மேலும் அறிய

வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!

விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு ரூ.94,500-  மதிப்பீட்டிலான நிவாரணத்தொகையை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு ரூ.94,500-  மதிப்பீட்டிலான நிவாரணத் தொகையை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, வழங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வெப்ப அலை ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்ததாவது, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகமான வெப்ப அலை ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலமாக 100சதவீதம் மானியத்தில் 40 பண்ணைக்குட்டைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைத்திட முன்வரலாம். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலமாக 25 உலர்களம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  விரைவில் உலர்களம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அறிக்கை செய்யப்பட்ட கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 4 இடங்களில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாத்திட வனத்துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்பாராத வகையில் வனவிலங்குகளால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் 4 விவசாயிகளுக்கு ரூ.94,500- மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகை இன்று(24.07.2026) வழங்கப்பட்டது. விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துணை இயக்குனர்(மேகமலை புலிகள் காப்பகம் திருவில்லிபுத்தூர்) ரவி மீனா, வேளாண்மை துணை இயக்குநர்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர்  சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.அ.அறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) த.வளர்மதி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி. இந்திரா, பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget