Hanuman Pooja | கடுகு எண்ணெய், உப்பில்லா வடைமாலை, வெல்லம்.. ஹனுமன் பூஜையைப் பத்தி தெரிஞ்சுகோங்க..
அனுமனுக்கு செவ்வாய் அல்லது நல்ல நேரத்தில் சில வழிபாடுகளை மேற்கொண்டால் நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது
அனுமன் கோவிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சென்று கடுகு எண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் பண பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது.
புராணத்தில் வீரத்தையும், ஞானத்தையும் தந்து தருளம் கடவுள் அனுமன். சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் ஹனுமான் ஜி, ராமபக்தன், ஹனுமான், பஜ்ரங்பாலி, பவன்புத்ரா, அஞ்சனி புத்ரா, ஆஞ்சநேயர் போன்ற பெயர்களால் அறியப்படுகிறார். இவரைத் தொடர்ந்து வழிபட்டால் வலிமையும், உறுதியும் கொண்ட மனப்பலம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதோடு மனதார எண்ணெய் விளக்கு, வடமாலை செலுத்தி வழிபடும் போது அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு அனுமன் தீர்வு காண்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய சூழலில் மக்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றான பண பிரச்சனைக்குத் தீர்வு காண்பதோடு பிரச்சனையிலிருந்து விடுபட அனுமன் வழிபாடு உகந்ததாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக நம்பப்படுகிறது
பணப்பிரச்சனைத் தீர்வதற்கான அனுமன் வழிபாடு:
பொதுவாக இந்து மதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை புனித நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக அனுமனுக்கு உகந்த செவ்வாயில் அனுமனை வழிபட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
குறிப்பாக உங்களது வேலையில் அல்லது வாழ்க்கையிலோ? பணப்பிரச்சனை அடிக்கடி ஏற்படும் போது அனுமனுக்கு செவ்வாய் அல்லது நல்ல நேரத்தில் சில வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் அனுமன் கோவிலுக்குச் சென்று கடுகு எண்ணெயில் மண் தீபம் ஏற்றி அனுனை வழிபட வேண்டும்.
இதோடு அந்நாளில் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைத் தானம் செய்வதன் மூலம் பணம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் என நம்பப்படுகிறது.
மேலும் லட்சுமி தேவியின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவதால், குளித்த பிறகு பசுவுக்கு உணவு ஊட்டுவது மங்களகரமானது என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக பணப்பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அரச மர இலைகளை எடுத்து தண்ணீர் நன்றாக சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த இலைகளில் சந்தனத்தால் “ஜெய் ஸ்ரீராம்“ என்று எழுதுங்கள். இதனையடுத்து இந்த இலைகளை அனுமன் கோவிலில் வைத்துவிட்டு வழிபட்டு வந்தால் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது
இதோடு நீங்கள் செய்யும் வேலைகள் ஏற்படும் சில தடைகள், திருமண தாமதம், உங்களது மனத்தில் பாசிடிவ் எனர்ஜி வருவதற்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடவும் “ஓம் ஹனுமந்தே நம“ என்ற மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை உச்சரிக்கவும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும் என கூறப்படுகிறது. இதோடு அனுமனுக்கு வடமாலை, வெல்லம் போன்றவற்றை படைத்து அதனை கோவில் வளாகத்திலேயே விநியோகித்து வந்தால் கூடுதல் நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது.