மேலும் அறிய

 Bhogi Festival: போகி பண்டிகைக்கு 12 ராசிக்காரர்கள் கொளுத்தவேண்டியது என்ன? ஜோதிட நிபுணர் சொல்வது என்ன?

தை மாதம் முதல் நாளுக்கு முந்தைய நாளான மார்கழி மாத கடைசி நாளை போகி பண்டிகையாக நாம் கொண்டாடி வருகிறோம். போகியில் 12 ராசிக்காரர்களும் எந்த பழக்கங்களை விடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் போகி.  பொங்கலுக்கு ஒரு நாளைக்கு முந்தைய தினம் தான் போகி  அந்த போகி பண்டிகையின் போது நம் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்  அதற்கு பதிலாக புதிய பொருட்களை வீட்டில் வாங்கி அலங்காரம் செய்து பயன்படுத்துவர்.  அப்படி 12 ராசிக்காரர்கள்  தங்களிடம் உள்ள பழையதை கழிக்க வேண்டும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு குண நலங்களும் செயல்பாடுகளும் உண்டு.  அப்படி வருகின்ற போகி பண்டிகைக்கு எந்த குண நலன்களை விட்டால்  நல்லது.  எந்த குண நலன்களை சேர்த்துக் கொண்டால் நல்லது  என்று பார்க்கப் போகிறோம்.

மேஷ ராசி :

மேஷ ராசி வாசகர்களே,  உங்களுடைய வாழ்வில் நீங்கள் விட வேண்டியது கோபத்தை. சிறிய காரியத்திற்கும் பெரிய அளவில் கோபம் உங்களுக்கு பொங்கி வந்துவிடும்.  அப்படி கோபப்படும் நீங்கள்  பிரச்சனையான சமயங்களில் மௌனம் காப்பது நல்லது. பொதுவாக அனைத்து ராசிக்காரர்களுக்கும் கோபம் வரும் ஆனால் மேஷ ராசிக்கு கோபத்தால் தங்களின் முக்கியமான பொறுப்புகளில் இருந்து அகற்றப்படுவீர்கள் அல்லது  நல்ல காரியங்கள் அதன் மூலம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே கோபத்தை நீங்கள் கழித்து விட்டால் போகி பண்டிகையிலிருந்து உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.  கோபத்தை உங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கி சிரிப்பை உங்கள் வாழ்க்கையில் நிரந்தரமாக்குங்கள்.

ரிஷப ராசி :

ரிஷப ராசி வாசகர்களே  இந்த போட்டிக்கு பண்டிகைக்கு நீங்கள் உங்களிடம் இருந்து விட வேண்டியவை  மிகவும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற அந்த ஆசைதான்.  மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் ரிஷப ராசிக்கு மிகுந்த ஆடம்பரமாக இருக்க வேண்டும்.  அனைவரும் நம்மைப் பார்த்து பொறாமை பட வேண்டும்.  மற்றவர்களை காட்டிலும் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.  நிச்சயமாக அந்த நினைப்பு தவறில்லை. ஆனால் உங்களுடைய ராசிக்கு ஆறாம் அதிபதியும்  சுக்கிரனின் வீடாக வருவதால் ஆடம்பரமே உங்களுக்கு சில நேரங்களில் அழிவைக் கொண்டு வரலாம்.  ஆகையால் நிச்சயமாக நீங்கள் எங்கு சென்றாலும் எளிமையாக செல்லுங்கள் வாழ்க்கையை எளிமையாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். அந்த தருணம் முதல் நீங்கள் பணக்காரர் அல்ல கோடீஸ்வரர் ஆவீர்கள் என்பது எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

மிதுன ராசி :

