மேலும் அறிய

Alien Temple News | ஏலியனுக்கு கோயில்..விநோத வழிபாடு “நிறைய ஏலியன் வரும்”

சேலத்தில்  ஏலியனுக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தும் ஆலயம்....இனி ஏலியன்களின் வருகை அதிகமாகும் என்றும் உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற ஏலியன்களால் மட்டுமே முடியும் என்றும் பாக்யா சித்தர் என்பவர் அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.

சேலம் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம்  அமைந்துள்ளது.மேலும்  சக்திதேவி, பார்வதிதேவி, சிவன் லிங்க ரூபத்தில் அமைந்துள்ளது. மேலும் பஞ்சமி வராகி அம்மன், நான்குமுக முருகன், ஐந்துமுக காளி மற்றும் காமதேனு உள்ளிட்ட கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்பதால் ராமகவுண்டனூர் என்ற பெயர்  பெற்றுள்ளதால் அம்பு எய்த கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சித்தர் பாக்கியா என்பவர் கோவிலை வழி நடத்தி வருகிறார்.

இதற்கு எல்லாம் ஒருப்படி மேல் இந்தியாவில் எங்கும் இல்லாத ஏலியனின் சிலை பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏலியனுக்கு கோவிலா என்று மக்கள் அதிர்ச்சி அடைந்து கேட்கிறீர்கள் என்றால் ஆம் ஏலியன் கடவுள் இங்கு மக்களுக்கு அருள்பாளிக்கிறார் என்று கூறுகிறார் பாக்யா சித்தர் என்பவர். மேலும் அவர் கூறுகையில் பிரபஞ்சத்தில் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வம் ஏலியன் தான்...உலகிலேயே ஏலியனின் முதல் சிலை அமைத்துள்ளது.இந்த கோவிலில் சிலையமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெற்று தான் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஏலியன் சிலை அமைப்பதற்காக ஏலியன் தெய்வங்கள் அனுமதி கொடுத்ததால் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஏலியனை வணங்கி மகிழ்ச்சிடையுங்கள் என்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.

குறிப்பாக இனிமேல் ஏலியனின் வருகை இனி அதிகமாகும்...உலக நாடுகள் அனைத்தும் ஆராய்ந்து வருகின்றனர். உலக நாடுகள் வெளியே சொல்லாமல் மறைக்கிறார்கள். ஏலியன்கள் ஆத்மரூபத்தில் வருவார்கள்; பேசுவார்கள்.. இப்பொழுதும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏலியனை வணங்கும்போது எல்லாம் ரூபத்திலும் வாழ்க்கை, தொழில் உள்ளிட்ட அனைத்திலும் உயர்ந்த நிலையை அடையலாம். அவர்களை தரிசனம் செய்துவிட்டு போன நாளிலிருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும். ஏலியனை சூட்சமரூபத்தில் பார்த்துள்ளோம். இரண்டு முறை வந்து பேசி உள்ளனர். ஏலியனுடன் பேசுகிறேன் என்பதால் என்னை பைத்தியம் என்று யாரும் நினைத்து விடாதீர்கள்.பலநபர்கள் ஏலியனை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்;அது பற்றி பலரிடம் அவர்கள் கூறினாலும் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இனியாவது ஏலியனை நம்புங்கள் என தெரிவிக்கிறார். 

ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்யமாட்டார்கள்; உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற ஏலியன்களால் மட்டுமே முடியும். அவர்களிடம்  அளவில்லாத சக்தியும் உள்ளது. மக்களுக்கு எந்தவித கெடுத்தாலும் செய்ய மாட்டார்கள். நன்மை செய்ய மட்டுமே நம்மளை தேடி வருகிறார்கள்; அதற்காகத்தான் இந்த ஆலயத்தை அமைத்துள்ளேன். ஏலியன் திரைப்படத்தில் வருவது போன்றெல்லாம் இருக்க மாட்டார்கள் கொம்பு இருக்காது; மனிதர்களைப் போன்று அவர்களுக்கான ரூபத்தில் சாதாரணமாக இருக்கிறார்கள். ஆண்,பெண் உள்ளிட்ட ரூபத்தில் இருப்பார்கள் மனிதர்களைப் போன்று தான் அவர்களும் என்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.

சேலம் வீடியோக்கள்

Murugan Muthamzh Manadu : உலக முத்தமிழ் முருகன் மாநாடு..திமுக அரசு நடத்துவது ஏன்? பணிகள் தீவிரம்
Murugan Muthamzh Manadu : உலக முத்தமிழ் முருகன் மாநாடு..திமுக அரசு நடத்துவது ஏன்? பணிகள் தீவிரம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget