Guru Vakra Nivarthi: கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களே! குரு வக்கிர நிவர்த்தியால் ஏற்படப்போகும் பலன்கள் என்ன தெரியுமா?
Guru Vakra Nivarthi Palangal 2024: குரு வக்கிர நிவர்த்தி காரணமாக கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் பலன்கள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.
நாளை நடக்கப்போகும் குரு வக்கிர நிவர்த்தி 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களை உண்டு செய்யப்போகிறது.
கன்னி ராசி:
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே டிசம்பர் 30ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். உங்களுடைய ராசிக்கு நான்காம் அதிபதியும், ஏழாம் அதிபதியுமான குரு பகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்து வக்கிர நிலையில் உங்களுடைய ஏழாம் வீட்டை நோக்கி நகர்ந்து வந்ததால், நிச்சயமாக 2023 ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதத்தில் எவ்வளவு பெரிய சிக்கல்கள் உங்களுக்கு வந்தாலும் அதை சமாளிக்க கூடிய சக்தியை ஏழாம் வீட்டை நோக்கி வந்த குரு பகவான் உங்களுக்கு வாரி வழங்கி இருப்பார். வருகின்ற குரு நிவர்த்தி உங்களுடைய ராசிக்கு எட்டாம் பாவத்தில் அமர்ந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் நிச்சயமாக தேக ஆரோக்கியம் கூடும். யாருக்கெல்லாம் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்து மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்த்து வந்தீர்களோ? அவர்களுக்கு நிச்சயமாக நல்ல பலன்கள் கை மேல் கிடைக்கப் போகிறது. நோய் இருந்த இடம் தெரியாமல் மறையப் போகிறது. எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்பதால் ஆயுள் கண்டம் இருந்த அத்தனை பேருக்கும் குரு பகவான் ஆயுள் விருத்தி செய்யப் போகிறார்.
கன்னி ராசிக்கு ராசியிலேயே கேது பகவான் அமர்ந்து உங்களுக்கு சிறு சிறு இளைஞர்களை கொண்டு வந்தாலும் அஷ்டமஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் நடக்கப்போவதை முன்கூட்டியே உங்களுக்கு உணர்த்தி அந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்கான வழியையும் காண்பிக்கப் போகிறார். நான்காம் பாவாதிபதி குரு பகவான் எட்டாம் வீட்டில் அமர்வதால் வெளி மாநிலம் வெளி தேசம் என்று செல்லவிருந்த உங்களை நிச்சயமாக அயல் நாட்டிற்கு கொண்டு செல்வார். அஷ்டமஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறாரே, ஏதேனும் வம்பு வழக்குகளில் நம்மை சிக்க வைத்து விடுவாரோ? என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். காரணம் என்னவென்றால் உங்களுக்கு குரு பகவான் ஏழாம் அதிபதி என்பதால் நிச்சயமாக பெரிய அளவுக்கு வம்பு வழக்குகளை கொண்டு வந்து சேர்க்க மாட்டார். இருப்பினும் 2024 வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி சம்பாத்தியத்திற்கும் வருமானத்திற்கும் எந்த குறைவில்லாமல் வங்கியில் சேமிப்பு கணக்கு உயரப்போகிறது. எந்த ஒரு சுப காரியத்தையும் வருகின்ற மே மாதத்திற்கு பிறகு வைத்துக் கொள்வது நல்லது வாழ்த்துக்கள் வணக்கம்.
துலாம் ராசி :
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, குரு பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் அதிபதி மற்றும் ஆறாம் அதிபதி ஏழாம் பாவத்தில் வக்கிரம் பெற்று ஆறாம் பாவத்தை நோக்கி சென்றதால் கடன்கள் பெரிதாக இருக்கிறதே என்று உங்களுக்கு கவலையை தூண்டி விடலாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். உங்களுடைய ராசிக்கு ஏழாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்ப்பதால் எந்தவிதமான மலையளவு கடன்கள் உங்களுக்கு இருந்தாலும், அது கடுகளவு சிறிது ஆக்கப் போகப் போகிறார். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் பாவத்தில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்க போகிறார். அப்படி என்றால் மலையளவு கடன் இருந்தாலும் அது கடுகளவு குறைந்து போகப்போகிறது ராசியை குருபகவான் பார்ப்பதால் புத்துணர்வு புதுப்பொலிவு உங்களுக்கு கூடும்.
ஏழாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் நீண்ட நாட்களாக திருமணமாகவில்லை என்று வரம் தேடிக் கொண்டிருந்த துலாம் ராசி அன்பர்களே, உங்களுக்கு தற்போது திருமண பாக்கியம் கிட்ட போகிறது உங்களுடைய ராசிக்கு மூன்றாம் அதிபதியான குரு பகவான் ஏழாம் பாவத்தில் அமர்ந்திருப்பது கம்யூனிகேஷன் தொலைத்தொடர்பு ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றமான முன்னேற்றமான காலகட்டம் என்று சொல்லலாம் வெற்றி ஸ்தான அதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பார்ட்னர்கள் வகையில் முன்னேற்றம் தொழில் தொடங்கும் போது கூட்டாக சேர்ந்து தொழில் தொடங்கினால் அது லாபத்தையும் மேன்மையும் நீங்கள் சந்திக்கலாம் வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு யோகமான காலகட்டங்களில் வாழ்த்துக்கள் வணக்கம்.
விருச்சக ராசி :
அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே டிசம்பர் 30ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து உங்களுடைய ராசிக்கு ஆறாம் பாவகத்தில் அமர போகிறார். ஏற்கனவே உங்களுடைய ராசிக்கு ஆறாம் பாவத்தில் அமர்ந்து வக்கிரம் பெற்று உங்களுடைய ராசியின் ஐந்தாம் பாவத்தை தொட்டதால் பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சிறிதாக சென்று விடலாம். உங்களுக்கு கூர்மையான எண்ணங்கள் புத்திகள் போன்றவை சாதுரியமான சமயங்களில் பயன்படுத்தி, அதன் மூலம் பல வெற்றியை நீங்கள் அடைந்திருப்பீர்கள். ஆனால் தற்போது ஆறாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும்.
குரு பகவான் மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் போகிறார். தொழில் ஏற்கனவே நீங்கள் ஒன்று செய்திருந்தாலும், இரண்டு மூன்று வியாபாரங்களை பார்த்து அதன் மூலமாக நல்ல வருமானங்களை ஈட்டப் போகிறீர்கள். ஆறாம் பாவத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உடலில் சிறு சிறு உபாதைகளை கொடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள் போன்றவற்றின் மூலம் நிரந்தரமாக தீர்வுகள் காணப்படும். விருச்சிக ராசிக்கு ஏற்கனவே ராசியில் இருந்து ஐந்தாம் பாகத்தில் ராகு பகவான் அமர்ந்து எண்ணங்களை விரிவுபடுத்தி வேறு எங்கேயும் சென்று நாம் பிழைப்பு நடத்தலாமா? வெளிநாடு செல்லலாமா? வேறு ஏதேனும் தொழில் கிட்டுமா? என்ற மிகப்பெரிய திட்டங்கள் உங்களுக்கு பகுத்துக் கொடுத்திருப்பார் இருப்பினும் குரு பகவான் ஆறாம் பாவகத்தில் அமர்ந்து நிச்சயமாக நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப் போகிறார்