மேலும் அறிய

விவசாயிகள் மீது பொய் வழக்கு: மயிலாடுதுறையில் பிப். 5 முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்..

விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை: திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் 9 விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள "பொய் வழக்குகளை" உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூர் சம்பவம்: பின்னணி என்ன?

சமீபத்தில் நடைபெற்ற பொங்கல் திருநாளின் போது, விவசாயிகளின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது, அந்தச் சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் அவருடன் இருந்த 9 விவசாயிகள் மீது காவல்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், விவசாயிகளின் குரலை ஒடுக்குவதற்காகப் போடப்பட்ட "பொய் வழக்குகள்" என்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான பிணை நிபந்தனைகள், அவர்களின் அன்றாட விவசாயப் பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இடையே, ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிகளைச் சிறையில் அடைப்பதும், அவர்கள் மீது பொய் வழக்குகளைச் சுமத்துவதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. பொங்கல் போன்ற ஒரு புனிதமான நாளில் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. அந்தப் பொய் வழக்குகளையும், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையும் தமிழக அரசு நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்."

பிப்ரவரி 5 முதல் தொடர் உண்ணாவிரதம்

விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால், மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டத்தை வலுப்படுத்தப் போவதாகச் சங்கம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் மாவட்டம் தழுவிய அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி "தொடர் உண்ணாவிரதப் போராட்டம்" நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் மூன்று இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:

 * மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

 * மயிலாடுதுறை தாலுகா அலுவலகம்

 * வரலாற்று சிறப்புமிக்க கிட்டப்பா அங்காடி

மேற்கண்ட இடங்களில் ஏதேனும் ஒன்றில் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் மனுவில் கோரப்பட்டுள்ளது. ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்

*ஈசன் முருகசாமி மீதான வழக்குகளை ரத்து செய்க: திருப்பூர் மாவட்டத்தில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

*ஜனநாயக உரிமையைப் பாதுகாக்குக: அமைதியான முறையில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மின்சார வாரியமும், காவல்துறையும் கைவிட வேண்டும்.

* உடனடி விடுதலை: சிறையில் உள்ள அல்லது நிபந்தனைப் பிணையில் உள்ள விவசாயிகளை எவ்வித நிபந்தனையுமின்றி முழு விடுதலை செய்ய வேண்டும்.

பரபரப்பான சூழலில் குறைதீர் கூட்டம்

ஏற்கனவே மயிலாடுதுறையில் நிலத்தடி நீர் பாதிப்பு, ஆழ்துளை கிணறு மின் இணைப்பு மற்றும் பயிர் சேதம் எனப் பல்வேறு புகார்களால் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த "பொய் வழக்கு" விவகாரம் கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளைத் திருடர்களைப் போலக் கருதி வழக்குத் தொடர்வதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. மயிலாடுதுறையில் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கவுள்ள போராட்டம், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் உணர்வைப் பிரதிபலிக்கும்" எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
Embed widget