங்க வாங்குன வரம் அப்படி. வாட் கேன் வி டூ. அனுபவிங்க. லவ்வர அடுச்சுடாதீங்க. 

மீனம் 

ரெண்டு பேரும் ஒரே ஹெட்செட்ல உங்க லவ்க்கு ரிலேட் ஆகுற சாங்ஸ் கேட்கலானு முடிவு செஞ்சு, நீங்க கண் அழகா கால் அழகானு நீங்க ரொமாண்டிக் வைஃப் சாங்க ப்ளே பண்ணா, உங்க லவ்வர் போட போட புண்ணாக்கு சாங் ப்ளே பண்ணுவாங்க. பல்பு வாங்குவீங்க. பாவம் நீங்க.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
Embed widget