மேலும் அறிய

தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்

வலுவான இந்த எலி கிட்டிகள் விளை நிலங்களில் 4 அடிக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் வயலுக்கு ஏற்றார்போல் பல்வேறு அடுக்குகளாக நட்டு வைத்து இதனை சுற்றி எலிகளுக்கு பிடித்தமான அரிசி, பொரி தூவுகின்றனர்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ஒரு போக சம்பா சாகுபடியில் எலித் தொல்லை அதிகம் இருப்பதால் விவசாயிகள் எலி கிட்டி வைத்து பிடித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தில் நெல் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா குருவை தாளடி என முக்கோகம் நெல் சாகுபடி நடைபெறும். சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே பம்பு செட் உள்ளவர்கள் மட்டுமே சாகுபடியில் ஈடுபட்டனர்.


தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் 3.45 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு முன்வரவில்லை. ஒரு சில பகுதிகளில் ஒருபோக சம்பா சாகுபடி நடைபெற்று உள்ளது. போதிய அளவுக்கு மழை பெய்யாததால், சம்பா பயிர்களில் இலைசுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி தாக்குதல் பரவி வருகிறது. பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் உரம் தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் வகையிலும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சம்பா சாகுபடி பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் எலித் தொல்லையும் அதிகரித்துள்ளது. எலித் தொல்லை அதிகரிக்க பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக தற்போது மழை இல்லாததால் வயல்கள் காய்ந்த நிலையில் உள்ளது. இதனால் எலிகளுக்கு கொண்டாட்டம் ஆகி உள்ளது. முன்பு வயல்களில் தென்னை மட்டைகளை வெட்டி பறவைகள் அமரும் இருக்கைகளாக விவசாயிகள் வயலில் நட்டு வைப்பர். இதில் இரவு நேரத்தில் ஆந்தை உட்பட பல பறவைகள் அமர்ந்து எலிகளை உணவாக்கிக் கொள்ளும். தற்போது ஒரு சில விவசாயிகள் மட்டுமே பறவைகள் அமர வயல்களில் தென்னை மட்டைகளை நட்டு வைக்கின்றனர். மேலும் உரம், பூச்சி கொல்லி மருந்து போன்றவற்றால் பாம்புகளும் அதிகளவில் பலியானதால் எலிகள் பெருக்கம் அதிகரித்து விட்டது. இதனால் சாகுபடி வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை பிடிக்க கிட்டி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

செழிப்பாக பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வரும் நிலையில் எலித் தொல்லையால் அதிக சேதம் ஏற்படுகிறது. பயிர்களை எலிகள் துண்டித்து விடுவதால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எலித் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் கிட்டி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் எலி கிட்டிகளுக்கு பிற மாவட்டங்களிலும் அதிகளவில் மவுசு உள்ளது. இதனால் இந்த எலி கிட்டிகள் தயாரிப்பவர்கள் பிற மாவட்டங்களுக்கும் இதை விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். இன்று வேளாண் துறையில் எவ்வளவோ நவீன தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த நவீனத்தை விஞ்சும் அளவிற்கு உள்ளது. பழமையான தொழில்நுட்ப முறையான கிட்டி(பொறி) தான். தஞ்சாவூரில் மூங்கில் குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட கிட்டிகளை (பொறி) கொண்டு வயல்களில் எலிகளை பிடித்து அழிக்கப்படுகின்றன. இவ்வாறு வைக்கப்படும் கிட்டிகளில் அதிக எண்ணிக்கையில் எலிகள் சிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூங்கில் மரத்தின் மூலம் செய்யப்பட்ட முக்கோணம் வடிவிலான இந்த கிட்டியை எளிமையான முறையில் தயாரிக்கின்றனர். ஆனால் வலுவான இந்த எலி கிட்டிகள் விளை நிலங்களில் 4 அடிக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் வயலுக்கு ஏற்றார்போல் பல்வேறு அடுக்குகளாக நட்டு வைத்து இதனை சுற்றி எலிகளுக்கு பிடித்தமான அரிசி, பொரி ஆகியவற்றை தூவுகின்றனர். இரவு நேரத்தில் பயிர்களை சேதப்படுத்த வரும் எலிகள் அரிசியை தின்னும் போ  கிட்டியில் உள்ள பாதுகாப்பு வளையத்தில் சிக்கி கொள்கின்றன. இதனால் பயிர்கள் சேதத்தில் இருந்து தப்புகின்றன.

மின்சாரம் இல்லாத காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட இந்த கிட்டிகளுக்கு இன்றளவும் விவசாயிகள் மத்தியில் மவுசு குறையாமல் உள்ளது. பிடிக்கப்படும் எலிகளுக்கு தகுந்தார்போல் ரூ.10 முதல் எலி கிட்டிகள் வைப்பர்கள் வாங்குகின்றனர். தஞ்சை எலி கிட்டி தற்போது பல்வேறு மாவட்டகளிலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை விவசாயிகளே... உங்கள் குறைகளை நேரடியாகச் சொல்ல வாய்ப்பு! நவ.20-ல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
தஞ்சை விவசாயிகளே... உங்கள் குறைகளை நேரடியாகச் சொல்ல வாய்ப்பு! நவ.20-ல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: சிறப்பு முகாம்களில் பங்கேற்று பயனடைய அறிவுறுத்தல்
புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: சிறப்பு முகாம்களில் பங்கேற்று பயனடைய அறிவுறுத்தல்
நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?
நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget