மேலும் அறிய

கிரகங்களின் நாயகன் “கேது“! எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்கள்? முழு விவரம்

Ketu Effects in Different Houses: கிரகங்களை காட்டிலும் கேது எப்படி சக்தி வாய்ந்ததாக உள்ளது? அதன் தாக்கம் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

அன்பார்ந்த வாசகர்களே நவகிரகங்களில் கேது தான் வலிமையானவர் என்பதை மற்ற ஜோதிடர்களும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.  நம்மிடம் இருப்பது  சூரியன் என்ற நட்சத்திரமும்  ஆறு கிரகங்களும் இரண்டு நிழல் புள்ளிகளும்.  ராகு, கேதுவை தான் வெட்டு புள்ளிகள் என்று கூறுகிறோம்.  இப்படியான ஒரு வெட்டு புள்ளிக்கு மற்ற கிரகங்கள் கொடுக்காத சக்தி எங்கிருந்து வந்தது?  எப்படி கேது யான காரகன் என்று பெயர் எடுத்தார். மற்ற கிரகங்களை காட்டிலும் கேதுவே சிறந்தவர் என்பது எதை வைத்து கூறுகிறோம் ?  கிரகங்களிலே வலிமையான கிரகம் கேது என்று எப்படி கூற முடியும் ?  இது போன்ற கேள்விகள் ஜோதிடம் தெரிந்தவர்களுக்கும் எழும் தெரியாதவர்களுக்கும் தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் மிகும்.  பாருங்கள் கேதுவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

எதிலும் பற்றற்ற கேது:

கேது பற்றற்ற நிலையை கொடுப்பவர்.  சூரியனின் சுற்றுவட்ட பாதையை பூமி சுற்றி வரும் பொழுது ஒரு குறிப்பிட்ட வெட்டுப்புள்ளியில் கீழே பூமி இறங்கும் அந்த வெட்டுப் புள்ளி இறங்கிய கடைசி புள்ளிதான் கேது.  இப்படியான புள்ளி மனிதர்களின் வாழ்வில் எப்படியான மாற்றங்களை கொண்டு வருகிறது என்றால்  லக்னத்திற்கு கேது எந்த பாவத்தில் இருக்கிறது. அந்த பாவத்தை விட்டு  ஜாதகரை சற்று பிரித்தெடுப்பார் அல்லது துண்டிப்பார் என்பதுதான் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.  இப்ப நான் கூறும் கருத்துக்கு ஜோதிடராக இருக்க வேண்டும் என்பது இல்லை உங்களுடைய புத்தகத்திலேயே லக்னத்தில் இருந்து கேது எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறாரோ அந்த வீடு தொடர்பான ஒரு சிக்கல் கண்டிப்பாக உங்களுக்கு இருந்தே தீரும் என்பது தான் உண்மை.

கேது எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் ?

அன்பார்ந்த வாசகர்களே லக்னத்தில் கேது இருந்தால் நிச்சயமாக அவரே பற்றற்றவராக தான் இருப்பார்.  லக்கினத்தில் கேது இருப்பவர்களை நீங்கள் பார்த்தால் பெரியதாக ஒன்றும் அழுத்திக்கொள்ள மாட்டார்கள். வெளியில் தங்களை காட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். ரிசர்வ்ட் டைப் என்று ஆங்கிலத்தில் கூறுவார்களே அதுபோன்று அமைதியாக  சலனமே  இல்லாமல் தான் இருப்பார்கள்.  லக்னத்தில் இருக்கும் கேது ஜாதகருக்கு பெரிய ஆன்மீக அறிவையும் மற்றவர்களை பற்றி புரிந்து கொள்ளக்கூடிய தன்மையையும் கொடுப்பார்  சில சமயங்களில் ஜாதகருக்கு நல்ல அறிவையும் ஆற்றலையும் மேன்மையும் கொண்டு வருவது கேது தான் .

இரண்டாம் வீட்டில் கேது இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குடும்பத்துடன் சற்று விலகி இருக்க வைப்பார். வேலை நிமித்தமாகவோ அல்லது படிப்புக்காகவோ  இரண்டில் கேது இருக்கும் ஜாதக சற்று குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி இல்லை என்றால் பிறக்கும்போதே அந்த ஜாதகரின் குடும்பம் சற்று பிரிதலுடன் தான் இருக்கும் என்பது உண்மை . இது எதுவுமே நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் சிறு வயதிலிருந்து ஒரு ஆன்மிக குடும்பத்தில் அந்த ஜாதகர் வளர்ந்திருப்பார். அந்த ஜாதகரின் குடும்பமே மிகப்பெரிய பக்தி உள்ள குடும்பமாக இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் பெரிதும் பிரிவு ஒன்றும் ஏற்பட்டு விடாது .

மூன்றாம் வீட்டில் கேது அமர்ந்து இருந்தால் நிச்சயமாக அவர்கள் ஒரு செயலை செய்வதற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை யோசிப்பார்கள்  செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் யாராலும் அவர்களை தடுக்கவே முடியாது. பாதி வயதை கடந்த பின் வெற்றிகள் ஆரம்பிக்கும் என்று சொல்லலாம் .  ஏற்கனவே பல  வகைகளில் நல்ல லாபத்தை சம்பாதித்தவர்களாகத்தான் இருப்பார்கள். மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக அவர்களுடைய சொந்த முயற்சியிலேயே வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கான வழிவகைகளை திறப்பார்கள் .

நான்காம் வீட்டில் கேது இருக்கும் ஜாதகர்கள் நிச்சயமாக வாகனத்தால் ஏதேனும் சிறிய பிரச்சனையோ அல்லது தாயார் மூலமாக சிறு சிறு தொந்தரவுகளையும் சந்திக்க கூடும். சில ஜாதகர்களுக்கு மாற்றான் தாய் இடம் வளர வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் .  நிரந்தரமாக ஒரு வீட்டில் குடியிருக்க முடியாது நிச்சயமாக வெளிநாட்டு வேலை என்று ஒன்று இவர்களுக்கு வந்தே தீரும் . அல்லது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு வேறு ஊரிலோ மாவட்டத்திலோ, வேறு மாநிலத்தில் கூட இவர்கள் வசிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஏற்படலாம் . அது நிச்சயமாக வேலை சம்பந்தமாகவும் இருக்கலாம் .

ஐந்தாம் இடத்தில் கேது இருப்பவர்களுக்கு நல்ல ஸ்தானம் என்று சொல்லலாம். பிள்ளைகள் வழியில் சிறு தொந்தரவுகளை கொடுத்தாலும் நிச்சயமாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடாது .  பிள்ளைகள் பிரிந்து போவதும் சிறு வயதில் பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போவதும் கூட  ஐந்தாம் இடத்து கேதுவை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம் .. பொதுவாக பூர்வீகத்தில் இவர்கள் இல்லாமல் வேறு இடத்திற்கு சென்று வசிப்பவர்களாக இருப்பார்கள் குறிப்பாக பிள்ளைகள் பிறந்த பின்பாக அவர்கள் இடம் விட்டு இடம் மாறுவது  பேரு ஊருக்கு அல்லது நாட்டிற்கு செல்வது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம் .

ஆறில் கேது இருந்தால் அவர்கள்  நல்ல நிலையில் நோயற்றவர்களாக இருக்கக்கூடும் அப்படி இல்லை என்றால் ஏதேனும் சதா நோயுடனே அவர்கள் வாழ்க்கையில் பயணித்துக் கொள்ளும்  இந்த நோயைப் பொறுத்தவரை ஆறாம் பாவத்தை மட்டும் அல்லாமல் எட்டாம் பாவத்தையும் சற்று கவனத்தில் கொண்டு நோய் எரிதலுக்கு பயன்படுத்த வேண்டும் .  சிறு கடன்கள் இருந்தாலும் கூட அவர்கள் அதை அடைப்பதற்கு பெரிதும் பாடுபடுவார்கள் . எதிரிகளைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக நிற்பவர்களாக இருப்பார்கள் .

ஏழாம் இடத்தில் கேது இருந்தால் பொறுத்தவரை களத்திர ஸ்தானத்தில் சிறிய தொந்தரவுகள் கொடுக்கும் என்று சொல்லலாம். ஆனால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடாது பிறந்த ஜாதகத்தில் ஏழில் கேது இருப்பவர்களுக்கு சற்று இருதார் யோகம் உண்டு என்று சில ஜோதிடர்கள் கூறுவார்கள். ஆனால் ஏழில் கேதுவை வைத்துக்கொண்டு ஒரே தாரத்துடன்  வாழ்நாள் வரை வாழ்ந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன் எனவே ஏழில் கேது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் வாழ்க்கை துணை இடம் சற்று  மனக்கசப்பையும் சஞ்சலத்தையும் கொண்டு வரலாம் .

இப்படிக்கு ஜாதகத்தில் எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் அந்த இடத்தை வைத்துக்கொண்டு அவர் சில காரியங்களை செய்து முடிப்பார் .  கேதுவின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் விநாயகரை வழிபடுவதே சிறந்த பரிகாரம் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
புத்தாண்டை Skoda Slavia கார் வாங்கி கொண்டாடலமா? மைலேஜ், விலை என்ன?
புத்தாண்டை Skoda Slavia கார் வாங்கி கொண்டாடலமா? மைலேஜ், விலை என்ன?
Embed widget