மேலும் அறிய

July 2024 Rasi Palan: நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!

July Month Rasi Palan 2024 in Tamil: 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை மாத பலன்கள் குறித்து ஜோதிட நிபுணர் சொல்வதை இங்கே காணலாம்.

July Month Rasi Palan 2024: ஜூலை மாதம் வரப்போகிறது. உங்களுக்கு என்னெல்லாம் நன்மைகள் நடக்க இருக்கிறது? புதிய காரியங்களை தொடங்கலாமா?நல்ல மாற்றங்கள் நிகழுமா? சவால்களை சந்திப்பது எப்படி  உள்ளிட்டவற்றிற்கு ஜோதிட நிபுணர் சொல்லும் ஒவ்வொரு ராசிக்கான பலன்களை காணலாம்.

 மேஷ ராசி:

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே.. இந்த ஜூலை மாதத்தில் சனி வக்கிரமடைய போகிறார். மேன்மையை தரப்போகிறது. வருமானம் இரண்டு மடங்காக உயரும் வாய்ப்பு உண்டு.  வாழ்க்கைத் துணையுடன்  சுற்றுலா சென்று வருவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும் . இரும்பு சம்பந்தமான பொருட்களால் ஆதாயம் உண்டு. தொழில் செய்யும் இடத்தில்  சக ஊழியர்களால் பாராட்டை பெறுவீர்கள்.

 ரிஷப ராசி:

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே,  குரு பகவான் அமர்ந்து   நல்ல ஆரோக்கியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். பதினொன்றாம் வீட்டில் ராகு அமர்ந்து  புதிய யுத்திகளை கையாள்வதற்கான எண்ணங்களை உருவாக்கும். அதே சமயத்தில்  தொழில்  ரீதியாக  செயல்படும்  நபர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறார்.  குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் கஷ்டங்கள்  விலகி  சந்தோஷங்கள் பெருகும்.  இந்த ஜூலை மாதம் உங்களுக்கு ஏற்றமான மாதமே.

 மிதுன ராசி:

 அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு இருப்பதால் ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.  வியாபாரத்தில் முதலீடு போட்டு லாபத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.  உழைத்தால்  பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓடும் உங்களுக்கு ஜூலை மாதம் கை கொடுக்கப் போகிறது.  10-ல் இருக்கும் ராகு உங்களுக்கு  சிறப்பான எதிர்காலத்தை கொடுப்பார்.  செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.  வீண் செலவுகளால் திக்கு முக்காடுவீர்கள்,  ஆனால் நிலைமையை சமாளிக்க சனி பகவான் உதவி செய்வார்.  ஏற்றம் இறக்கம் நிறைந்த மாதம் தான் இந்த மாதம்.

 கடக ராசி:

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே.., உங்களுடைய ராசிக்கு  குரு பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்க செவ்வாயும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார்.  அரசு வழிகளில் ஆதாயம் உண்டு. வங்கியில் பண வரவு ஏற்படும்.  தாய் வழி உறவினர்களை சந்திக்க வாய்ப்புண்டு.  நிலம் இடம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  வாழ்க்கையில் ஒளி வீசும் சிறப்பான மாதம் ஜூலை.  அஷ்டமி சனியின் பாதிப்பிலிருந்து தற்போது நீங்கள் விலகி இருக்கிறீர்கள்  டிசம்பர் மாதம் வரை உங்கள் காட்டில் மழையே.

 சிம்ம ராசி:

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார்.  இருக்கின்ற தொழிலை விட்டு நீங்கள் வேறு தொழில் மாற வேண்டாம்.  மேலிட அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  வேலையில் நிரந்தரமாக இருக்க  கடினமாக உழைத்து  முன்னுக்கு வர வேண்டிய சூழ்நிலை இது.  புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.  ஏற்கனவே  இருக்கின்ற வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்ல வேண்டாம்.  ஆறாம் இடத்து சனி பகவான் முயற்சிகளில்  உத்வேகத்தை கொடுப்பார்.  கடனிலிருந்து வெளிவர வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசி:

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே.., உங்களுடைய ராசிக்கு  ஆறாம் வீட்டில் சனி வக்கிரம் பெறுவது யோகமே.  ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து உங்களுக்கு வருகின்ற கஷ்டங்களை எல்லாம் அவர் தாங்கிக் கொண்டு இருக்கிறார்.  தற்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் வாழ்க்கை நகரும்.  விரைவில் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  திருமண பேச்சு வார்த்தைகள் சற்று தள்ளி போகும்.  ஆன்மீகத்தில் மனம் செல்லும்.  இஷ்ட தெய்வத்தை வணங்கி வாருங்கள் சங்கடங்கள் விலகும்.