மிதுன ராசி வாசகர்களே மிதுன ராசிக்கு முக்கியமாக ஆறாம் இடமாக வருவது செவ்வாயினுடைய வீடு,  நிலம், மனை போன்ற விஷயங்களை வாங்கினாலோ அல்லது விற்றாலோ அதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.   ஒருவேளை இதற்கு முன்பாக நீங்கள் இந்த விஷயங்களில் அலட்சியமாக இருந்திருக்கலாம் அப்படி இருந்தால் அதை விட்டு விடுங்கள்.  இல்லையென்றாலும் பரவாயில்லை இதன் பின் வருகின்ற காலங்களில் வீடு மனை நிலம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.  உங்களுக்கு ஒரு இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற வாய்ப்பு வரும் பட்சத்தில், செல்ல வேண்டிய இடம் வேலை நிமித்தமாகவோ அல்லது சொந்த விஷயமாகவோ இருந்தாலும் கூட அதை ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து இடம் மாற்றம் செய்வது நல்லது.  உங்களுடைய அனைத்து தேவைகளும் நிறைவேறட்டும்.

கடக ராசி :

கடக ராசி வாசகர்களே உங்களுடைய ஆறாம் வீடான குரு பகவானின் வீடு உங்களுக்கு சற்று எச்சரிக்கை தருவதாக இருக்கும்.  நேரம் தவறி சாப்பிடுவது  அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரமாக முடிவது  மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து. அதன் மூலம் கெட்ட பெயர் சம்பாதிப்பது போன்ற  சிக்கலான விஷயங்களில் நீங்கள் அடிக்கடி மாற்றிக் கொள்ள நேரிடும்.  போகி பண்டிகை இது போன்ற காரியங்களில் இதற்கு மேல் ஈடுபடும் போது, சற்று ஜாக்கிரதையாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொள்ளுங்கள். 

கடக ராசிக்கு குரு பகவான் ஆறாம் வீடு ஆறாம் அதிபதியும் மற்றும் ஒன்பதாம் வீடு ஒன்பதாம் அதிபதியாக வருவதால் நிச்சயமாக இந்த விஷயங்களில்  கடக ராசி வாசகர்கள் சற்று கவனமாக இருங்கள்.  உங்களுக்கு தெரிந்தவற்றை அடுத்தவர்களிடம் சொல்லி அவர்களுக்கு வழிகாட்டியாய் மாறும் போது சற்று கவனமாக யோசித்து ஒரு காரியங்களை தெளிவுபடுத்துவது நல்லது.  நீங்கள் நல்ல எண்ணத்தில் வழிகாட்டியாக  ஒரு சில விஷயங்களில் இருந்து இருப்பீர்கள். ஆனால் மற்றவர்களுக்கு அது பாதகமாக போய் முடிய வாய்ப்பு உண்டு.  எனவே அது போன்ற காரியங்களில் சற்று கவனமாக இருங்கள்.

சிம்ம ராசி :

சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ஆறாம் வீடான  மகர ராசியின் அதிபதி சனி பகவான்  தொழில் காரகன் உத்தியோக காரகன் எனவே சிம்ம ராசிக்காரர்கள் வேலை ஸ்தலங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.  நீங்கள் சிம்ம ராசியாகவோ அல்லது சிம்ம லக்னமாகவோ இருக்கலாம். இருப்பினும் இதுபோன்ற காரியங்களில் அதாவது வேலை சம்பந்தமாக தொழில் சம்பந்தமாக அதை சுற்றி நடக்கும் விஷயங்கள் சம்பந்தமாக சற்று கவனமாக இருங்கள்.  வேலை சம்பந்தமாக வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.  ஒரு காரியத்தை எடுத்து அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்படுவதை தவிர்த்து விட்டு எடுத்த காரியத்தில் வேலை நிமித்தமாக அதை உடனுக்குடன் முடித்து மேல் அதிகாரியிடம் சமர்ப்பிப்பது நல்லது. 

சிம்ம ராசி சிம்ம லக்ன காரங்கள் வேலை ஸ்தலத்தில் சற்று கெட்ட பேரையும் அவமானத்தையும் எதிர்பாராத விதமாக வாங்கக்கூடும். நீங்கள் நல்ல எண்ணத்தில் செய்யப் போய் அது தீங்காய் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.  எனவே இந்த போகி பண்டிகையின் போது பழையன கழிதலாக வேலையில் சற்று  மெத்தனமாக இருப்பதை விடுத்து ஒவ்வொரு காரியத்திலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொங்கல் பண்டிகையிலிருந்து உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்.

