Love Horoscope Today:லவ் லைஃப்ல பிரச்சினையா? இதோ ஜாலியான லவ் ராசி பலன் படிங்க!
Love Horoscope Today in Tamil, September 13th 2022: கொஞ்சம் பொறுமை இழந்து தவிக்கும் காதலர்களுக்காக உதவ தான் இந்த லவ் ராசிபலன். ஜாலியா படுச்சு ஹேப்பியா இருங்க.
இலக்கணம் இல்லாத காதலில் அடிப்படையான ஒன்று, புரிதல். காதலுக்கு கண் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லைனு சொன்னாலும் புரிதல் இல்லாத பிரியம் காதலாக பரிணமிக்கவே முடியாது. மாறாக அது ஆதிக்கத்துக்கு தான் வழி வகுக்கும். அந்த புரிதல் ரொம்பவே ஸ்டாராங் ஆகனும்னா பாட்னர்கூட செய்யவேண்டியது அவங்களுக்காக நேரம் ஒதுக்கி அத முழுமையா பயன்படுத்தறது தான்.
எங்கோ ஒரு இடத்துல சின்னதா விரிசலோ விலகலோ வரும்போது, செய்ய வேண்டியது, கொஞ்சமா அந்த பிரச்சனையை ஆறப்போட்டுட்டு, எவ்வளவு சீக்கிரமே போய் அவங்கிட்ட பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் பேசுங்க. அதுதான் காதலில் புரிதலை ஏற்படுத்தும். எப்பவும் நான் இருக்கேன்னு உங்க பாட்னருக்கு உணர்த்த முடியும். அதவிட்டுட்டு ஏற்பட்ட விலகல்ல நீங்களா உங்க காதலை சோதிக்கிற மாதிரி கேள்விகளை மனசுல யோசுச்சு, அதுக்கான பதிலை நீங்களே எழுதாம இருங்க. அது ரொம்பவே முக்கியம். அப்படி உங்க மனசுக்குள்ள எந்தவிதமான சங்கடமும் ஏற்பட கூடாதுனு தான் நாங்க உங்க லவ்வுக்கு ஹெல்ப் செய்ய ஜாலியான லவ் ராசிபலன்களை கொடுக்கிறோம். நீங்க ஜாலியா படிங்க...
மேஷம்
இந்த டேவ ரொம்பவே நல்லா ஸ்டார்ட் பண்ணீட்டு முடிக்கறப்ப மட்டும் படு சொதப்பல்ல முடிக்கற உங்க திறமை தான் உங்க லவ்வுல இன்னைக்கு ஆப்ப ஆஃப்பாயில் போட்டு ரெடியா வெச்சுருக்கு. பாத்து சூதானமா நடந்துக்காங்க.
ரிஷபம்
ஆளே கிடைக்காம வீட்டுல வரன் பாக்க சொல்லீட்டு, வீட்டுல பாத்தவங்களோட FLAMES போட்டு பாத்து லவ் இல்லனா மேரேஜ் வருதானு பாத்துட்டு இருப்பீங்க. ஆனா ஜாதகம் செட் ஆகல, மொதல்ல இருந்து கோட்ட போட்டு அடினு வீட்டுல சொல்லுவாங்க. சோதனையான நாள்.
மிதுனம்
உங்க ப்ரெண்ட் ஜி பேல அமவுண்ட் அனுப்பீட்டு ஸ்கீரீன் ஷாட் அனுப்புனதுக்கு அப்பறம் ஜீ பேல போய் பேலன்ஸ் செக் பண்ணா, பேங்க்ல இருந்து மினிமம் பேலன்ஸ் புடுச்சுருப்பாங்க. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலனு சொல்ற மாதிரி உங்க லவ்வுல இன்னைக்கு அன் சேட்டிஷ்ஃபைடு டே.
கடகம்
ஈரமான கையில மொபைல அன்லாக் செய்யலானு ட்ரை பண்ணா, காலா படத்துல ரஜினி கேட்கற மாதிரி யாரு நீனு கேட்குமோ, நீங்க செஞ்ச காண்டுல உங்க ஆள் உங்கள யாரு நீனு கேட்பாங்க. உங்களுக்கே உங்கள நெனச்சா பாவமா இருக்கும். வேற வழியே இல்ல. வெய்ட் பண்ணிதான் ஆகனும்.
சிம்மம்
ஏதோ டீப்பா நம்ம லவ் பத்தி யோசுட்டு இருக்காங்கனு உங்க ஆள்ட்ட போய் கேட்டா, பாக்கியாவும் கோபியும் சேருவாங்களா மாட்டாங்களானு ஒரே கவலையா இருக்கு. அவங்க சேந்ததுக்கு அப்பறம் தான் நம்ம கல்யாணம்னு சொல்லுவாங்க. உங்கள யாராலயும் காப்பாத்த முடியாது. குழப்பமான நாள்.
கன்னி
ஒரு சில வாட்ஸ் ஆப் குரூப்ல ஏன் இருக்கோம், எதுக்கு இருக்கோம், யார் அட்மின், குரூபோட மோடீவ் என்னனு தெரியாம இருப்போம். அந்த மாதிரி லவ்வுல இருந்தா லைஃப்க்கும் நல்லதில்ல, லவ்வுக்கும் நல்லதில்ல. மேக் இட் அ ரீசனபுல் டே.
துலாம்
ப்ரண்ட்ஸ்க்கு கொடுக்கற டைம்ல பாதியாச்சும் உங்க லவ்வருக்கு தாங்க. லவ்வு கவ்வுனா மட்டும் போதாதுங்க. அதவிட முக்கியம் லவ்வ தந்துட்டே இருக்கறது தான். சோ டூ இட் இமிடியட்லி.
விருச்சிகம்
உங்க ஆழ் மனசுல உங்கல யாரோ ரொம்ப கோபக்காரர்னு நம்ப வெச்சுட்டாங்களோனு உங்களுக்கே தோனுற அளவுக்கு உங்க ஆள் உங்க பொறுமைய சோதிப்பாங்க. லவ்வுல சூடூ சொரணையொல்லாம் பாக்காதீங்க. வெந்து தணிந்தது காடு, இன்னைக்கு லவ்வரோ சண்டைய போடு.
தனுசு
காமெடி ஷோ காரங்க காமெடிக்காக போராடுற மாதிரி நீங்க காதலுக்காக போராட வேண்டி இருக்கும். அசிங்கப்பட்டாலும் துன்பப்பட்டாலும் துயரப்பட்டாலும் உங்க குறிக்கோள் காதலும் காதலருமாகத்தான் இருக்கனும். கப்பு முக்கியம் பிகிலு..
மகரம்
காதல்ல எப்பவுமே ஊறி கிடக்கும் உங்களுக்கு. இன்னைக்கும் ஒரு அதிஷ்ட நாள் தான். ஏதேதோ பொய் சொல்லீட்டு அவுட்டிங் போய்ட்டு இருந்த உங்களுக்கு இனி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ரொம்ப நாளா மனசுல போட்டு நீங்க யோசுச்சுட்டு இருந்த உங்க லவ் மேட்டர இன்னைக்கு வீட்டுல சொல்லிடுங்க. முதல்ல உங்க அம்மாட்ட சொல்லுங்க. அம்மாட்ட கிரீன் சிக்னல் வாங்குனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம். தைரியமா போய் தெளிவா பேசுங்க.
கும்பம்
நீங்க சரியா பேசுனாலும் உங்க லவ்வர் கொஞ்சம் கரறா பேசுவாங்க. சோ அதுக்காக நீங்க முகத்த தூக்கி வெச்சுக்க வேண்டாம். அவங்ககிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்க உங்க நிலமைய புருஞ்சுப்பாங்க. எங்காவது அவங்க கூப்டாங்கனா போய்ட்டு வாங்க.
மீனம்
ஒரு யுவன் ஷங்கர் ராஜா பாடல் மாதிரி போய்ட்டு இருந்த உங்க லவ்வுல, கண்ணுபட்ட மாதிரி டபள்யூ டபள்யூ எஃப் மாதிரி போய்ட்டு இருக்கு. நீங்களா பேசாத வரைக்கும் அது இப்படியே தான் தொடரும். ஒரு நல்ல லவ் சாங்கா உங்க லவ்வருக்கு அனுப்பீட்டு ஒரு கிஸ் எமோஜியும் சேத்து அனுப்புங்க. மீண்டும் உங்கள் காதல் தீபம் நல்லா பிரகாசமா ஒளிரும். வாழ்த்துகள்.