 துலாம் ராசி:

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  ஐந்தாம் வீட்டில் சனி வக்கிரம்  எட்டாம் வீட்டில் குரு பகவான்.  ஏற்றம் இறக்கம் நிறைந்த  பலன்களை சந்திப்பீர்கள்.  நீங்கள் மறைமுகமாக செய்யும் எந்த காரியமும் வெளிச்சத்திற்கு வரும்  ஆகையால் நீங்கள்  செய்யும் செயல்களில் கவனமாக இருங்கள்.  புதிய முதலீடுகளை நம்பி  ஏமாற வேண்டாம்  தற்போது நீங்கள் செய்யும் வேலையில் முதலீடு செய்தால் அவை வருவதற்கு நாட்கள் ஆகும் என்பதால் தற்போது முதலீடு போன்ற காரியங்களில் இருந்து விலகி இருங்கள்.  யாரிடமும் வீண் வார்த்தைகளை விட வேண்டாம் சற்று கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது.

விருச்சக ராசி :

அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  நான்காம் இடத்தில் சனி வக்கிரம் பெறுகிறார்.  அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.  பாதிப்பு குறைந்து நன்மை ஏற்படும் காலம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.  விருச்சிக ராசிக்கு ஏழாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால்  நண்பர்களின் உதவியால் வியாபாரம் கொடி கட்டி பறக்கும்.  ஜூலை மாதத்தை பொறுத்தவரை செவ்வாய் ஆட்சி பெறுவதால்  ராசி அதிபதியின் வலிமை உங்களுக்கு  மிகுந்த பலம் உள்ளதாக இருக்கப் போகிறது.  திருமண பேச்சு வார்த்தைகள்  நல்லபடியாக முடியும்.  வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடந்தேறும்.

 தனுசு ராசி:

 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே.., உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து  இருக்கிறார். அதனால், வேலை செய்யும் இடத்தில் நல்ல மதிப்பையும் மரியாதையும் கொடுக்கிறார்.  பத்தாம் வீட்டை குரு பார்வை இழந்தால் புதிய  தொழில் தொடங்கப் போகிறீர்கள். வாழ்க்கையில் வேலை நிமித்தமாக முன்னேறுவதற்கான காலகட்டம்.  கடன்கள் குறையும்.  எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.  உங்கள்  பேச்சுக்கு  சமுதாயத்தில் மரியாதை  கூடும்.  குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மகர ராசி:

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே.. உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் குரு பகவான்  தாயாரின் உறவினர்களோடு நேரம் செயல்படுவதற்கான காலகட்டம்.  சொந்த பந்தம் உங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  நீங்கள் செய்யும் வேலையால் உங்களுக்கு புகழ் கூடும்.  நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது அதற்கான வாய்ப்புகள்  கைகூடும்.  ஜூலை மாதத்தை பொறுத்தவரை சிறப்பான மாதமாகவே உங்களுக்கு இருக்கிறது.  வீடு, நிலம், வாகனம் போன்றவற்றால் ஆதாயம் உண்டு.

கும்ப ராசி:

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் முயற்சிகள் வெற்றி அடையும்.  நான்காம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் நீண்ட தூர பிரயாணங்களில் மேற்கொள்வீர்கள்.  ஜூலை மாதத்தை பொறுத்தவரை நான்கில் இருக்கும் குரு பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு.  வியாபாரத்தால் வருமானம் பெருகும்.  புதிய முதலீடுகளில் ஈடுபட்டாலும்  நல்ல வருமானத்தை பெறலாம்.  தாய் இவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.  சனி பகவான் உங்கள் ராசியில் வக்கிரம் அடைவதால் இரண்டு விதமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.  நல்ல முடிவுகள் எடுப்பதற்கு இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொள்ளுங்கள்.

மீன ராசி :

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார்.  நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகளால் மற்றவர்கள் பயன்பெறுவார்கள்.  குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.  மூன்றாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் சற்று மன குழப்பத்தை கொடுத்தாலும் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெரும் செவ்வாய் தீர்க்கமான சில முடிவுகளை எடுக்க வைப்பார்.  வாழ்க்கையின் அடுத்த கட்ட  நகர்வுக்காய் காத்திருப்பவர்களுக்கு ஜூலை மாதம் சிறந்த மாதம்.  பன்னிரண்டாம் வீட்டில் வக்கிரம் பெறும் சளியால் உங்களுக்கு ஏற்றமே.  ஏழரை சனியின் பிடியிலிருந்து விடுதலையாகும் உங்களுக்கு  புதிய வாய்ப்புகள் தேடி வரும்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Nagarjuna: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜூனா.. தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபருடன் சந்திப்பு!
Nagarjuna: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜூனா.. தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபருடன் சந்திப்பு!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Embed widget