மேலும் அறிய

TVK Vijay | "ரொம்ப தப்பா போய்டும்கரூர் போங்க விஜய்!"கடுப்பான தவெக தொண்டர்கள்

கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று சந்திக்க இருந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026-ல் சட்டமன்ற தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையும் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை கரூருக்கே நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில் தான் அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தற்போது மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உயிரிழந்த குடும்பத்தில் இருந்து தலா 3 முதல் 4 பேரை பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூற விஜய் திட்டம் தீட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.  உயிரிழந்த குடும்பத்தினர் அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகே சந்திப்பதற்கான நேரம், தேதி இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக தவெக தரப்பு கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களை கரூரில் சந்திக்க தகுந்த இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக சொல்கின்றனர். அண்மையில் தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்தில் அழைத்து விஜய் சந்தித்து இருந்தார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூரில் அழைத்து ஆறுதல் சொல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் அப்படி ஒரு திட்டம் இருந்தால் தயவு செய்து அதை மாற்றிவிடுங்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது தான் சரியாக இருக்கும் என்றும் விஜய்க்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget