Pawan Kalyan On TVK Vijay | ’’காங்கிரஸ் WASTE!NDA-க்கு வாங்க விஜய்’’வலைவீசிய பவன் | Congress
காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் இழுத்து விட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் காய் நகர்த்தி வரும் சூழலில், 'அதெல்லாம் வேண்டாம் விஜய் நீங்க NDA கூட்டணிக்கு வாங்க’ என்று மீண்டும் விஜயிடம் கூட்டணி தூண்டிலை பவண்கல்யான் வீசியிருப்பாதாக தகவல் வெளியாகியுள்ளாது.
கரூர் பிரச்சனைக்கு பிறகு விஜய் அமைதியாக இருந்தாலும் தொடர்ந்து அரசியல் களம் தவெகவை சுற்றியே நகர்கிறது. குறிப்பாக கூட்டணி தொடர்பான விவகாரங்களிலும் விஜய் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது, இச்சூழலில் தான் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் அதிமுக-பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வரும் சூழலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் காய் நகர்த்தி வருகிறதாம் தேசிய ஜன நாயக கூட்டணி.
அந்த வகையில் திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் அதற்கு மாற்றான ஒரு கூட்டணி இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதிமுக - பாஜகவுடன் தவெகவும் இணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும்.
அப்படி இல்லை என்றால் வாக்குகள் சிதறி அது திமுகவின் வெற்றிக்கே உதவி செய்யும் என்பதால் விஜயை கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கரூர் விவகாரத்திற்கு பிறகு விஜய் நிலை குழைந்து நின்ற போது அதிமுக - பாஜக தான் விஜய்க்கு ஆதரவாக இரு ந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தவெக தலைவர் விஜயை தொடர்பு கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு விஜய் பிடி கொடுக்காமல் இரு ந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து சினிமாத்துறையில் இருந்த துணை முதல்வர் பதவியை அடைந்த பவன் கல்யாண் மூலம் கூட்டணி தூண்டிலை விஜயை நோக்கி வீச வைத்தனர் NDA மூத்த தலைவர்கள்.
இதனை தொடர்ந்து விஜயை பவன் கல்யாண் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும் அப்போது, சந்திர பாபு நாயுடுவிடம் ஆரமத்தில் தனக்கு முரண்பாடுகள் இருந்ததாகவும் , அதே நேரம் மீண்டும் ஆ ந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வ ந்து விட்டால் அது தனது கட்சிக்கும், தனக்கும் மிகப்பெரிய சிக்கலாம அமைந்து விடும் என்பதை உணர்ந்ததால் தான் சந்திரபாபு நாயுடுவிடம் கூட்டணி வைத்தேன், அதேபோல்,வெற்றியும் பெற்று தற்போது துணை முதல்வர் பதவியில் இருக்கிறேன். அதைப்போல் தான் நீங்களும்.
2026 தமிழ் நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது. நீங்கள் புதிதாக கட்சி ஆரம்பித்தவர். இந்த முறை நீங்கள் தனியாக போட்டியிட்டால் அல்லது வேறு ஒரு புதிய கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அது உங்கள் கட்சிக்கும் உங்களுக்கும் தான் ஆபத்தாக முடியும். அதனால், தேசிய ஜன நாயக கூட்டணியில் இணைந்தால் துணை முதலமைச்சர் பதவியும் உங்களுக்கு கிடைக்கும். அதேபோல், வரும் ஆண்டுகளில் உங்கள் கட்சியையும் நீங்கள் வலுபடுத்த முடியும்.
ஆனால் நீங்கள் வேறு எதாவது முடிவு எடுத்து அதி திமுக கூட்டணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்து விட்டால். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் கட்சியை காப்பாற்றுவதற்கே பல்வேறு சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். சினிமா துறையிலும் உங்களுக்கு பிரச்சனைகள் வரும் என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார் பவன்.
ஆனால் விஜயோ, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தால் தான் சரியாக இருக்கும் கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல் தேர்தலிலேயே ஸ்டைண்டை மாற்றிவிட்டதாக மக்கள் நினப்பார்களே என்று சொல்லி இருக்கிறார். அதே நேரம் பவன் கல்யாண் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியே வராது....அது நடப்பதற்கான வாய்ப்பு இல்லை.
ஆதலால் உங்களுக்கான ஆப்சன் NDA கூட்டணி தான் என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட விஜய் அரசியல் நகர்வுகளை பொறுத்து கூட்டணியை அறிவிப்பாதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.





















