Astrology: ஜூன் 3 ஆம் தேதி நேர்கோட்டில் 6 கிரகங்கள்! - 12 ராசிக்காரர்களுக்கும் நடக்கப் போகும் அதிசயம்!
ஜூன் 3ஆம் தேதி வரிசையாக நேர்கோட்டில் ஆறு கிரகங்கள் வரப்போகிறது. என்னென்ன கிரகங்கள் எந்தெந்த வீட்டில் வாசம் செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம் .
அன்பார்ந்த வாசகர்களே, ஜூன் 3ஆம் தேதி வரிசையாக நேர்கோட்டில் ஆறு கிரகங்கள் வரப்போகிறது. என்னென்ன கிரகங்கள் எந்தெந்த வீட்டில் வாசம் செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம் .
மேஷத்தில் செவ்வாயும் , அதே மேஷத்தில் சந்திரனும் , ரிஷபத்தில் குருவும் , ரிஷபத்தில் சூரியனும், ரிஷபத்தில் யுரேனஸ் , அதே ரிஷபத்தில் புதன், மீனம் நெப்டியூன் என பிரமாண்டமான கிரகங்களின் வரிசை நடக்கப்போகிறது. கிரகங்கள் வரிசையாக இருப்பது மிகப்பெரிய யோகத்தை உண்டாக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவும் சந்திரன் உச்சமாகும் ரிஷபத்தில் அத்தனை கிரகங்களும் ஒன்று சேர்ந்து பூமிக்கு ஒளியை கொண்டு வருவது மிகப்பெரிய அசாத்திய யோகங்களை அனைத்து ராசியினருக்கும் கொடுக்கும். ஆறு கிரகங்கள் ஒன்று கூடும் அந்த நாளில் செய்ய வேண்டியது என்ன? என வாங்க பார்க்கலாம்.
ஜூன் 3 ஆம் தேதி நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?
அன்பார்ந்த வாசகர்களே, ஜூன் மூன்றாம் தேதி வரிசையாக நிற்கின்ற கிரகங்களுக்கு நீங்கள் எவ்வளவு பிரீத்தி செய்தாலும் அது தகும். காரணம் சந்திரன் அப்பழுக்கற்றில்லாத ஒரு கிரகம் அவை உச்சமாகின்றது ரிஷபத்தில் அப்படிப்பட்ட ரிஷபத்தில் புதன் , சுக்கிரன், சூரியன் , குரு என பிரம்மாண்டமான கிரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன . இப்படியான சூழ்நிலையில் நீங்கள் வீட்டில் விரதம் இருந்தால் மிக சிறப்பான பலன்களை கொண்டு வரும் அதே போல விரதம் இருக்க முடியாதவர்கள் பூஜை அறையில் நித்தம் உங்களுக்கு பிடித்த தெய்வத்தை மனதார வழிபட்டு மகிழலாம் .
கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்து காட்சியளிக்கும் பொழுது மொத்த பலனாக ஒரு ஜாதகர் அனுபவிக்க வாய்ப்புண்டு அந்த பலன்கள் அவரவர் விதியின் வசப்படி தான் நடக்கும் அப்படியான விதி உங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றால் தெய்வ பக்தி ஒன்று சிறந்த வழி தெய்வத்தின் பாதத்தை பிடித்தால் உங்களுக்கு கிரகங்கள் எவ்வளவு நன்மை செய்யும் என்பதை மூல நூல்கள் கூறுகின்றன.
விரதம் இருக்கும் முறை :
கிரகங்கள் ஒன்றாக இருக்கும் நாளில் நீங்கள் விரதம் இருக்க வேண்டும் என்றால் முழுவதுமாக பட்டினி கிடக்க வேண்டும் என்று இல்லை. காலையில் எழுந்தவுடன் பால் மட்டும் அருந்திவிட்டு மதியம் சிறிய பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் மாலையிலும் பால், பழம் போன்றவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அன்று அசைவ உணவுகளை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் . குறிப்பாக வாழ்க்கையில் மிகுந்த அஷ்டத்தில் பயணிப்பவர்கள் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள் நிச்சயமாக அசைவ உணவுகளை அன்று தவிர்த்து விட வேண்டும். விரதம் இருந்தால் தான் கடவுள்கள் நமக்கு பலனளிப்பார்கள் என்பது இல்லை.
இருந்தாலும் நம்முடைய வைராக்கியத்திற்காக இருப்போர் இருக்கலாம் அப்படி இல்லை என்றால் காலையிலேயே குளித்துவிட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று மனதார இஷ்ட தெய்வத்தை நீங்கள் வழிபடலாம் .
குரு + சூரியன்+ சுக்கிரன்+புதன்
நான்கு கிரகங்கள் ரிஷபத்தில் அமர்ந்திருப்பதால் 12 ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் .
மேஷம் : தன வருவாய் தாராளமாக இருக்கும்
ரிஷபம் : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
மிதுனம் : சுப விரயங்கள் உண்டு
கடகம் : எடுத்த காரியங்களில் வெற்றி
சிம்மம் : உத்தியோகத்தில் உச்சத்தை தொழுவீர்கள்
கன்னி : உங்களின் வழிகாட்டுதல்களின் வேலை முடியும்
துலாம் : திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டு
விருச்சகம் : எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்
தனுசு : எதிரிகள் அழிவார்கள் கடன்கள் குறையும்
மகரம் : புகழ் உண்டு
கும்பம் : இடம், மனையினால் லாபம் உருவாகும்
மீனம் : தொட்டது தொடங்கும், நினைத்தது நடக்கும்
இப்படியாக ஆறு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு ராசிகளுக்கும் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய வெற்றியை கொண்டு வந்து சேர்க்க போகிறது . பொதுவாக மக்கள் வெற்றி என்பது இன்றைக்கு கிரகங்கள் மாறி நாளைக்கு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் கிரகங்கள் அப்படி வேலை செய்வது இல்லை. பொதுவாக கிரகங்கள் ஒரு வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே அந்த வீட்டின் செயல்பாடுகள் ஆரம்பம் ஆகிவிடும்.
கிரகங்கள் அந்த வீட்டுக்கு வந்து ஒளியை கொடுத்தால் அன்றையிலிருந்து உங்கள் வாழ்க்கை மாற ஆரம்பிக்கும். அதைத் தவிர்த்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவது என்பது முடியாத காரியம். எந்த ஒரு காரியத்தில் ஜெயிக்க வேண்டுமானால் அதற்கு நிச்சயமாக உழைப்பு மிக மிக அவசியம் உழைக்காமல் எந்த ஒரு பொருளும், பணமும், வேலையும், நடக்கப்போவதில்லை . இப்படியான சூழ்நிலையில் ஆறு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் ஒளி வீச ஆரம்பிக்க போகிறது. அந்த நாளை தெய்வ பக்தியோடு நீங்கள் நகர்த்தி சென்றால் அன்றையிலிருந்து கிரகங்களின் ஒளி உங்கள் ராசியின் மீது பட்டு நீங்கள் வெற்றி அடைவீர்கள் .
செவ்வாய் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது நிச்சயமாக வழக்குகளில் வெற்றி கோர்ட் கேஸ் என்று இருந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பு . இடம் மனை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை பட்டவர்களுக்கு அது அனுகூலமாக முடிதல் . போன்ற எண்ணற்ற பலன்கள் நடைபெறும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மனதார உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். நீங்கள் நினைத்த காரியம் நிச்சயமாக நடைபெறும் .