மேலும் அறிய
Advertisement
Kanchipuram: வாலாஜாபாத் அருகே 14 ஆம் நூற்றாண்டை சார்ந்த சதி கற்கள் கண்டுபிடிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரண்டு சதி கற்கள் கண்டுபிடிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த, இரண்டு சதிகற்களை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,வாலாஜாபாத்தை சேர்ந்த ஆட்டோவாசு மற்றும் ரமேஷ் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில், ஊத்துக்காடு கிராமத்தை கள ஆய்வு செய்தபோது, அக்கிராமத்திலிருந்து கட்டவாக்கம் செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோவிலுக்கு அருகே சாலையோரம் , இந்த இரண்டு சதிகற்களை கண்டறிந்துள்ளோம். இதில் ஒன்று மண்ணில் புதைந்து காணப்பட்டது, அதை எடுத்துநீர் ஊற்றி சுத்தம் செய்து அங்கேயே ஒரு வேப்பமரத்தடியில் வைத்துள்ளோம்.இது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
நாங்கள் கண்டறிந்த மற்றொரு, சதி கல்லானது சாலையோரம் இருந்தது அது ஒன்றரை அடி உயரமும் , ஒரு அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் வலது பக்கம் வீரனின் உருவம் காணப்படுகிறது. வீரனின் தலையில் உள்ள கொண்டை நேராகவும் காதில் நீண்ட காதனிகளும் கழுத்தில் மணியாரமும் மற்றும் தோள்களில் வாகு வளையங்கள் கைகளில் காப்பு ஆகியவை காணப்படுகின்றன. மேலும் அவரது இடது கையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கைப்பிடி கொண்ட ஒரு போர்வாளை கீழ்நோக்கிய நிலையில் வைத்துள்ளார்.
மேலும், அவர் உடலுக்கு பட்டாடையும் கால்களில் வீரக்கழலும் உள்ளது. இடப்பக்கம் வீரனின் மனைவி வணங்கிய நிலையில் காணப்படுகிறார் . அவரது கொண்டை இடப்பக்கமாக சாய்ந்த நிலையிலும் காதுகளில் மற்றும் கழுத்துகளில் அணிகலன்கள் கைகளில் வளையல்கள் மற்றும் உடலுக்கு பட்டாடை ஆகியவை உள்ளது . இது 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் வீரன் கையிலுள்ள போர்வாள் தரையை நோக்கி காட்டப்பட்டுள்ளதால், இவ்வீரன் இயற்கை மரணம் அடைந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம். இது சோழர்களின் இறுதிக் கால மாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கு அருகிலேயே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு பலகைக்கல் இருந்தது அதை தோண்டி எடுத்து சுத்தம் செய்து பார்த்தபோது அது 15-ஆம் நூற்றாண்டை சார்ந்த சதிக்கல் என்பதை உறுதி செய்தோம். ஒரே ஊரில் இரண்டு சதிகற்கள் அதுவும் அருகருகில் கிடைத்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதலாம்.
சதிக்கல் என்றால்
சதிக்கல் என்பது ஒரு வீரன் தன் இனக் குழுவைக் காக்கவோ ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்க போர்களத்தில் வீரமரணம் அடைந்தால், இறந்த அவ்வீரனின் உடலுக்கு தீ மூட்டி சடங்குகள் செய்து அந்தத் தீயில் அவனின் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொள்வார். இந்நிகழ்விற்கு சதி என்று பெயர். அவ்வாறு உயிர்விட்ட தம்பதியரின் நினைவைப் போற்றும் வகையில் அந்த தம்பதியரின் உருவங்களை ஒரு கல்லிலில் சிற்பமாக செதுக்கி வைத்து அந்தக் கல்லை
நட்டு வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
இந்தக் கற்களுக்கு சதி கற்கள் என்று பெயர். இது குறித்த குறிப்புகள் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கிய நூலான புறநானூறு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.இப்பழக்கம் வீரன் இயற்கை மரணம் அடைந்தாலும் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு அடையாளமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரியவரலாற்று கலை பொக்கிஷங்களை தமிழக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாகும் என்று அவர் தெரிவித்தார்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion