மேலும் அறிய

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு WhatsApp தகவல் சேவை: கொள்முதல் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு புதிய படி!

பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்ட கொள்முதல் விலையான லிட்டருக்கு அதிகபட்சம் ரூ.44- வரை உறுப்பினர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு WhatsApp வழியாக வழங்கும் புதிய சிறப்பு தகவல் சேவை: மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தொடங்கி வைத்தார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (05.10.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆவின் பால் கொள்முதல் நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆவின் நிறுவனம் இணைந்து சிறப்பு முன்னெடுப்பாக தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் வழங்கும் பாலின் அளவு மற்றும் தரம் குறித்த விவரங்கள் அடங்கிய  நிகழிட ஒப்புகைச் சீட்டு (Spot Acknowledgement) மற்றும் WhatsApp வழியாகக் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய சிறப்பு தகவல் சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தொடங்கி வைத்தார்.பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின்படி, பால் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, தடமறிதல் (Traceability) மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் நோக்கில் பால் பண்ணைகளில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருங்கிணைந்த தன்னியக்க முறை (End-to-End Automation) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முன்னோடி நடவடிக்கையாக (Pilot Project), மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், பால்வளத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து, தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்குத் தினசரி கொள்முதல் விவரங்களை WhatsApp மூலம் அனுப்பும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
 
இச்சேவைக்கான பிரத்யேக மென்பொருளானது, சேது இன்குபேஷன் கவுன்சில் (Sethu Incubation Council) வழிகாட்டுதலில், சேது பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை (IT) மாணவர்கள் M.S. கார்த்திகேயன் மற்றும் M. கெவினாஷ் வர்மன் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றடுக்கு கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) கீழ், கிராம அளவில் 629 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 1,41,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட நுகர்வோரின் தேவைகளுக்கேற்ப தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
கொள்முதல் விலையான லிட்டருக்கு அதிகபட்சம் ரூ.44
 
மேலும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்ட கொள்முதல் விலையான லிட்டருக்கு அதிகபட்சம் ரூ.44- வரை (தரத்தின் அடிப்படையில்) உறுப்பினர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இப்புதிய நடைமுறையின்படி, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பாலின் அளவு, தரம் (கொழுப்புச்சத்து, இதர சத்துக்கள்) மற்றும் சங்கக் குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் அடங்கிய நிகழிட ஒப்புகைச் சீட்டு (Spot Acknowledgement) உடனுக்குடன் வழங்கப்படுவதோடு, அப்போதே சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளின் கைபேசி எண்ணிற்கும் WhatsApp வாயிலாகக் குறுஞ்செய்தி சென்றடைகிறது. அரசு அறிவித்த தரத்திற்கு ஏற்ற கொள்முதல் விலை சங்கங்களுக்கும், சங்கத்தின் மூலமாக பால் வழங்கும் உறுப்பினர்களுக்கும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சென்றடைவதை இத்தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. இம்முன்னோடித் திட்டம் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் மதுரை ஆவின் பொதுமேலாளர் முத்துமாதவன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், அரசுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget