மேலும் அறிய

Cauvery Issue: காவிரி விவகாரம்; திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியில் கூட்ட அரங்கில் இருந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Cauvery Issue: காவிரி விவகாரம்; திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தமிழக முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். அப்போது தமிழக விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டுமென மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் எனவும், இந்த தீர்ப்பு வழங்கியும் கூட கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை தமிழக விவசாய சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும், குறிப்பாக 1996-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான குழுவில் தானும் பங்கேற்றேன் என்றும்,

Cauvery Issue: காவிரி விவகாரம்; திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதால் அன்றைய தினம் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும் சாதாரணமான விஷயமாக இருக்கும் எனவும், ஆனால் இன்றைய தினம் கர்நாடகாவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசுதான் தான் தோன்றித்தனமாக செயல்படுவது தமிழக விவசாயத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிப்பது போல இருக்கின்றது என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட ஐந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட மறுக்கக்கூடிய கர்நாடகா அரசின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்கிறோம் எனவும், இல்லை என்றால் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்த போவதாக  தெரிவித்தார். இது மட்டுமின்றி இன்றைக்கு நடைபெற்ற விவசாயிகள் மாதந்திர கூட்டத்தில் கூட கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தண்ணீரை உடனடியாக வழங்கவேண்டும் என்றும் இது குறித்து தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி தண்ணீரை உடனடியாக பெற்று தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V. K. Pandian:  Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
Embed widget