திருவண்ணாமலை : மகா சிவராத்திரி லட்ச அர்ச்சனை பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்ச அர்ச்சனை தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அலை மோதிய கூட்டம் மேலும் காலை முதல் கோவிலில் இசைக்கச்சேரி நடைபெற்று வருகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மஹா சிவராத்திரி லட்சார்ச்சனை விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமாலும், பிரம்மனும் நானே பெரியவன் என்று தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதுடன், இதுகுறித்து அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது, தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறார்களோ அவரே பெரியவர் என்று சிவன் கூறினார். ஆனால், இருவராலும் சிவனின் அடி, முடியைக் காண முடியவில்லை. இருவரும் தங்களுக்குள் இருந்த அகந்தை நீங்கி சிவனை வணங்கினர். இந்நிகழ்வு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை என பக்தர்களிடையே நம்பிக்கை.
அதன்படி, செவ்வாய் கிழாமைஅண்ணாமலையார் கோவிலில் மஹாசிவராத்திரி விழா அண்ணாமலையார் மூலவர் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அண்ணாமலையார் மூலவர் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது. லட்சார்ச்சனை என்பது கடவுளின் திருநாமத்தை நுாற்றெட்டு முறை சொல்வது அஷ்டோத்திரம். ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாமம்.
சகஸ்ர நாமத்தை நுாறுமுறை சொன்னால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘லட்சார்ச்சனை’ எனப்படும். ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் உலகத்திற்கே நன்மை உண்டாகும். இவ்விழாவில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதியது இதனால் காலை முதல் கோவில் வளாகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாமலையாரை தரிசித்த பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கத்தினர் சார்பில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு 40 ஆண்டாக இன்று இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் நாதஸ்வர கலைமாமணி திருக்கைலாயமணி பட்டம் வென்ற டி.ஆர். பிச்சாண்டி தலைமையில் சிறுவர்கள் தங்களின் நாதஸ்வரம் மற்றும் தவில் என 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசைநிகழ்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் மாலை 5 மணிக்கு தேவார இசை, 6 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சிகள், போன்ற நிகழ்ச்சிகள் மாலை 4 மணி முதல் ஏராளமான பெண்கள் கோவிலின் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் 4,கலர் பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிவபெருமானின் பல்வேறு வடிவங்களை தரைகளில் வரையவுள்ளனர்.மேலும் கோவிலின் வளாகத்தில் உப்புகோளங்களும் போடப்பட்ட உள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவ மூர்த்திக்கு தாழம்பூ மாலை அணிவித்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறவுள்ளது.