தைப்பொங்கலுக்கு தயாராகும் கரும்பு..நல்ல விளைச்சலால் தேனி விவசாயிகள் மகிழ்ச்சி..!
சாகுபடி செலவு அதிகரித்துள்ளதால் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை 400 ரூபாய்க்கு மேல் விற்றால்தான் விவசாயிகள் வருவாய் ஈட்டமுடியும்.
தேனி மாவாட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, காமட்சிஅம்மன் கோவில், மஞ்சளார், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்ட நிலையில் தற்பொழுது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளாமல் கைவிட்டுள்ளனர்.
Japan Earthquake: ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு..
இதேபோல் சின்னமனூரில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோர வயல்வெளி பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வருடந் தோறும் செங்கரும்பினை விவசாயம் செய்து வருகின்றனர். தைப்பொங்கலுக்காக பத்து மாதங்கள் வரை விளைவிக்கப்படும் இந்த செங்கரும்புகளை சென்னை, திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து கொள்முதல் செய்கின்றனர். மேலும் தமிழக அரசின் மூலம் விநியோகிக்கப்படும் பொங்கல் தொகுப்பிற்காக செங்கரும்புகளை கூட்டுறவுதுறையினரும் அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்வது வழக்கம்.
பெரியகுளம் பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகள் கடந்த ஆண்டு 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டின் விலை 320 முதல் 350 ரூபாய் வரை விலை போன நிலையில், இந்தாண்டு உரம் விலை, வேலை ஆட்கள் கூலி, உள்ளிட்ட சாகுபடி செலவு அதிகரித்துள்ளதால் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை 400 ரூபாய்க்கு மேல் விற்றால்தான் விவசாயிகள் வருவாய் ஈட்டமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு - புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்
மேலும் கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பொருட்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு முழு கரும்பு வழங்க விவசாயிகளிடம் 33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளதால் பொங்கல் கரும்பு விவசாயிகளுக்கு ஓரளவிற்கு வருவாய் கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள், இந்த ஆண்டு தமிழக அரசு கொள்முதல் செய்யும் ஒரு கரும்பிற்கு ஐந்து ரூபாய் வரை விலையேற்றம் செய்து கொள்முதல் செய்தால் இந்த ஆண்டும் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என கூறுவதோடு , தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சின்னமனூர் பகுதியில் இந்த வருடம் பெய்த பருவ மழையின் காரணமாக செங்கரும்புகளை விளைவிக்க கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களின் பணிகள் அதிகரித்து ஊதியச் செலவினங்கள் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதல் விலைக்கு செங்கரும்புகளை அரசு மற்றும் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து விவசாயிகளை லாபம் அடைய செய்தால் தான் இனிவரும் காலங்களில் கரும்பு விவசாயத்தினை ஊக்குவிக்கும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.