கன்னி ராசி :

கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ஆறாம் வீடான கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான் காட்டு ராசியாக வருவதால் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது சற்று கவனமாக செல்ல வேண்டும். பழைய வீடு பழைய வாகனம் வாங்குவோர்  அதில் கவனமாக இருத்தல் நல்லது.  சாப்பிடும் உணவுகளில் வாயு தொல்லை ஏற்படாத ஏற்படுத்தாத உணவுகளை சாப்பிடுவது நல்லது.  இந்த போகி பண்டிகைக்கு நீங்கள் விட வேண்டியது  அடுத்தவரை அதிகப்படியாக நம்புவது. 

யாராக இருந்தாலும் அதிகப்படியான நம்பிக்கையை விடுத்து சற்று நிதானமாக  நடந்து கொள்வது நல்லது.  வாழ்க்கையில் நீங்கள் எந்த விஷயத்தை சாதிக்க வேண்டும் என்றாலும், அதில் நிதானத்தையே கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களை அதிகப்படியாக நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதில் சில ஏமாற்றங்களை தான் நீங்கள் சந்திப்பீர்கள்.  நமக்கு நம்பகத்தன்மையுள்ள ஆட்களாக நாம் நினைத்திருக்கும் போது அவர்கள் உங்களை ஏமாற்றக்கூடும்.  இந்த போகி பண்டிகைக்கு பழையன கழிதலாக உங்களிடம்  விசுவாசமாக இருப்பவர் இடத்தில் நம்பிக்கையாகவும்,  மற்றவர்களிடத்தில் சற்று ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

துலாம் ராசி:

துலாம் ராசி வாசகர்களே உங்களுக்கு ஆறாம் அதிபதியாக குருபகவானின் மீத வீடு வருகிறது.  அடுத்தவர் உபதேசம் என்று வரும் பொழுது அதை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுடைய வாழ்க்கை இருக்க போகிறது.  நல்ல உபதேசங்களை நீங்கள் கைவிடாமல் அதை கவனத்துடன் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.  அவர்கள் என்ன கூறுவது நான் என்ன செய்வது என்று அலட்சியமாக இருக்காமல், அடுத்தவர்கள் கூறும் அறிவுரைகளை சற்று காது கொடுத்து கேட்டு அதன் மூலம் நடக்க முயற்சி செய்யுங்கள்.

ஒருவேளை அது உங்களுக்கு நல்லதாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு கெட்டதை விடுத்து வாழ்க்கையில் முன்னேற பார்க்கலாம்.  துலாம் ராசி பொருத்தவரை அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்து விடாது. அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் போராட வேண்டி வரும். அப்படி நீங்கள் போராடிய விஷயங்களை சுலபமாக  என்றைக்கோ அடைந்திருக்க முடியும் அதற்கான அறிவுரையை நீங்கள் முன்பே கேட்டிருந்தால் பல நல்ல காரியங்கள் உங்கள் வயது இளமையிலேயே கிடைத்திருக்க வாய்ப்புண்டு.  நான் போகி பண்டிகையில் அடுத்தவர் அறிவுரை கேட்டு, அதன்படி அதிலிருக்கும் நல்லவற்றை எடுத்து வாழ்க்கையில் வெற்றி காண்பது நல்லது.

விருச்சக ராசி :

விருச்சிக ராசி வாசகர்களே உடனிருந்த நண்பர்களே, உங்களுக்கு சில சமயங்களில் பகைவர்கள் ஆவார்கள். அப்படி என்றால் நல்ல நண்பன் யார்? கெட்ட நண்பன் யார்? என்பதை நீங்கள் இனம் கண்டுபிடித்து அவர்களிடத்தில் விலகி இருந்தாலே உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பாதி பிரச்சனைகள் நிவர்த்தி ஆகும்.  நீங்கள் எதிலும் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். அப்படி உங்கள் வாய் உங்களுக்கு எதிரியாக சில நேரங்களில் மாறக்கூடும். இந்த போகி பண்டிகை இடம் பொருள் ஏவல் பார்த்து யாரிடம் பேச வேண்டும்? எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை கவனமாக பேசுங்கள்.

உள்ளே எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக உங்களுடைய மனதில் பட்டதை பளிர் என்று பேசக்கூடிய தன்மை உடையவராக நீங்கள்  இருப்பீர்கள்.  நிச்சயமாக அந்த  வெளிப்படை தன்மை என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. ஆனால் நீங்கள்  ரகசியத்தை பாதுகாக்காமல் அது வெளியில் சொல்வதன் மூலம் உங்களுடைய கௌரவம் குறைக்கப்பட்டு, அதன் மூலம் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புண்டு.  நல்லதே நினைப்போம் நல்லதே  நடக்கும்.  

தனுசு ராசி :

தனுசு ராசி வாசகர்களே  உங்களுக்கு ஆறாம் விடாத சுக்கிரனுடைய ரிஷப ராசி வருகிறது. சில நேரங்களில் ஆடம்பரமே உங்களுக்கு அசவுகரியத்தை கொண்டு வரலாம். அதிகமான  பணம் உங்களிடத்தில் இருந்தாலும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் அடுத்தவர்களை காட்டிலும் உயர வேண்டும் என்று கடன் வாங்கியாவது பொருட்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அப்படி நீங்கள் ஒரு இடத்தில் கடன் வாங்கும் போது அந்த கடன்களுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.  நிச்சயமாக அப்படி ஒரு சூழல் உங்களுக்கு வரும் பொழுது தலைகுனிவு ஏற்படுத்த அணை செய்யும். 

அந்த வகையில் இந்த போகிக்கு பண்டிகையில் நீங்கள் அதிகப்படியான ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் இருக்கின்றவற்றை வைத்து கடன் வாங்காமல் வாழ்க்கையை மெதுவாகவும், பொறுமையாகவும் நகர்த்தி சென்றால் அதன் காலத்தில் உங்களுக்கு வர வேண்டிய அனைத்து நல்ல முன்னேற்றமும் வந்து சேரும்.  இப்போதுதான் ஒரு வீடு வாங்கி அதற்கான கடனை கட்டி முடித்தேன். மீண்டும் ஒரு வாகனம் வாங்கி கடன் கட்ட வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் ஆடம்பரத்திற்காக செலவு செய்யாமல் ஒவ்வொரு படிகளிலும் சேமித்து வைத்து அதன் மூலம் பொருட்களை வாங்கிச் செல்வது மிகமிகச் சிறப்பு.  இந்த போகி பண்டிகையில் பழையன கழிதலாக உங்களிடத்தில் உள்ள அதிகப்படியான ஆசையை விடுத்து இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.  இந்த பொங்கல் பண்டிகை உங்களுக்கு எல்லா வளமும் நலமும்  பெருக செய்யும்.

 மகர ராசி :

மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் அதிபதியாக மிதுன ராசி வரும்.  இந்த போகி பண்டிகைக்கு நீங்கள் கொடுத்த வேண்டியது எப்பொழுது எங்கே எப்படி பேச வேண்டும்? என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.  நீங்கள் அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.  நீங்கள்  உங்களுடைய நண்பர்களுக்கும் அல்லது தெரிந்தவருக்கோ  நன்மையே நடக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பீர்கள். அப்படி இருந்து நீங்கள் பேசும் பேச்சு உங்களுக்கு எதிராக திரும்பி இருக்கும். 

மகர ராசிக்கு ஆறாம் இடம் மிதுன ராசியாக வருவதால்,  நீங்கள் முடிந்தவரை புதுபுது நண்பர்களை உருவாக்காமல் இருக்கின்ற நண்பர்களுக்கு உண்மையாக இருந்து புதிய நண்பர்களை முழுமையாக நம்பியதற்கு பின்பாக அவர்களை அருகில் சேர்க்க வேண்டும்.  அனைவரையும் நண்பர்களாக பாவிக்கும் உங்களுக்கு ஏமாற்றுக்காரர்களும் உங்களுக்கு நண்பர்களாக வருவதால் நண்பர்களிடமே ஏமாறும் சூழல் உங்களுக்கு உருவாக வாய்ப்பு உண்டு.  சில சமயங்களில் உங்களுடைய பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறும்.  இந்த போகி பண்டிகையில் நீங்கள் பழையன கடிதலாக அடுத்தவர்களின் நம்பி ஏமாறாமல் எந்த ஒரு காரியத்திலும் நீங்களாக சென்று மூக்கை நுழைக்காமல் உங்களுடைய பேச்சில் கவனமாக இருந்து நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நிச்சயமாக வாழ்வில் வெற்றி உங்களைத் தேடி வரும்.  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் வணக்கம்.

கும்ப ராசி :

கும்ப ராசி வாசகர்களே உங்களுக்கு கடகம் ஆரம்ப வீடாக வருகிறது. இந்த போகி பண்டிகைக்கு நீங்கள்  உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடாக இருக்க வேண்டும். உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறது அல்லது புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால் அதை இன்றோடு நிறுத்தி விடுங்கள்.  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை உண்ண வேண்டும்? எதெல்லாம் நீங்கள் உண்ணுவதற்கு தகுதியானது? என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதை உண்ண பழகிக் கொள்ளுங்கள்.  நோய் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள்.

எதையும் சாதித்து விடலாம் என்ற தெம்பு உங்களுக்கு இயல்பாக இருக்கும். இருப்பினும்  காரியம் நடக்கும் வரை பொறுமையாக காத்திருங்கள்.  வேகம் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக  புதிய முடிவுகளை எடுப்பது தவிர்த்து விடுங்கள்.  கால புருஷ தத்துவத்திற்கு 11ம் ராசியில் உங்களுடைய சந்திரன் அமர்ந்திருப்பதால் இயல்பாகவே சிறு வயது முதலே நீங்கள் நன்றாக  வளர்ந்து இருப்பீர்கள். ஆனால் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் வரை பொறுமையாக காத்திருந்து அதற்கான முயற்சிகளில் மேற்கொள்ளுங்கள்.  இந்த போகிப் பண்டிகையும் பொங்கல் பண்டிகையும் உங்களுக்கு இனிமையான பண்டிகையாக அமையட்டும்.

மீன ராசி :

மீன ராசி வாசகர்களே இந்த போகி பண்டிகை நீங்கள் பழையன கழிதலாக உங்களுக்கு சம்பந்தம் இல்லாத எந்த காரியத்திலும் தலையிடாமல் இருங்கள். உங்களுக்கு  தெரிந்த விஷயமாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு அதை நீங்கள் கூறும் போது சிலர் அதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். உங்களுக்கு தொடர்பில்லாத அல்லது சம்பந்தம் இல்லாத காரியங்களில் நீங்கள் ஈடுபடவே கூடாது.  உதாரணமாக உங்கள் நண்பர் இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்று இருக்கிறார்

.என்றால் நண்பா எனக்கு ஒரு கடை தெரியும் அங்கே சென்று வாங்கலாம் என்று நீங்கள் அவரை கூட்டி செல்லக்கூடாது.  அப்படி செல்லும் பட்சத்தில் அவர் வாங்கும் வாகனம் அவருக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் உங்களையே தினமும் சபித்துக் கொண்டிருப்பார்.  அப்படி என்றால் சம்பந்தமில்லாத பிரச்சனையில் நீங்கள் நல்லது செய்ய போய் கெட்டது அமைந்ததாக தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.  இது போன்று மீன ராசிக்காரர்கள் பழையன கழிதலாக உங்களுக்கு தொடர்பில்லாத சம்பந்தமில்லாத எந்த ஒரு காரியத்திலும் வீணாகத் தலையிட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்  என்று முடிவெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு  கடனை வாங்கி  காரியங்களை செய்வதையும் தவிர்த்து விடுங்கள்.  அரசு சார்ந்த காரியங்கள்  சிலவற்றில் கவனமாக இருங்கள்.  நீங்கள் உதவி செய்தவர்களே உங்களுக்கு உபத்திரவம் செய்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ன உதவி செய்ய வேண்டும் என்பதை பார்த்து பொறுமையாக யோசித்து செய்வது நல்லது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget