மேலும் அறிய
Advertisement
அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் 6000 மூட்டை பருத்தி ரூ.2.30 கோடிக்கு ஏலம்
கடந்த வாரத்தை விட, பருத்தி விலை குறைந்ததால், விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர்.
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. இந்த வாரம் 6000 மூட்டை பருத்தி ரூ.2.30 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வந்த பருத்தி ஏலம், வரத்து குறைவால், கடந்த ஒரு மாதமாக நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது பருத்தி வரத்து அதிகரித்துள்ளதால், மீண்டும் பருத்தி ஏலம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பருத்தி வரத்து குறைந்ததால், 4 வாரங்களுக்கு பிறகு, முதல் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 1120 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் 5500 பருத்தி மூட்டை ரூ.2.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் பருத்தி குவிண்டால் ரூ.9,411 முதல் 11,890 வரையிலும், விற்பனயானது. மேலும் பருத்தி வரத்து மற்றும் விலை அதிகரித்து விற்பனையானது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் பருத்தி வரத்து மேலும் அதிகரித்தது. இந்த பருத்தி ஏலத்தில், அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1120 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 6000 பருத்தி மூட்டை ரூ.2.30 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் பருத்தி குவிண்டால் ரூ.8696 முதல் 10685 வரையிலும், விற்பனயானது. மேலும் கடந்த வாரத்தை விட, பருத்தி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து விற்பனையானது. கடந்த வாரம் 55000 மூட்டை பருத்தி ரூ.2.10கோடிக்கு ஏலம் போன நிலையில், இந்த வாரம் ரூ.20 இலட்சம் கூடுதலாக ஏலம் போனது. கடந்த வாரத்தை விட பருத்தி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து விற்பனையானது. மேலும் பருத்தி ஏலம் முடிந்தவுடன், அனைத்து விவசாயிகளுக்கு, பணம் வழங்கப்பட்டது. கடந்த வாரத்தை விட, பருத்தி விலை குறைந்ததால், விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர். அரூர் சுற்று வட்டார பகுதிகளில், பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால், இனி வரும் வாரங்களில் பருத்தி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் கூட்டுறவு விற்பனை கடன் சங்க அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
சேலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion