மேலும் அறிய

குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று தலையால் நடந்து கைலாயத்தை அடைந்த காரைக்கால் அம்மையார்

பேயுருவம் பெற்ற காரைக்காலம்மையார் அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, கயிலை மலையான் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றார்.

குலசேகரபட்டினத்தில் அமைந்துள்ள காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் மாங்கனித் திருவிழா இறைவனுக்கு மாம்பழம் படைத்து வழிபடுகின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.

குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று தலையால் நடந்து கைலாயத்தை அடைந்த காரைக்கால் அம்மையார்

மனித குலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை மாற்றியது இரண்டு மாம்பழங்கள்தான். எனவேதான்  மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் இரண்டு மாம்பழங்களை படைத்து வழிபட்டு ஒன்றை பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர்.

குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று தலையால் நடந்து கைலாயத்தை அடைந்த காரைக்கால் அம்மையார்

குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு சிறப்பு பெற்ற இடம். இந்த ஊரில் மாங்கனி திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, பேய்க்கோலம் பூண்டார். பேய்க்கோலம் தாங்கிய அம்மையார், சித்தமெல்லாம் சிவமயமாக திகழ்ந்தார். அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார். அந்த தலம் இன்றைக்கும் குலசேகரபட்டினத்தில் உள்ளது.

குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று தலையால் நடந்து கைலாயத்தை அடைந்த காரைக்கால் அம்மையார்

புனிதவதியாக பிறந்து இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, இவரை தெய்வீகப் பெண் என்பதை உணர்ந்த கணவன், உடனேயே இவரை விட்டு விலகி சென்று விடுகிறார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் குலசேகரபட்டினத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் பிறக்க புனிதவதி என்று பெயர் வைத்து மகிழ்ந்தார். பரமதத்தர் குலசேகபட்டினத்தில் இருப்பது அறிந்த புனிதவதியின் காரைக்காலில் இருந்து ஓடோடு வந்தார். புனிதவதியை எதிர்கொண்டு அழைத்த பரமதத்தர், மனைவி-மகளுடன் புனிதவதியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உறவினர்கள் அதிர்ந்தனர். அவர்களிடம், புனிதவதி மனிதப் பிறவி அல்ல; தெய்வம். நீங்களும் வீழ்ந்து வணங்குங்கள் என்றார். அவரின் கருத்தறிந்த புனிதவதியார் கலங்கவில்லை. கணவனுக்கு தேவையற்ற இந்த சதையும் அழகு, தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். பேயுருவம் பெற்ற காரைக்காலம்மையார் அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, கயிலை மலையான் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றார்.

குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று தலையால் நடந்து கைலாயத்தை அடைந்த காரைக்கால் அம்மையார்

பனிமலையில் இறைவன் வசிக்கும் இடத்தை காலால் மிதித்து கடக்க விரும்பாமல், தலையால் நடந்து செல்ல, அதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் 'வாரும் என் அம்மையே' என அழைத்தார். யாது வேண்டும் என்று சிவன் கேட்க அதற்கு அம்மையோ, பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னடியை மறவாமை வேண்டும். மகிழ்ந்து வாடி இன்னும் வேண்டும் நான் இறைவா! நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க வேண்டும் என்று வேண்டினார். உடனே ஈசன், திருவாலங்காட்டிற்குச் சென்று தனது ஊர்த்துவ தாண்டவமதைக் காணக் காத்திருக்கச் சொல்லி அருளினார். அதோடு, ஆலங்காட்டினை அவர் வந்தடைய, வழியும் காட்டி அருளியுள்ளார். அங்கு காரைக்காலம்மையார் ஈசனின் திருநடனத்தை காணும் பேற்றினைப் பெற அது முதற்கொண்டு, ஆடவல்லானின் சிற்பத் திருமேனியின், திருவடி கீழ் பேயாரும் இடம் பெற வைப்பது சிற்ப மரபாகியது.

குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று தலையால் நடந்து கைலாயத்தை அடைந்த காரைக்கால் அம்மையார்

ஆனி பவுரணமி நாளில் காரைக்காலில் மட்டுமல்ல, குலசேகரபட்டினத்திலும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையாருக்கு 2000 மாங்கனிகளை படையலிட்டு வணங்கி, தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து குலசேகரபட்டினம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் காரைக்கால் அம்மையார் பேய் உருவம் பெற்ற தலம் அமைந்துள்ளது. வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இல்லங்குடி என்பவர் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வருகிறார். திருச்செந்தூர் செல்பவர்கள் குலசை சென்று காரைக்கால் அம்மையாரையும் தரிசனம் செய்யலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget