சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர்: பசுமைக்கு மக்கள் இயக்கத்தின் பணிகள் தீவரம் !
"சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர் – பசுமை நிறைந்த விருதுநகர்" என்ற உயரிய இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

"சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர் – பசுமை நிறைந்த விருதுநகர்" திட்டத்தின் கீழ் கூட்டுப்பணியில் சீமைக் கருவேல மரங்கள் (Mass eradication of Prosopis juliflora) அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளது.- மாவட்ட ஆட்சித்தலைவர், தகவல்
நில மீட்பு மற்றும் பசுமை மேம்பாட்டு நடவடிக்கை
சீமைக் கருவேலம் (Prosopis juliflora) என்பது வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனமாகும். இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக பூர்வீக தாவர இனங்கள் அழிவடைவதுடன், உயிரினப் பன்முகத்தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தின் இயற்கை வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறைவதோடு, மேய்ச்சல் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதுடன், நில மீட்பு மற்றும் பசுமை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.
விருதுநகர் செழுமை கருவூலம்
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos. 16485 & 14699 of 2015 மற்றும் W.P. No. 3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "விருதுநகர் செழுமை கருவூலம்" என்ற சிறப்பு முன்முயற்சியின் கீழ், அரசு நிலங்கள் மற்றும் வளாகங்களில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, பூர்வீக மர இனங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பணிகளை பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. "விருதுநகர் செழுமை கருவூலம்" அரசு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள், நில உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பணிகள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.07.2026 அன்று நடைபெறவுள்ளது. இம்முயற்சியில் தன்னார்வத்துடன் அனைவரும் பங்கேற்று பெருமளவு சீமைக் கருவேல மரங்களை அகற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பசுமை நிறைந்த விருதுநகர்
மேற்கொள்ளப்படும் பணிகளின் அகற்றுதலுக்கு முன் மற்றும் பின் (Before & After) புகைப்படங்கள், இட விவரங்கள், அகற்றப்பட்ட பரப்பளவு, நடப்பட்ட பூர்வீக மர இனங்கள் மற்றும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை selumaikaruvoolamvnr
ட்ரெண்டிங் செய்திகள்






















