மேலும் அறிய
Advertisement
2 மாவட்ட விவசாயிகள் ஹேப்பி..! செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..! அடுத்த திட்டம் என்ன ?
ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள், சிலாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை.. மகிழ்ச்சியில் இரண்டு மாவட்ட விவசாயிகள்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. ஏரிகளை நம்பி ஏராளமான விவசாயிகள், பெயர் வைத்து வருகின்றனர். அதேபோன்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பல்வேறு, ஆறுகள் ஓடுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதான ஆறுகளாக, செய்யாறு மற்றும் பாலாறு இருந்து வருகிறது. இந்த இரண்டு ஆற்று நீரும், வீணாக கடலில் கடப்பதாக விவசாயிகள் பல ஆண்டுகளாக வேதனை தெரிவித்து வந்தனர். எனவே பாலாறு மற்றும் செய்யாறு பகுதிகளில் தடுப்பணை கட்டி நீரை சேகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலிருந்து உருவாகி, காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் என்ற பகுதியில் பாலாற்றில் கலக்கிறது.
செய்யாறு ( ஆறு )
இந்த நிலையில் செய்யாற்று அனுமந்தண்டலம் என்ற பகுதியில் ஏற்கனவே, தடுப்பணை உள்ளது. இந்த நிலையில் கூடுதல் தடுப்பணை எங்க கட்ட வேண்டும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மற்றொரு பிரதான ஆறாக பாலாறு உள்ளது. பாலாற்றிலும் பழைய சீவரம், ஈசூர், வயலூர் ஆகிய மூன்று இடங்களிலும் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டது.
பாலாற்றில் தடுப்பணை
கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சிலாம்பாக்கம் பகுதியில் உள்ள செய்யாற்றில் புதிய அணைக்கட்டு கட்ட அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து, தற்பொழுது தமிழக அரசு சார்பில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
இந்த சிலாம்பாக்கம் அணை கட்டுவதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் , உள்ள சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுக்கரை, மாகரல் ஆகிய கிராமங்களும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் அரச பாலை ஆகிய கிராமங்களில் உள்ள, 1516 ஏக்கர் மற்றும் வயலாத்தூர் கால்வாய் மூலம் நேரடி பாசனமாக 100 ஏக்கர் ஆக மொத்தம் 1623 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற உள்ளது. அதேபோன்று 132 கிணறுகளும் தடுப்பணை மூலமாக பயன்பெற உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்பொழுது துவங்கி நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தடுப்பணைகள் தொடர்ந்து கட்டப்பட்டு வருவதால் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
குறிப்பாக தடுப்பணை கட்டுப்பட்டு வருவதால் நீண்ட காலத்திற்கு சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், செய்யாற்றை போல பாலாற்றிலும் கூடுதல் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே அரசு அறிவித்த இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலாற்றில் விஷார், வெண்குடி, வெங்கடாபுரம் ஆகிய பகுதியின் விரைந்து தடுப்பணை கட்ட கோரிக்கை வைத்துள்ளனர். பாலாற்று தடுப்பணைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் உயரும், பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவது மட்டுமின்றி, எதிர்பாராத விதமாக வறட்சி ஏற்படும் பொழுது, நிலத்தடி நீர்மட்டம் உதவும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion