Guru Vakra Nivarthi: குரு வக்கிர நிவர்த்தி! கும்ப, மீன ராசிக்கும் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என்ன?
Guru Vakra Nivarthi Palangal 2024: குரு வக்கிர நிவர்த்தி காரணமாக கும்பம் மற்றும் மீன ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து கீழே காணலாம்.
நாளை நடக்கவிருக்கும் குரு வக்கிர நிவர்த்தியையடுத்து 12 ராசிக்கும் பல மாற்றங்கள் நிகழும் என ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர். கும்ப ராசிக்கும், மீன ராசிக்கும் நிகழும் மாற்றங்கள் குறித்து கீழே காணலாம்.
கும்ப ராசி :
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் குருபகவான் வக்கிரம் பெற்று இரண்டாம் இடத்தை நோக்கி வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குடும்பத்தில் சில சில சலசலப்புகளை ராகுபகவான் ஏற்படுத்தினாலும், ஆட்சி பெற்ற குரு பகவான் குடும்பஸ்தானத்தில் அமர்ந்து இதனால் வரையில் குடும்பத்தை பெரிதளவில் பாதிக்காமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பார். டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவகமான வெற்றி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யப் போகிறார்.
மூன்று நீங்கள் எடுத்த காரியம் எதுவாகினும் அதில் வெற்றி கிட்ட வேண்டும் என்று தானே ஆசைப்படுவீர்கள். அந்த வெற்றியின் ஸ்தானம் தான் மூன்றாம் பாவமான மேஷ ராசி அந்த மேஷ ராசியில் குரு பகவான் அமர்ந்து உங்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை தேடி தரப் போகிறார். கும்ப ராசிக்கு லாப அதிபதியான குரு பகவான் மூன்றாம் பாவத்தில் அமர்ந்து நிச்சயமாக அந்த பாவத்தை விருத்தி செய்யப் போகிறார். இளைய சகோதரன் முயற்சிகளில் வெற்றி தன்னம்பிக்கை தைரியம் அடுத்தவர்களிடத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்ற எண்ணம் செயல்பாடு போன்ற அனைத்தையும் குறிக்கும்.
மூன்றாம் பாவகம் உங்களுக்கு சுபமாக மாறி குரு என்கிற மிகப்பெரிய சுப கிரகத்தின் ஆளுமையின் கீழ் வந்து உங்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் வாங்கி கொடுக்க போகிறது. கும்ப ராசிக்கு இரண்டாம் பாவத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் நீங்கள் ஏதேனும் பேச சென்றால் அந்த பேச்சு சிறு பொறி போல தட்டி அது மிகப்பெரிய தீப்பிழம்பாய் மாறி குடும்பத்தையே கதிகலங்க செய்திருக்கும். அப்படி இதனால் வரையில் ராகு செய்து வந்த மாயாஜால வித்தைகளை குரு பகவான் கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் தற்போது இரண்டாம் வீட்டு அதிபதி குரு பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்து ஏழாம் பாவகத்தை பார்க்கிறார். அப்படி என்றால் இப்பொழுதும் உங்களுக்கு குடும்பத்தில் பெரிய சலசலப்புகள் ஏற்படப் போவதில்லை. மூன்றாம் பாவத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் ஏழாம் பாவத்தை பார்வையிடுவதால் நீண்ட நாட்களாக திருமணத்திற்காக வரன் தேடி எத்தனையோ ஊர்களுக்கு நீங்கள் அலைந்து இருப்பீர்கள்.
அந்த அலைச்சல் தற்போது நின்று உங்களுக்கு ஒரு நல்ல வரனை உங்களுடைய இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. கும்ப ராசிக்கு திருமண காலம் வந்துவிட்டது. எத்தனையோ நாட்களாக திருமணத்திற்காக வரன் பார்த்து வரன் பார்த்து நாட்களாகி வயதாகி போனது என்று கும்ப ராசியின் பெற்றோர்கள் மிகுந்த கவலையிலிருந்து இருப்பீர்கள். அந்த கவலைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உங்களுடைய கவலைகளை போக்க குரு பகவான் மூன்றாம் பாவகத்தில் அமர்ந்து ஏழாம் பாவகத்தையும், ஒன்பதாம் பாவகத்தையும் இயக்கி நீண்ட தூர பிரயாணம், ஆன்மீகத்தில் நாட்டம், குலதெய்வ கோவிலுக்கு உங்களுடைய பங்களிப்பு போன்ற அருமையான காரியங்களை குருபகவான் நடத்தி தர போகிறார். குரு வக்ர நிவர்த்தி உங்களுடைய ராசிக்கு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வணக்கம்
மீன ராசி :
எந்த அலைச்சல்களை கொண்டு வந்து சேர்த்தாலும் அது சுப அலைச்சல்களாகவே இருக்கும். நிச்சயமாக ஒரு நல்ல இடத்தில் நல்ல வேலையில் நீங்கள் அமர்ந்திருப்பீர்கள். வாழ்க்கையில் எதுவுமே எளிதில் கிட்டாது என்பதற்கு மீன ராசிக்காரர்களே ஒரு உதாரணம் கடுமையான உழைப்பின் மூலமாக நல்ல இடத்தை நீங்கள் எப்போது இருந்தாலும் அடைவீர்கள். வாழ்க்கையின் முற்பகுதியை காட்டிலும் பின்பகுதி இனிமையானதாக உங்களுக்கு அமையும். மீன ராசியை சேர்ந்த உங்களுடைய ராசியாதிபதி குரு பகவான் இரண்டாம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
இரண்டாம் வீடு என்பது தனஸ்தானம். நீங்கள் சம்பாதிக்க கூடிய பணம் இதனால் வரையில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து எத்தனை கஷ்டங்களை அனுபவித்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கணிசமாக வருமானமாக பெற்றிருந்தீர்கள். ஆனால் தற்போது குருபகவான் இரண்டாம் பாவகத்தில் அமர்ந்து அந்த கணிசமான தொகையை பெரிய தொகையாக ஆக்கப் போகிறார் அப்படி என்றால் வருமானம் இருமடங்காகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருடன் நீண்ட நேரம் செலவிடக் கூடிய வாய்ப்புகளை அவர் இரண்டாம் இடத்தில் இருந்து ஏற்படுத்தப் போகிறார். மீன ராசிக்கு ஏழாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து உங்களுடைய வாழ்க்கை துணையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அல்லது சிலருக்கு குடும்பத்தில் சிறு குழப்பத்தை விளைவித்து அது வம்பு வழக்குகள் வரை சென்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் நிச்சயமாக குரு பகவானுடைய அனுகிரகத்தாலும் அவருக்கு நீங்கள் வேண்டுதல் செய்வதன் மூலமாகவும் நிச்சயமாக லக்னத்தில் ராகுவும், ஏழில் கேது பகவான் அமர்ந்திருந்து உங்களுக்கு செய்ய விருப்பத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.
முதல் திருமணம் பிரச்சனையில் இருக்கும் மீன ராசி வாசகர்களுக்கு இரண்டாம் திருமணம் நிச்சயமாக நல்லபடியாக நடந்தேறும். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தான அதிபதி இரண்டாம் வீட்டில் அமர்கிறார். அப்படி என்றால் புதிய வாய்ப்புகள் உங்களுடைய வீட்டின் கதவை தட்டப்போகிறது அந்த வாய்ப்புகளை நீங்கள் எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுடைய வருமானம் உயருமா? அல்லது அப்படியே நீடிக்குமா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்
வீடு வண்டி வாகனத்தில் யோகம் நிலம் மனை போன்ற விஷயங்கள் நல்ல முன்னேற்றம் லாபம் கிடைக்கப்போகிறது. இரண்டாம் வீட்டில் இருக்கும் ஒரு பகவான் எட்டாம் வீட்டை பார்வையிடுவதால் வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் அதிகப்படியான லாப மேன்மை வங்கியில் சேமிப்பு உயரும் தன்மை போன்றவை உங்களுக்கு நடக்கப் போகிறது. மொத்தத்தில் குரு வக்ர நிவர்த்தி மீன ராசிக்கு அருமையான நிவர்த்தி என்றே கூறலாம் வாழ்த்துக்கள் வணக்கம் …