அரை குறை ஈரப்பதத்தில் விதைகள் முளைத்து கெட்டுப் போனதால் 2ஆம் முறையாக விதை ஊண்றும் விவசாயிகள்
கடந்த 23 நாட்களில் முழுமையாக எந்த பகுதியிலும் மழை பெய்யாமல் சுழி சுழியாக சாரல் மழை பெய்தது. மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்காச்சோளம் ஏக்கருக்கு எட்டு கிலோ வீதம் விதை ஊன்றினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு ராவி பருவத்தில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மாணவர் நிலங்களில் கடந்த ஆவணி மாத இறுதி முதல் மக்காச்சோளம், பருத்தி, வெள்ளைச் சோளம், சிவப்பு சோளம் போன்றவற்றை விவசாயிகள் விதைப்பு செய்தனர். கடந்த 23 நாட்களில் முழுமையாக எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை. ஆங்காங்கே சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோள விதிகளை ஏக்கருக்கு எட்டு கிலோ வீதம் ஊன்றியுள்ளனர். அதுபோக உளுந்து பாசிப்பயிறு ஏக்கருக்கு 6 கிலோ வீதமும், பருத்தி ஏக்கருக்கு 500 கிராம் வீதமும், வெள்ளைச் சோளம் ஏக்கருக்கு 3 கிலோ வீதமும் விதைப்பு செய்தனர். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வட்டாரங்களில் அரைகுறையாக மழை பெய்த நிலையில் தொடர்ச்சியாக மழை இல்லாததால் விதைகள் சுமாரான ஈரப்பதத்தில் முளைத்து தற்போது நிலவி வரும் வெயில் மற்றும் காற்றுக்கு உழைப்பிலேயே வெம்பி கெட்டுவிட்டது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் புரட்டாசியில் கடந்த 23 நாட்களில் இன்னும் மழை பெய்யவில்லை. ஏற்கனவே ஒருமுறை உழவு செய்ய உரமிட விதை ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ஒரு பத்தாயிரம் வரை செலவு செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மக்காச்சோள விதையை மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஊன்றி வருகின்றனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறும்போது, “மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்காச்சோளம் ஏக்கருக்கு எட்டு கிலோ வீதம் விதை ஊன்றினர். உளுந்து, பாசி ஏக்கருக்கு ஆறு கிலோ வீதமும், பருத்தி ஐநூறு கிராம் வீதமும், வெள்ளைச் சோளம் ஏக்கருக்கு மூன்று கிலோ வீதமும் விதைப்பு செய்தனர். போதிய சராசரி மழை பெய்யாமல் அரைகுறையாக பெய்து தொடர்ச்சி மழை இல்லாததால் விதைகள் சுமாரான ஈரப்பதத்தில் முளைத்து தற்போது நிலவிவரும் அக்னிவெயில் மற்றும் காற்றுக்கு விதைகள் முளைப்பிலேயே வெம்பிவிட்டது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் புரட்டாசி 22ந் தேதி பிறந்தும் இன்னும் மழை பெய்யவில்லை. ஏற்கனவே ஒருமுறை உழவு செய்ய, உரமிட, விதை ஆகியவற்றுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை செலவு ஏற்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மக்காச்சோளம் விதையை மழை பெய்யும் என நம்பி ஊன்றுகின்றனர். வடகிழக்கு பருவமழை அறிகுறி தெரியவில்லை. கோடை வெயில் போன்று புரட்டாசி மாதம் வெயில் சுட்டெரிக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஐப்பசி பிறந்தவுடன் கொத்தமல்லி விதைப்பு செய்ய வேண்டும், அதனுடன் சூரியகாந்தி விதைப்பு செய்யவேண்டி உள்ளது. பட்டம் தவறி பெய்ய உள்ள மழை விவசாயத்திற்கு ஏற்றதாக இராது. கிராமப்புறங்களில் குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுமோ என அஞ்ச வேண்டி உள்ளது. இருமுறை அழித்து விதைக்க வேண்டிய நிலை இந்த வருடம் ஏற்பட்டுள்ளது. எனவே துவண்டு போயுள்ள விவசாயிகளுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்கிறார்.