மேலும் அறிய

திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என புகார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும். இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.


திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில் திருமாளம் சக்கர கொத்தங்குடி மேணாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிர் அறுவடை செய்த விவசாயிகள் அந்தப் பகுதியில் உள்ள கோவில் திருமாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தினால் தங்களது நெல் மூட்டைகளை கோவில்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய வாயிலிலும் அடுக்கி வைத்து காத்திருக்கக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 15 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில்அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் அறுவடை செய்து 15 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருப்பதால் மழை பெய்தால் மீண்டும் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை நிலவும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

இந்த வருடம் குறுவை நெருப்பை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தமிழக அரசு அறிவிக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாதது குறித்து பலமுறை  அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் உடனே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget