மேலும் அறிய

Vijay Vikravandi Maanadu | விக்கிரவாண்டி ஏன்? சொதப்பிய விஜய்? கடுப்பில் நிர்வாகிகள்

தவெக மாநாடு விக்கிரவாண்டி நடத்த காரணம் என்ன?அடிப்படை சிந்தனையை புரந்தள்ளிவிட்டு விக்கிரவாண்டியை தேர்வு செய்துள்ளது தவெக தலைமை. அரசியல் கட்சி என்பது, கட்டி முடிக்கப்பட்ட வீட்டை ரிப்பன் வெட்டி திறப்பது போல் கிடையாது என்பதை விஜய் உணர வேண்டும். ஏனென்றால் ரசிகன் வேறு... தொண்டன் வேறு... மக்கள வேறு... என்று விஜய் புரிந்துகொள்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தனது  கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை எங்கு நடத்தப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. ஒரு அரசியல் கட்சி, தன் முதல் மாநில மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடும், அதே நேரத்தில் மிக முக்கியமாக தொண்டர்கள் ஒருநாள் பயணத்தில் மாநாட்டில் கலந்துக்கொண்டு விட்டு மீண்டும் ஊர் திரும்ப வசதியாகத்தான் மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்யப்படும். இதன் காரணமாகவே அரசியல் கட்சிகள் தங்களின் பெரும்பாலான மாநாடுகளை தமிழ்நாட்டின  மைய பகுதியான திருச்சி அல்லது மதுரையில் நடத்துவது வழக்கம். இந்த அடிப்படை சிந்தனையை புரந்தள்ளிவிட்டு விக்கிரவாண்டியை தேர்வு செய்துள்ளது தவெக தலைமை.

விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. மாநாட்டுக்கான அனுமதி கடிதத்தினை தவெக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் பெற்றுக்கொண்டார். அன்றிலிருந்து சரியாக மாநாட்டுக்கு 16 நாட்கள் இருந்தது. ஆனால் இன்றைய தேதிவரை வரை பணிகள் தொடங்கப்படவில்லை. மாநாட்டுக்கான அனுமதி மட்டும் அப்படியே உள்ளது.

தற்போது மாநாட்டு தேதியை அக்டோம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு தொடர்பான எந்த தகவலும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை தெரிவிப்பதில்லை, கட்சி தலைமை விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து விழுப்புரம் வருகிறோம் தயாராக இருங்கள் என மட்டும் தகவல் சொல்லப்படுகிறது, இடம், நேரம் தெரிவிக்கப்படுவதில்லை. நிர்வாகிகள் காலம், நேரம் தெரியாமல் காத்துக்கிடக்க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் விழுப்புரம் நகரத்திற்கு வந்துவிட்டு நிர்வாகிகளை அழைக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஊடகத்தினரின் நிலைமை இதைவிட மோசம். மாநாட்டு பணிகளில் அப்படி என்ன ரகசியம் என்று தான் புரியவில்லை. 

விஜய். (வி) V , தமிழக  V (வெ)ற்றிக் கழகம். (வி), V விக்கிரவாண்டி. (வி)., V வி.சாலை. (வி). இந்த நான்கு வி-யை தவிர விக்கிரவாண்டியில் மாநாட்டு நடத்த வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான எந்த முன் யோசனையும், முன் தயாரிப்பும் கட்சி தலைமையிடத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு மாநாட்டை நடத்த முதலில் குழு அமைத்து தொண்டர்கள் வந்து செல்ல வசதியான ஊர், மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டு முகப்பு எப்படி இருக்க வேண்டும், மேடையின் அளவு, எத்தனை லட்சம் தொண்டர்கள் வருவார்கள், தொண்டர்கள் அமரும் இடத்தின் பந்தல் அளவு, எத்தனை இருக்கைகள் போட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எவ்வளவு வாகனங்கள் வரும். அதனை நிறுத்துவதற்காக இடம். வாகனங்கள் நெரிசலின்றி வந்து செல்ல வழி. உணவு, கழிவறை என இந்த பட்டியல் இன்னும் நீளும். இப்படி இருக்கும்போது எந்தவித முறையான திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் செட் அமைப்பது போல் மாநாட்டை நடத்திவிடலாம் என விஜய் நினைத்துவிட்டதுப்போல தெரிகிறது.

எம்.ஜி.ஆர் அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் திரைத்துறையில் இருந்து எம்.ஜி.ஆர் நேராக அரசியல் கட்சி துவங்கவில்லை திமுகவில் இணைந்தார் அண்ணாவின் கொள்கையை ஏற்றுக்கொண்டார், அரசியல் அறிவு பெற்றார். இதையே விஜயகாந்தும் பின்பற்றினார் அதனால் அவருக்கும் மக்களிடம் செல்வாக்கு இருந்தது.இப்படியான எந்த உழைப்பும், அனுபவமும் இல்லாமல் விஜய் எப்படி வெகு மக்களிடம் சென்று சேறுவார்?. 

சாதி, மதங்களை கடந்து ஒரு அரசியல் கட்சி திராவிடம், தமிழ்தேசியம், கம்யூனிசம், இந்துத்துவம் போன்ற எந்த சித்தாந்தத்தை பின்பற்றுகிறது என கவனித்தே தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என்பதும், வெறுமனே மக்கள் நலன், லஞ்சம், ஊழல் ஒழிப்பு, அடிப்படை மாற்றம், தலைகீழ் மாற்றம் என்பன போன்ற பொதுவான காரணங்களை சொல்லி அரசியலுக்கு வரும் கட்சிகள் நிலைத்திருக்காது என்பது வரலாற்று உண்மை.

மக்களிடத்தில் சென்று, மக்களிடமிருந்து தலைவனாக மேலெழும்பி வர வேண்டுமே தவிர அரசியலை டியூஷன் சென்டரில் படித்துவிட்டு வருவதும், அரசியல் கட்சி என்பது, கட்டி முடிக்கப்பட்ட வீட்டை ரிப்பன் வெட்டி திறப்பது போல் கிடையாது என்பதை விஜய் உணர வேண்டும். ஏனென்றால் ரசிகன் வேறு... தொண்டன் வேறு... மக்கள வேறு.

அரசியல் வீடியோக்கள்

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT
Senthil Balaji on Adani Issue |”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget